சனி, 20 ஆகஸ்ட், 2016

மரணத்தை வெல்லும் வழி !


மரணத்தை வெல்லும் வழி !

 மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய ,

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
 ஞானத்தில் ஞானம்

என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் .

முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது

"ஞானத்தில ஞானம்"  என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் .

ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கத்தைக் குறிப்பதாகும் .முன் சொன்ன இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் என்னும் உண்மை ஒழுக்கத்தை வள்ளலார் சொல்லியுள்ளபடி கடைபிடித்தால் மட்டுமே ஆன்ம ஒழுக்கத்திற்கு செல்ல முடியும் .ஆன்மாவை காண முடியும் .

வள்ளலார் சொல்லி உள்ள ஆன்ம ஒழுக்கம் !

 கடவுளால் அனுமதிப பெற்று மாயையால்  படைக்கப்பட்ட ,யானை முதல்  எறும்பு ஈறாகத் தோன்றிய சரீரங்களில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச்சபையாகவும் ,அதனுள் பரமான்வே பதியாகவும் கொண்டு யாதும் நீக்கமற ,எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் .ஆன்ம ஒழுக்கம் என்று சொல்லுகின்றார் .

இவைதான் மனிதனின் சாகாக்கல்வியின் இறுதி படிப்பு .இந்த  தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே .மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைக்கும் .

முதல் மூன்று தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே . இறுதி தேர்விற்கு வரமுடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

முதல் மூன்று தேர்வு என்பது !

 ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கம் ,ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் ,ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கம் என்தாகும் ,இதில் மிகவும் முக்கியமானது ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழக்கம்  எனபவையாகும் .

இந்ந இரண்டு ஒழக்கங்களையும் முழுமையாக  கடைபிடித்தால் மேலே கண்ட ஜீவ ஒழுக்கமும் ,ஆன்ம ஒழுக்கமும  அருட் பெரும்ஜோதி ஆண்டவர் வந்து சொல்லிக் கொடுப்பார் .

வள்ளலார் பேருபதேசத்தில் இறுதியாக சொல்லி உள்ளதை நன்கு கவனிக்க வேண்டும் .

 இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள .

 உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரப்போகின்றார் ஆதலால் நான் சொல்லிய வண்ணம் உண்மை ஒழுக்கத்துடன் நல்ல  விசாரணையில இருங்கள் என்கிறார் .

இவ்விசாரணையில் இருந்தால் நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக்கொண்டு இருக்கின்ற அனந்தத்  திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரை நீங்கி விடும் அது நீங்கினால் மற்ற திரைகள் அதிக விரைவில் நீங்கி விடும் என்கிறார் .

அந்த விசாரம் என்னவெனில் :--

ஆண்டவரை தோத்திம் செய்கின்றதிலும் ,தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக சுத்த உஷ்ணம் உண்டாகும் .

யோகிகள் வனம் ,மலை, குகை முதலிய இடங்களில்  போய் நூறு ஆயிரம் முதலிய வருஷகாலம் "தவம்" செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் .

இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகின்றதை பார்க்கிலும் , தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும் .நினைக்கின்றதிலும் அதைவிடக் . . . . கோடி கோடி பங்கு அதிகமான சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கிறார் .

எனவே இந்திரிய ஒழக்கத்தாலும் கரண ஒழுக்கத்தாலும் .சுத்த தேகம் பெற்று இம்மை இன்ப வாழவு வாழலாம் .அதற்கு ஞான சரியை ,ஞான கிரியை என்று பெயர் .

அடுத்த ஜீவ  ஒழுக்கத்தால்  சாதி சமயம் மதம் இனம் நாடு போன்ற பேதம்  அற்று எல்லா மனித ஜீவர்களையும் தம் உயிர் போல் நேசிக்க வேண்டும் .அதுவே ஞான யோகம் என்பதாகும் .

அதனால் கிடைக்ககூடிய லாபம் பிரணவ தேகம் . மறுமை இன்ப லாபம் . மறுமை இன்ப வாழ்வு , .அதுவே ஞானம் யோகம்  என்பதாகும் .

இந்த  மூன்று ஒழுக்கங்களும் ,இரண்டு லாபங்களும் முழுமை அடைந்தால் மட்டுமே ஆன்ம லாபம் என்னும் பூரண அருள் கிடைக்கும் ,

  பூரண அருள் கிடைத்தால் மட்டுமே உண்மைக் கடவுள் யார் ? என்பது தெரியும் . அதற்கு அருள் அறிவு என்று பெயர் .ஞானத்தில் ஞானம் என்பதாகும் .ஆன்ம ஒழுக்கம் என்பதாகும் .

அப்போது தான் எல்லா ஜீவராசிகளிலும் உள் ஒளியாக (ஆன்மா) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து செயல் படுகிறார எனபதை நேருக்கு நேர் காண முடியும் . மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைக்கும் .

எனவே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் ,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் என்கிறார் .

அவற்றைததான் :--

சாகாக்கல்வி
தத்துவ நிக்கிரகம் செய்தல்
ஏம சித்தி
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்

என்னும் நான்கு சுத்த சன்மார்க்க பயிற்சியைக் காட்டிக் கொடுத்து உள்ளார் .

இதுவே  ஆன்ம ஒழுக்கம் என்னும் ஞானத்தில் ஞானம் எனபதாகும் . பேர் அறிவு .அருள் அறிவு ன்பதாகும் .

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !
என்றும் . . .

அருளாலே அருள் இறை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நடம் இன்பம் என்று அறியாயோ மகளே !

என்று உண்மை அறிவு .அனுபவம் ,அருள் .அருள் நடனம்  என்பதை எல்லாம் தெளிவாக சந்தேகம் இல்லாமல் விளக்கம் தந்து உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு அடிப்படையானது ஜீவ காருண்யம் அடுத்ததுதான் சத்விசாரம் .இந்த இரண்டு வழிகளை இடைவிடாமல் பின் பற்ற வேண்டும் .

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு ! என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .

அருளைப் பெறுவதுதான் சுத்த சன்மார்க்கம் !

அருள் நெறி ஒன்றே தெருணெறி மற்று எல்லாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமன் ஆகுக ஒங்குக !

இறை அருளைப் பெற ஒரே மார்க்கம் .வள்ளலார்  தோற்றுவித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் " என்ற மார்க்கம் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

இன்னும் விரிக்கில் பெறுகும்

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .













1 கருத்துகள்:

2 ஏப்ரல், 2019 அன்று PM 8:49 க்கு, Blogger Unknown கூறியது…

நன்றி ஐயா

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு