திங்கள், 14 டிசம்பர், 2015

பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் !

பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் !

மக்காத பிளாஸ்டிக் பைகள் மக்கள் பயன் படுத்த கூடாது என்று அரசும் அதிர்காரிகளும் சொல்லிக் கொண்டு உள்ளார்கள்

கொஞ்சமாவது அறிவு இருந்தால் இப்படி சொல்லுவார்களா !

மக்கள் எப்படி பயன் படுத்துகிறார்கள் பை கிடைத்தால் தானே பயன் படுத்துவார்கள் .பைகள் மக்களுக்கு கிடைக்காமல் இருக்க இருக்க என்ன நடவடிக்கைகள் அரசும் அதிகாரிகளும் செய்து இருக்கின்றார்கள்.

மக்காத பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூட வ்ண்டியதுதானே .அதனுடைய லைசென்சை ரத்துசெய்ய வேண்டியதுதானே .

பைகள் தயாரிக்கும் கம்பெனிகள் இடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்குவார்களாம் அவர்கள் தயாரிப்பார்களாம் .மக்கள் வாங்கக் கூடாதாம் இது என்ன நியாயம் ?

எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கி விடும் என்பது தெரியாதா ?.

அறிவுள்ள ஜீவிகளே முதலில் தயாரிப்பதை தடை செய்யுங்கள் .மக்கள் பயன் படுத்துவது தானே நின்று விடும் .

மேலும் குடிப்பது உயிருக்கு ஆபத்து என்றும் ,குடி குடியைக் கெடுக்கும் என்றும்  மது பானங்களின் பாட்டில் மேல் எழுதி ஒட்டி உள்ளீர்கள் .

அறிவுள்ள ஆட்சியாளர்கள் அதிகாரிகள் எப்படி நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்றே தெரியவில்லை.

மது பானங்களை தாயரித்து அரசே விற்பனை செய்துவிட்டு மக்களை குடிக்காதீர்கள் என்றால் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்னதான் அறிவு இருக்கு என்பதே தெரியவில்லை .

மதுவினால் அரசுக்கு அதிக அளவு பணம் வருகிறது என்று மக்களை அழித்து அதனால் வரும் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்சி செய்வது எந்த விதத்தில் நியாயமானது .

இப்போது நம்முடைய தமிழ் நாட்டில் பெருமழை வந்து அளவில் அடங்காத உயிர் சேதம் ,பொருள் சேதம்,ஏற்ப்பட்டு உள்ளது .ஏன் உங்களால் காப்பாற்ற முடியவில்லை.

மதுவினால் மக்களை அழித்து பொருளை ஈட்டிநீர்களே அந்தப்பணத்தை வைத்து மக்களை காப்பாற்ற முடிந்ததா ? மத்திய அரசிடமும்,மக்களிடமும்,கை ஏந்தி நிற்கின்றீர்களே .

ஆட்சி செய்வது முக்கியம் அல்ல .மக்களை நல்வழியில் கொண்டு சென்று மக்களுக்கு எந்த வகையிலும் துன்பம் இல்லாமல் வாழ வைப்பதே ஆட்சியாளர்களின் கடமை .

பட்டம் பதவி,புகழ் அதை வைத்துக் கொண்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது ஆட்சி அல்ல .

எதை செய்தாலும் அவை மக்களுக்கு நன்மை தரக்
கூடியதா என்பதை அறிவு சார்ந்த சான்றோர்களை அணுகி அவர்களின் நல்ல யோசனைகளை கேட்டு அதை யும் மறு பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும்.

தான் தோன்றித் தனமாக தனக்கே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தால் எதை செய்தாலும் அவை மக்களையும் அழித்துவிடும் உங்களையும் அழித்துவிடும்.

ஆட்சி அதிகாரம் என்பது சத்தியத்தின் செயலாகும் .கடவுளுக்கு நிகரானது ,உண்மை ஒழுக்கம் ,நேர்மை.சத்தியம்  தவறாமல் செயல்பட்டால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற முடியும்.

சாதாரண மக்காத பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் கம்பெனிகளின் தாயரிக்கும் உரிமையை ரத்து செய்யாமல் .தயாரித்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மக்கள் எப்படி பயன் படுத்தாமல் இருப்பார்கள்

முதலில் தாயாரிப்பை நிறுத்துங்கள் மக்கள் பயன் படுத்த மாட்டார்கள் மக்களுக்கு பைகள் கிடைக்காமல் இருக்க வழி வகை செய்யுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு