வெள்ளி, 11 டிசம்பர், 2015

மக்களின் மன மாற்றங்கள் ! யார் ஆட்சியில் அமர்வது !

மக்களின் மன மாற்றங்கள் ! யார் ஆட்சியில் அமர்வது !

தமிழகத்தில் நிரந்தர முதல்வர் ஜெயலலிதா தான் என்று அ,இ,அ ,தி,மூ,க,வினர் ஜெயலலிதாவின் ஆணைப்படி மக்கள் மனதிலே விதையை விதைத்து விட்டார்கள் .

அ,இ,அ,தி,மூ,க,வுக்கு அதிகமாக ஒட்டு போடுபவர்கள் ஏழை எளிய அப்பாவி மக்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை எம்,ஜி,ஆரின் மாய வலையில் சிக்கவைத்து இது வரையில் ஆட்சியில் அமர்ந்து உள்ளார்கள்.

அதற்குத் தகுந்தாற்போல் எதிர் கட்சிகளும் சிதறிப் போய் வலுவு இழந்து உள்ளது .அதைப் பயன்படுத்தியும் அடுத்த தேர்தலில் மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிடுவார்கள் .நாம்தான் ஆட்சியில் அமரப்போகிறோம் என்கின்ற ஆணவத்தில் இருந்தார்கள்.

இயற்கையின் செயல்பாடு !

சட்டத்தை நீதியை ஏமாற்றலாம்,மக்களை ஏமாற்றி விடலாம் இயற்கையை எவராலும் ஏமாற்ற முடியாது.என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

ஜெயலிதாவை மாற்ற வேண்டுமானால் இயற்கையால் தான் முடியும் என்பதை இயற்கை சீற்றம் மக்களுக்கு சுட்டிக் காட்டி உள்ளது.

தமிழகத்தின் பெரு மழையால்,பெரு வெள்ளப் பெருக்கால் மக்கள் வீடு இழந்து,பொருள்களை இழந்து ,உயிர்களை இழந்து ,உற்றார் உறவினர்களை இழந்து,உணவு இல்லாமல்,உடை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தண்ணீரில் மிதந்து கொண்டு ,பசி பட்டினி ,வறுமை என்று தமிழகமே கண்ணீர் சிந்தி ஓலமிட்டுக் கொண்டு அவதியுறும் காட்சிகள் கண்களை விட்டு அகலாமல் உள்ளது.

பார்ப்பவர் நெஞ்சங்கள் பதறுகின்றது.கள் நெஞ்சங்களையும் கரைய வைத்துள்ளது.அவற்றைப் பார்த்து கண்ணீர் விடாத மக்களே இல்லை என்று சொல்லலாம்.

கருணை உள்ள உள்ளங்கள் தன்னலம் கருதாது பல வழிகளிலும் ,முறைகளையும்,துறைகளிலும் மக்களைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளார்கள்.காப்பாற்றிக் கொண்டும் வருகிறார்கள்.

பொது மக்கள் .நிறுவனங்கள்.தொண்டு நிறுவனங்கள்,வெளி மாநிலங்கள்,வெளி நாடுகள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களும் கருணை உள்ளங்களும் .மக்களுக்கு பொருளாகவும்,பணமாகவும் வாரி வழங்கிக் கொண்டு உள்ளார்கள்.

தமிழக ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும் மந்திரிகளும்,சட்டசபை  உறுப்பினர்களும் வட்டம்,மாவட்டம் போன்ற அ,இ,அ,தி,மூ,க,அன்பர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியிலே கேள்விக் குறியாக உள்ளது.

மக்கள் கொடுக்கின்ற பொருள்களை வாங்கி தாங்கள் கொடுப்பது போல் விளம்பரம் செய்து கொண்டு உள்ளார்கள் என்பது ஓட்டுப்போடும் மக்களுக்குத் தெளிவாக புரிந்து விட்டது.

பல லட்சம் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது.விவிசாயிகளின் விலை நிலங்கள் எல்லாம் பயிர்கள் அழிந்து தண்ணீருடன் மண் முடிக் கொண்டது.

விவசாயிகளுக்கும்,அனைத்தையும்  இழந்து தவிக்கும்  மக்களுக்கும் இந்த அரசு என்னச் செய்யப்போகின்றது என்ற கேள்விக் கணைகள் மக்கள் மனத்திலே வேர் ஊன்றி விட்டது.

மக்களைக் காப்பாற்றும் அரசின் மெத்தனப் போக்கு மக்களுக்கு புரிந்து விட்டது.

அ,இ,அ,தி,மூ,க,அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் .

யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவப் போக்கை இயற்கை அழித்து விட்டது.

அடுத்த தேர்தலில் யாரை ஆட்சி பீடத்தில் அமர்த்துவது என்பதை ஓட்டுப்போடும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மக்களே நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் .யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் உங்கள் கையில்தான் உள்ளது .

மக்களுக்காக ஆட்சி இருக்க வேண்டும்,ஆட்சிக்காக மக்கள் இருக்கக் கூடாது.

இயற்கை மாற்றி உள்ளது .நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது .

வள்ளல்பெருமான் சொல்லுவார் ;--

இது நல்ல தருணம் --அருள் செய்ய
இது நல்ல தருணம்

பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே சொல்கின்றேன் /

மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருண ஆச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மற்ற புலையும் அழிந்த்து.

குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
கொதித்த மன குரங்கும் முடங்கிற்று
வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தை செய் கொடு மாயை சந்தையுங் கலைந்தது

கோபமும் காமமும் குடிக் கேட்டுப் போயிற்று
கொடிய ஓர் அகங்காரம் பொடிப் பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான் தானே சென்றது
தத்துவம் எல்லாம் எந்தன் வசம் நின்றது

கரையா எனது மனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கு  என் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பி மேற் பொங்கிற்று

இது நல்ல தருணம் அருள் செய்ய
இது நல்ல தருணம் அருள் செய்ய !

என வள்ளல்பெருமான தெளிவாக சொல்லி உள்ளார் .நல்ல தருணம் வரும்போது அதை மக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது ;--

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக
எல்லோரும் வாழ்க இசைந்து .

மக்கள்மேல் அன்பும்,தயவும் .கருணையும் உள்ள நல்ல குணமுடையவர்கள் தான் நாட்டை அட்சி செய்ய வேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு