வியாழன், 10 டிசம்பர், 2015

இறைவன் ஒருவரே உயர்ந்தவர் !

இறைவன் ஒருவரே உயர்ந்தவர் !

அந்த இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பவராகும்.அவர் மனிதர் அல்ல ..அவர் அருள் ஒளியாக உள்ளார் .

வேதங்களிலும்,ஆகமங்களிலும்,புராணங்களிலும்,இதிகாசங்களிலும்,சொல்லிய கடவுள் உண்மையானக் கடவுள்கள் அல்ல !

உலகில் உள்ள எல்லா மதங்களையும் வேதங்களையும் விட இறைவனே உயர்ந்தவர்

தனது பெயருக்கு பின்னால் உள்ள சாதி,சமயம், மதம் போன்ற சடங்குகளை  கூட துறக்க முடியதவர்களா மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை எல்லாம் துறந்து என்ன சாதிக்கப் போகின்றார்கள், 

பொருள் தன்மை உள்ள கடவுளை போற்றி வழிபடுவதால் என்ன உணர போகிறார்கள்

எவ்வளவு வேதங்கள், உபநிடங்கள், கீதை பற்றி பக்கம் பக்கமாக எழுதி விடுவதால் மட்டுமே ஒருவர் இறைவனை நெருங்கி விட முடியாது

கண்ணப்பர் காலத்தில் இருந்தே இந்நிலை அப்படி தான் இருக்கிறது

தனக்கு தினமும் பூஜைகளை வழுவாமல் செய்து வரும் கோவில் குருக்களுக்கு காட்சி தராமல் மாமிச உணவை படைத்த போதிலும் இறைவனின் மீது தயவு கொண்டு தனது கண்ணையே கொடுத்த கண்ணப்பருக்குதான் இறைவன் காட்சி தந்தார் என்று சொல்லுவதும் கதைகள்தான் .

இதுபோல் எத்தனைக் கதைகளை மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.

கடவுளிடம் அருளைப் பெறுவதற்கு எது தேவை ?

இறைவனிடம் அன்பும் ,உயிர்களிடம் இரக்கமும்,போன்ற ஜீவ காருணயம் ஒன்றாலே கடவுளின் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த வழியாலும் பெறமுடியாது  என்று வள்ளல் பெருமகனார் மிகத் தெளிவாக சொல்லி உள்ளார் .

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார்.

இறைவனிடம் அருளைப் பெறுவதற்கு வேதம் ,ஆகமம், புராணம்,இதிகாசம், சாத்திரங்கள்  சொல்லிய சங்கற்ப ,விகற்ப,சடங்குகள் எதுவும் தேவை இல்லை என்கின்றார் வள்ளலார் .

 மேலும்;--
இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார்.அதற்கு காரணம் இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் தான் இது .
ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.என்கின்றார் .
மேலும் இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை..
நான் பாடிய பாடல்களோ,? நான் வணங்கிய தெய்வங்களோ  ? நான் பின் பற்றிய சமய மதங்களோ ?என்னைத் மேலே தூக்கி விடவில்லை.
எல்லா உயிர்களிலும் ,உடம்புகளிலும் இறைவன் இருக்கின்றார் என்னும் உண்மையை அறிவால் அறிந்து கொண்டு உண்மை ஒழுக்க நெறியான சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து ,மெய்ப் பொருள் எது என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.

மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெரு நெறி ஒழுக்கம் யாதெனில் .''கருணையும்,விவமே பொருள் எனக் காணும் காட்சியும்;; அறிந்தேன் என்கின்றதுதான் என்னை ஏறா நிலை மிசை ஏற்றி விட்டது என்கின்றார்.

அது எதுவெனில் .அன்பு,தயவு,கருணை .என்பதாகும் மேலும் தயவு என்னும் கருணைதான் என்னை மேலே ஏற்றி விட்டது என்கின்றார்.

அன்பு,தயவு,கருணை என்கின்ற மூன்றும்,ஒன்றோடு ஒன்று இணைகின்றபோது அருள் என்பது தடை இல்லாமல் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த அருள்தான் உடம்பையும் ,உயிரையும்,மாற்றும் ஆற்றல் உடையது .

அன்பு,தயவு,கருணை உடையவர்களை எவ்வித ஆபத்துகளும் நெருங்காது..துர்மரணங்களும் நெருங்காது.,இயற்கை சீற்றங்களால் மேலும் ஐந்து பஞ்ச பூதங்களாலும் அழிவு உண்டாகாது .

இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடைவிடாது நம்மை பாதுகாத்துக் கொண்டே இருப்பார்.

அந்த உண்மையான இறைக்  காட்சியைப் பெறுவதற்கு தடையாக இருப்பது சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளின் நம்பிக்கைதான்.

நம்மை படைத்த இறைவன் நமது உண்மையான தந்தை நம்மிடம் மிக அருகில்,நம் உடம்பில் இயற்கை உண்மையாக ,இயற்கை விளக்கமாக ,இயற்கை இன்பமாக அமர்ந்து இயக்கிக் கொண்டு உள்ளார். 
கருணையுடன் நம்முடைய சிரசின் நடுவிலே ஒளியாக அமர்ந்து இயக்கிக் கொண்டு உள்ளார்.அதுதான் இயற்கை உண்மை யான ஆன்ம ஒளி ...இயற்கை விளக்கமான உயிர்,..இயற்கை இன்பமான உடம்பு என்பதாகும்.

,இயற்கை உண்மையாக இயற்கை விளக்கமாக ,இயற்கை இன்பமாக இருக்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனை... நாம் வெளியே உள்ள வேதங்களிலும், ஆலமங்களிலும்,புராணங்களிலும்,இதிகாசங்களிலும், சாஸ்திர சம்பிர்தாயங்களில் தேடி கொண்டு இருக்கின்றோ,/

இறைவன் கொடுத்த இந்த பிறவியை,இறைவன் குடி இருக்கும் வீடு என்னும்(உடம்பை ) ஆலயத்தை வீண் செய்து விடுகின்றோம் என உலக மனித இனத்தினை எண்ணி எண்ணி வள்ளல் பெருமகனார் வேதனை படுகின்றார்கள்.
*மனிதனை மனிதனாகவும் சக உயிரினங்களை உயிரனங்களாக பார்க்க தெரியாமல் சாதி மத சமய போர்வை கொண்டு செயற்கையாக பார்க்கும் மனிதர்களின் பகுத்தறிவு கொண்டு எப்படி இறைக்கை உண்மையாக,இயற்கை விளக்கமாக  உள்ள இறைவனை அடைய முடியும்
*எனவேதான் சாதி மதம் சமயங்கள் சாஸ்திர சம்பிர்தாயங்கள் எல்லாம் இனி பொய்யாக போய்விடும்.என்றும் அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து விடுவேன்  என்றும் வள்ளல் பெருமகனார் கூறுகின்றார்கள்.

வள்ளல் பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

வேதங்கள் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் 
வேதாகமத்தின் விளைவு அறியீர் --சுதாகச்
சொன்னதலால் உண்மை வெளி தோன்ற உரைத்தலிலே 
என்ன பயனோ இவை ...

என்கின்றார் வள்ளல்பெருமான்.

அதன் வழியாக இறைவனை அடைய முற்பட்டால் இந்த ஒருபிறவி மட்டும் இல்லை பல நூறு பிறவி கூட ஆகலாம் இறைவனை அடைய என்று எச்சரிக்கை செய்கிறார்கள்

அடுத்த பிறவியும் நமக்கு இந்த உயர்ந்த மனித பிறவி தான் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் கிடையாது மிருகங்களாகவோ தாவரங்களாகவோ நமது ஊழ் வினையின் அடிப்படையில் கிடைக்கலாம்

எனவே சாதி,சமய,மதம் என்னும் மாயை,கன்மம்,வசப்  பட்டு சாதி மத சமயங்களில் முழுகி இறைவனை அடைய முடியாமல் தவிக்கின்ற அனைவரும் அவர்களால் தவறாக வழி நடத்தப்படும் அனைவரையும் அருள்பெரும்ஜோதி ஆண்டவர் தனது அருளால் நிரப்பி அவர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்க வழியில் வந்து எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து கொள்ள அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்

பெறுவதற்கு அரிய இந்த மானிட பிறவியில் பிறந்தவர் இந்த பிறவிலேயே இறைவனை அடைய வில்லை எனில் அவன் வீணில் பிறந்தவர்ரே ஆவர்.

இனி சாதி,சமய,மதங்களை பின் பற்றி வாழாமல் வள்ளல்பெருமான் சொல்லிய வழிகாட்டிய சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி வாழ்வோம் வளம் பெறுவோம்.

எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதி ,பரம் பொருள் அருட்பெருஞ்ஜோதி ஒருவரே ! அவர் நம்முடனே இருக்கின்றார் .அவரை தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு