செவ்வாய், 15 டிசம்பர், 2015

தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதி எவரிடமும் இல்லை,!

தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதி எவரிடமும் இல்லை,!

தமிழகத்தை முறையாக, சரியாக, சுய நலம் இல்லாமல் ஆட்சி செய்யும் தகுதி எந்த அரசியல் கட்சிகளுக்கும் கிடையாது.

மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் ,அறிவு தெளிவு இல்லாத,எந்த முட்டாள்களைத் தேர்வு செய்யப் போகிறாகள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்,

தமிழக மக்களை இன்னும் பத்து ஆண்டுகள் காப்பாற்றுவது கடினம் .

அதற்குமேல்தான் வருங்கால மக்கள் நாட்டையும் நாட்டைக் காப்பாற்றும் தகுதி உடையவர்களையும் அறிந்து தெரிந்து அறிவுடன் தேர்வு செய்வார்கள். அதுவரையில் மக்கள் சிரமப் பட்டுத்தான் ஆக வேண்டும்.

இப்போது நாட்டில் அரசியல் விஷக் கிருமிகள் அதிகம் பரவி விட்டது.கொள்கைகள் இல்லாத அரசியல் கட்சிகளும்,அரசியல் கட்சி தலைவர்களும்,கொள்ளை அடிக்கும் குணம் உள்ளவர்களும் அதிகமாக  வேர் ஊன்றி உள்ளார்கள் .

சாதாரண வட்டம் ,மாவட்டம்,மற்றும் மாவட்ட பிரதி  நிதிகள்,மந்திரிகள்,அனைவருமே கொள்ளை அடிக்கும் வல்லமை உள்ளவர்களாக மாறி விட்டார்கள்,

அவர்களுக்கு உடந்தையாக அதிகாரிகளும் அப்படியே உள்ளார்கள்.நல்லவர்கள் ஒரு சிலர் இருந்தால் அவர்களுக்கு சொல்லவொணாத்  துன்பங்களைக் கொடுத்து வெளியேற்றி விடுகின்றார்கள்,

அவர்களுக்கு அடிப்படையான அறிவே இல்லை,எப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றப் போகின்றார்கள்,

அரசியல் நடத்துவதற்கு ஆட்சியில் அமர்வதற்கு படிப்பும் பட்டமும் தேவை இல்லை,கட்சியும் தேவை இல்லை.

மக்களின்மேல் அன்பு,தயவு,கருணை, அறிவு, எதிலும்,பொது நோக்கம்,சுயநலம் இல்லாமை, சாதி,சமயம்,மதம் போன்ற பற்றுதல்கள் இல்லாமை, தனக்கு என்று வாழாமல் மக்களுக்காக வாழும் தகுதி உடையவர் எவரோ அவரே நாட்டை ஆளும் தகுதி உடையவர்.

அப்படிப் பட்ட நேர்மையானவர் மக்களுக்கு எப்போது கிடைப்பார் என்று மக்கள் எதிர்ப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.

இப்போது படித்து விபரம் தெரிந்தவர்களை விட ,பாமர மக்களிடம் தான் ஒட்டு வங்கிகள் அதிகம் உள்ளன,

பாமர மக்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்.,தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போட்டு விடுவார்கள்.என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் .மக்களாய் பார்த்து திருந்தா விட்டால் அரசியல் கட்சிகளை ஒழிக்க முடியாது.

இப்போது திருந்துவது திறித்திக் கொள்வது,அரசியல் கட்சிகள் அல்ல ,..மக்கள்தான்,.மக்கள் திருந்தினால் தான் மட்டுமே நாட்டில் நல்லாட்சி மலரும்.மக்கள் துன்பம் இல்லாமல் நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ,உங்களுக்கு நீங்கள்தான் நீதிபதி ,நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இது சுதந்திர நாடு,..இது ஜனநாயக நாடு, ..இது குடி அரசு நாடு ,..உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

பண்ணாத தீமைகள் பண்ணு கின்றீரே
பகராத வன்மொழி பகரு கின்றீரே
நண்ணாத தீயினம் நண்ணு கின்றீரே
நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்து அதனை நினைந்தே
கண்ணார நீர் விட்டுக் கருத அறியீரே
எண்ணாத எண்ணவும் நேரும் மோர் காலம்
எத்துணைக் கோள் கின்றீர் பித்து உலகீரே !

யாரும் நினைத்துப் பார்க்க முடியாத தீமைகள் செய்கின்றீர்கள்,சொல்லமுடியாத பொய்களை சொல்லி மக்களை ஏமாற்று கின்றீர்கள்,கண்போன்று மக்களைக் காப்பாற்ற வேண்டியதை விட்டு ,மக்கள் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு தீமைகள் செய் கின்றீர்கள்,

எல்லா வற்றுக்கும் ஒரு காலம் வரும் அப்போது  உங்களுக்கு வரும் துன்பங்களில் இருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாமல் பைத்தியக் காரர்கள் போல் அலைந்து கொண்டு இருப்பீர்கள் என்கின்றார் வள்ளலார்.

மக்களே நல்லது செய்யுங்கள் நலமுடன் வாழ்வீர்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
sell ..9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு