வியாழன், 24 டிசம்பர், 2015

வேதனையில் பெரிய வேதனை !

வேதனையில்  பெரிய வேதனை !

வேதனைகளில் தாங்கிக் கொள்ள முடியாதது ..,

நரக வேதனை,...ஜனனவேதனை,..மரண வேதனை .இந்த மூன்று வேதனைகள்  தான் தாங்க முடியாத வேதனைகளாகும் .

இந்த மூன்று வேதனைகளை விட கொடுமையான பெரிய வேதனை ''பசி வேதனை ''என்று வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார் .

நரக வேதனை,ஜனன வேதனை,மரண வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம் பசி வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாது.

பசி வந்தால்'--நெருப்பு சுடுவதுபோல் இருக்கும்,

விஷக் காற்றை சுவாசிப்பது போல் இருக்கும்,

உடம்பு பாழாகுவது போல் இருக்கும்

உடம்பில் உள்ள உறுப்புக்கள் இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும்,

புலி வந்து கொல்லுவது போல் இருக்கும்.

விஷம் தலைக்கு ஏறுவது போல் இருக்கும்.

தேள் வயிற்றின் புகுந்து கொட்டுவது போல் இருக்கும்.

விஷப் பாம்பு உடல் முழுவதும் விஷத்தை கக்குவது போல் இருக்கும்

இவ்வளவு கொடுமைகளும் துன்பங்களும் வேதனைகளும் பசி வந்த காலத்தில், எல்லா ஜீவன் களுக்கும் பொதுவாகவே உண்டாகும்

அதனால்தான் பசி என்பது இறைவனால் கொடுக்கப் பட்ட ஒரு உபகாரக் கருவி என்றார் வள்ளல்பெருமான்.

இறைவனால் கொடுக்கப்பட்ட உபகார கருவியைக் கொண்டு உபகாரம் செய்ய வேண்டும் .அதற்குப் பெயர்தான் பரோபகாரம் என்பதாகும் .

அந்த கொடுமையான பசி வேதனையைப் போக்குகின்றவர்களே ,கடவுளும் ஆவார்கள்  கடவுளைக் காணும் அருளைப் பெறுவதற்கும்  தகுதி உடையவர் என்று தெளிவாக விளக்கி உள்ளார் ...

எனவே தான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ''ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரமே கடவுள் வழிபாடு'' என்றார் .

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார்.

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார்.

திறவுகோல் என்பது ! அருள் என்பதாகும்.

அருள் பெற்றால்தான் கடவுள் வீற்று இருக்கும் மேல் வீட்டின் கதவு திறக்கப்படும் .

திறவுகோல் என்பது சாவி அல்ல .அதற்கு அருள் என்னும் பொருளாகும்.பெயராகும் .

வள்ளலார் சொல்லிய ''சுத்த சன்மார்க்கம்'' ஒன்றுதான் அருளைப் பெரும் வழியைக் காட்டி உள்ளது.

வள்ளலார் பதிவு செய்துள்ள அகவலில் உள்ள வரிகளை நன்கு படித்து அதில் உள்ள மெய்ப் பொருளை நன்கு அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம்
இருள் நெறி என இயம்பிய சிவமே !

அருள் பெறிற் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

அருள் சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சிவமே !

அருட்பேர் அதுவே அரும் பெறற் பெரும் பேர்
இருட் பேர் அறுக்கும் என்று இயம்பிய சிவமே !

உலகில் உள்ள எல்லா நெறிகளும் இருள் நிறைந்த நெறிகளாகும்,சுத்த சன்மார்க்கம் ஒன்றே இருளை அகற்றி அருளைத் தரும் மார்க்கமாகும்.

மேலே உள்ள வரிகளில் வள்ளலார் சிவமே சிவமே என்று சொல்லுகின்றார் .அவை சைவ சமயத்தில் சொல்லிய சிவம் அல்ல ..சிவம் என்பது ஒளியைக் குறிப்பதாகும்

அருபெருஞ்ஜோதியைத் தான் வள்ளலார் சிவமே என்று சொல்லுகின்றார் .என்பதை சுத்த சன்மார்க்கிகள் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் .

வள்ளலார் பசியை, ''பசிப்பிணி'' என்றும்... ''பசி வேதனை''என்றும் ......''பசிக் கொடுமை''  என்றும் ...பதிவு செய்து மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

எனவே வள்ளலார் சொல்லிய பசி வேதனையை.பசிப்பிணியை,பசிக் கொடுமையைப்  போக்கி பசியை இருக்கும் இடம் இல்லாமல் விரட்டுவது சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்,

மக்களை அன்பு,தயவு,கருணை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது சுத்த சன்மார்க்கிகளின் செயல்களாக இருக்க வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு