வெள்ளி, 25 டிசம்பர், 2015

மனைவி இல்லாத தனிமை மிகவும் கொடுமையானது

மனைவி இல்லாத தனிமை மிகவும் கொடுமையானது

எங்களுக்கு திருமணம் நடந்து 49,ஆண்டுகள் ஆகின்றது.எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அப்போதே மறந்து சுமார் ஒருமணி நேரத்தில் சரியாகிவிடும்.

இதுவரையில் சண்டையிட்டுக் கொண்டோ ,கோபித்துக் கொண்டோ என்னுடைய மனைவி தாய் வீட்டிற்கோ ,சொந்தம் பந்தம் வீட்டிற்கோ சென்றதில்லை.

நான் வெளியூர்களுக்கு அதிகம் தொழில்  ரீதியாகவும் சொற்பொழிவு செய்யவும் சென்றுவிடுவேன் .நான் எப்போது வீட்டிற்கு வந்தாலும் என்மனைவி வீட்டில் இல்லாமல் இதுவரையில் இருந்தது இல்லை.

என்னுடைய மனைவி என்னை விட்டுவிட்டு வெளியூர் தனியாக எங்கும் சென்றதில்லை, உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் ,சுற்றுலா சென்றாலும்,திருமண வைபவங்களுக்கு சென்றாலும் வெளியூர்களுக்கு சென்றாலும் இருவரும்தான் போவோம் ,

எங்கள் மனைவியின் தங்கை பேத்தி வீடு பூனாவில் உள்ளது அவர்கள் அவசியம் வரவேண்டும் என்று அன்புடன் பலமுறை அழைத்தார்கள் .என்னால் வரமுடியாது உங்கள் ஆக்காவை வேண்டுமானால் அழைத்துபோங்கள் என்று சொல்லிவிட்டேன் அவர்களும் சரி என்று சொல்லி விட்டார்கள். .

என்மனைவி நீங்கள் வராமல்  நான் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார் .

உங்களின் தங்கையின் குடும்பம் மற்றும் அனைவரும் போகிறார்கள் நீங்களும் அவர்களுடன் போய்விட்டு வாருங்கள் அம்மா என்று, என்னுடைய மகன் ஆகாயவிமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டான் .

அப்போதும் என்னுடைய அனுமதி கேட்டுத்தான் சென்று உள்ளார்கள் .நானும்  அவர்களுடன் சென்று வழி அனுப்பிவிட்டு வந்து விட்டேன்.

அவர்கள் போய் பதினைந்து நாட்கள் ஆகின்றது வருகின்ற ஐந்தாம் தேதிதான் வருவார்கள்.

தினமும் போனில் பேசிக் கொண்டுதான் உள்ளோம்.இருந்தாலும்.

தனிமையின் சோகம் !

அவர்கள் சென்று விட்டார்கள் நானும் அனுப்பிவிட்டேன் .ஆனால் மனைவி இல்லாமல் வீட்டில் தனியே இருக்கவே முடியவில்லை.தனிமையின் அவத்தையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .

வீடு எதோ ஒன்றை இழந்து விட்டது போல் உள்ளது.தூக்கம் வரவில்லை,படிக்க முடியவில்லை உணவு உண்ண முடியவில்லை.டிவி பார்க்க முடியவில்லை ,எந்நேரமும் மனைவியின் நினைவாகவே உள்ளது .

எனக்கு பாதுகாப்பாய் இருந்த ஒரு பொருள் இல்லாமல், அந்த இடம் வெற்று இடமாக உள்ளதுபோல் தோன்றுகின்றது.

வீட்டில் உள்ளவர்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் அதில் எந்த குறைபாடும் இல்லை.

ஆனால் வீடு இருள் அடைந்ததுபோல் உள்ளது. ..மனைவி இல்லாமல் ஆண் தனிமையில் உள்ளது மிகவும் கொடுமையானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

ஆண் இல்லாமல் பெண் தனிமையில் இருந்துவிடலாம் .ஆனால் பெண் இல்லாமல் ஆண் தனிமையில் இருப்பது நினைத்துப் பார்க்க முடியாத சோகமாகும்.

அதனால் தான் ஆண்களுக்கு பெண்கள் மனைவி என்றும்  ,துணைவி என்றும்  பெயர் வைத்தார்கள் போலும்.மேலும் இல்லாள் என்ற பெயரும் உண்டு.

இல்லாள் இல்லத்தில் இல்லை என்றால் எது இருந்தும் பயன் இல்லை.

கணவனும் மனைவியும் அன்புடன் வாழ்ந்து விட்டால் பிரிவது என்பது எவ்வளவு கடினமானது .சகித்துக் கொள்ளவே முடியாது என்பது தனிமையில் இருக்கும் போதுதான் அந்த துன்பம் எப்படி உள்ளது என்பது தெரிகின்றது.

பெண்கள் இல்லாத வீடு பேய் வாழும் வீடு போல் உள்ளது.

இறைவன் படைப்பு எவ்வளவு அதிசயமானது,ஆச்சரியமானது, அனுபவமானது .

ஏன் இதை எழுதுகிறேன் என்றால் பெண்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் இருளைப் போக்கும் விளக்காக விளங்கக் கூடியவர்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு பெண்களை பாது காக்க வேண்டும்.

சமையல் செய்யமட்டும் பெண்கள் அல்ல...குடும்பத்தின் மேல்.. கணவன் மேல்.குழந்தைகள் மேல்.. குடும்ப நிர்வாகத்தின் மேல்.சுற்றத்தார்களின் மேல்   அதிக அன்பு செலுத்துபவர்கள் பெண்கள் தான் என்பதை ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது ....

அன்பின் வழியது உயிர் நிலை அக்திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு .......என்கின்றார் திரு வள்ளுவர் .

ஒரு வீட்டில் கணவன் மனைவி பிரியா அன்பு செலுத்தினால் அங்கே அறம் தழைக்கும்.உயிர் பாது காக்கப்படும்...இல்வாழ்க்கை பயன் உள்ளதாக இருக்கும், அந்த வீடு மகிழ்ச்சியுடன் விளங்கும்.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ...


1 கருத்துகள்:

15 நவம்பர், 2016 அன்று AM 6:32 க்கு, Blogger aruljothi கூறியது…

என் உள்ளத்தில் உள்ளதை கண்ணாடி போல் காட்டியிருக்கிறீர்கள் ஐயா.

என் மனைவி,என் உயிரில் கலந்த உன்னதமான உறவு ஐயா.நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.

வாழ்த்துக்கள்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு