செவ்வாய், 22 டிசம்பர், 2015

மனிதன் உயர்ந்த அறிவு உள்ளவன் என்பதற்கு ஒரே ஒரு சாட்சி.!

மனிதன் உயர்ந்த அறிவு உள்ளவன் என்பதற்கு ஒரே ஒரு சாட்சி.!

உலகில் இறைவன் படைத்த தாவரம் முதல் எல்லா உயிர்களின் உடம்பில் உள்ள தோலை உரித்து எடுத்துவிடலாம் .

ஆனால் மனிதனின் உடம்பில் உள்ள தோலை தனியாக பிரித்து எடுத்துவிட முடியாது.ஏன் ?

மனிதனின் உடம்பும் உயிரும் அதில் உள்ள பொருள்கள் அனைத்தும் பின்னப்படாமல் ,மரணம் அடையாமல், ஒளியாக மாற்றம் அடையவேண்டும் .என்பதற்காக இறைவன் மனித தேகத்தைப் படைத்துள்ளான்.

உடம்பில் உள்ள ஒரு முடியை கூட வேரோடு பிடுங்கி  விட்டாலும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்காது.

எனவே தான் வள்ளலார் உடம்பை அலட்சியம் செய்யாமல் பொன்போல் பாதுகாக்க வேண்டும் என்கின்றார்.

உயர்ந்த அறிவு விளங்கிய மனிதர்கள் முதலில் உடம்பை பாதுகாக்க வேண்டும்,உடம்பை பாது காத்துக் கொண்டால்தான் உயிரைப் பாதுகாக்க முடியும்,

உடம்பையும் உயிரையும் வள்ளல்பெருமான் சொல்லியவாறு பாதுகாத்துக் கொண்டு வாழ்ந்தால் .ஆன்மா உடம்பை விட்டு பிரியாது.

ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க வேண்டும் என்றால் உடம்பு பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

உடம்பிற்குள் கண்ட கண்ட குப்பைகளைக் கொட்டாமல் சுத்த உடம்பாக வைத்திருக்க வேண்டும்.

உடம்பு அசுத்தம் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தால்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நாம் கேட்காமலே அருள் வழங்க வழி செய்வார் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்.

மருநெறி சேர் மல உடம்பை அழியாத விமல
வடிவாக்கி

எல்லாஞ் செய் வல்ல சித்தாம் பொருளைத்

தருணமது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த

தயா நிதியே எனை யீன்ற தந்தையை  என் தாயைப்

பொருண் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்

புகல் அரிதாஞ் சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக்

கருணை அருட் பெருஞ்ஜோதிக கடவுளை என் கண்ணால்

கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே !

வள்ளல்பெருமான் தன்னுடைய உடம்பையும் உயிரையும்  எப்படிப் பாதுகாத்தார் .அவருக்கு இறைவன் அருள் எப்படி வழங்கினார் என்பதை நாம் புரிந்து கொண்டால் ,அருள் பெரும் வழியை நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் எதை எதையோ செய்துகொண்டு அருள் வழங்க வேண்டும் என்றும் ,அருள் கிடைக்கும் என்றும் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் ,அருள் நிச்சயம் கிடைக்காது .

சுத்த சன்மார்க்கிகள் தவறான பாதையில் செல்லாமல்,வழி இது,..முறை இது,..துறை இது,..நீ செய்யும் துணிவு இது ..என்பதை அறிந்து வள்ளலார் சொல்லிய பாதையை விட்டு விலகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாண நான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என் தோழி நீ என்னோடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க
ஜோதி என்று ஓதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து !

இறைவனால் படைக்கப் பட்ட ''சுத்த சன்மார்க்கம்'' என்ற வீதியை விட்டு ,வேறு வழிகளில் சென்றால் என்னவரும் ? நிச்சயம் மரணம் வரும்.

இதுவரையில் வள்ளலார் வழியில் பின்பற்றி வாழ்பவர்கள் மரணம் இல்லாமல் வாழ்ந்து
உள்ளார்களா ? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றோம்.

பதில் சொல்லத் தெரியாதற்குக் காரணம் ...எவரும் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கக் கொள்கையின் படி வாழவில்லை .என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மரணம் வராமல் இருக்க வேண்டும் என்றால் நாம் வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் வாழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அபுடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு