புதன், 23 டிசம்பர், 2015

வள்ளல்பெருமான் சொல்லிய தியானம் செய்யும் முறை !

வள்ளல்பெருமான் சொல்லியது !

மேட்டுக் குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் 22-10-1873,அன்று கொடியேற்று விழாவில் வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய பேருபதேசம் ,,,அதில் தெரிவித்துள்ளது .

இங்குள்ள நீங்கள் எல்லாவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள் என்று மக்களுக்கு  கட்டளை இடுகின்றார்.

இதுமுதல் சாலைக்கு ஆண்டவர் போகிற பத்துத் தினமாகிய கொஞ்ச காலம் வரையில் நீங்கள் எல்லாவரும் நல்ல விசாணையில் இருந்து கொண்டு இருங்கள் .அந்த விசாரணை எது என்றால் ...நம் நம்முடைய நிலை எப்படிப் பட்டது ? நமக்குமேல் நம்மை இயக்குகின்ற தெய்வத்தின் உடைய நிலை எப்படிப் பட்டது ? என்று விசாரிக்க வேண்டியது அவசியம் .

அதற்கு தக்கபடி நீங்கள் ஒருமித்தாவது அல்லது தனித்தனியாவது உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது விசாரணை செய்து கொண்டு இருங்கள் என்கின்றார்.

இப்படி விசாரித்துக் கொண்டு இருந்தால் ,நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அனந்த திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கி விடும் .அது நீங்கினால் மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கி போய் விடும் என்கின்றார் .

மேலும் அந்த பசுமை வண்ணம் எப்படிப்பட்டது என்றால் கருமைக்கு முதல் வர்ணமான மசுமையாக இருக்கின்றது .அதாவது கருமையும் பசுமையும் சேர்ந்தால் அடர்த்தியான கருப்பு என்பதாகும்..விரைவில் நீக்கமுடியாத (டார்க் பிளாக்) கருப்பு வண்ணமுடைய அழுத்தமான திரையாகும்

அந்த அழுத்தமான திரை நீங்க வேண்டும் என தோத்திரத்தும் ,தெய்வத்தை நினைத்தும் நமது குறையை உன்னியும் ,இவ் வண்ணமாக இருக்கின்ற போதும் ,படுக்கின்றபோதும்,இடைவிடாதும் இவ் விசாரத்தில் இருந்தால் ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால் ,தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்பதைத் தெளிவு படுத்தி உள்ளார்கள்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

தெய்வத்தை நினைத்து தோத்திரம் செய்யவும் ,நினைக்கவும் சொல்லுகின்றார் .தோத்திரம் என்றால் புற வழிபாடு ,இடைவிடாது நினைத்து என்றால் அக வழிபாடு என்பதாகும் ,

அதற்கு விசாரம் என்று பெயர் சூட்டுகின்றார்;--

பரம், அபாரம் என்று இரண்டு வகையா இருக்கின்றது ,இவற்றில் பரம் என்பது பரலோகம் விசாரம் என்பதாகும் .அபரம் என்பது இகலோகம் விசாரம் என்பதாகும்.

கண்களுக்குத் தெரியாத உண்மையான அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை இடைவிடாது நினைத்துக் கொண்டு இருப்பது பரவிசாரம் என்பதாகும் .கண்களுக்குத் தெரிந்த புறத்தில் உள்ள தீப ஒளி ஜோதியை தோத்திரம் செய்வது இகலோகம் விசாரம் என்பதாகும்.

இரண்டும் ஜோதிதான் ;--.ஒன்று அருளைத் தரும் அருட்பெருஞ்ஜோதி அது  பரத்தில் உள்ளது ...ஒன்று அருளைப் பெறுவதற்கு துணையாக இருப்பது புறத்தில் உள்ளது அதுதான் சத்தியஞான சபையில் உள்ள புற வழிப்பாட்டு தோத்திரம் செய்யும் ஜோதியாகும்.

வெளியூரில் உள்ளவர்கள் தினமும் வடலூர் வந்து ஜோதியை தரிக்க முடியுமா? முடியாது அதனால் வீட்டில் இருந்த படியே  ஜோதியை வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக புறத்தில் ஜோதியை வைத்து வழிபாடு செய்யுங்கள் என்று புற வழிப்பாட்டு முறையை காட்டி உள்ளார் .

நாம் அடைய வேண்டிய மிகவும் முக்கியமான லாபம், ஆன்ம லாபம் என்பதாகும் அந்த ஆன்ம லாபத்தில் மூன்று லாபம் உள்ளது .அவைகள் ..இம்மை இன்ப லாபம்...மறுமை இன்பலாபம் ..பேரின்ப லாபம் என்பதாகும்.அதேபோல் நம்முடைய வாழ்க்கையும் இன்பமும் மூன்று பிரிவுகளாக உள்ளன.

இன்மை இன்பவாழ்வு,மறுமை இன்ப வாழ்வு ,பேரின்ப வாழ்வு என்பதாகும்.

அந்த லாபத்தாலும்,வாழ்க்கையாலும் தேகத்திற்கு  மூன்று மாற்றங்கள் உண்டாகும் என்கின்றார் வள்ளல்பெருமான்.

அந்த தேகத்திற்கும் பெயர் வைத்துள்ளார் ;--சுத்த தேகம்,..பிரணவ தேகம்,..ஞான தேகம் என்பதாகும்.

அந்த மூன்று தேகமும் சேர்ந்து ஒரே தேகமாக மாற்ற வேண்டும் என்கின்றார் .

அந்த தேகத்திற்குப் பெயர் ''சுத்த பிரணவ ஞான தேகம்'' என்று பெயர் வைத்துள்ளார் .

இந்த 'சுத்த பிரணவ ஞான தேகம் ''பெற்றவர்களால் மட்டுமே இறைவனை காணமுடியும் இறைவனுடன் கலந்து கொள்ளமுடியும். அவர்களுக்கு இறப்பும் இல்லை ,மீண்டும் பிறப்பும் இல்லை .அதற்கு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.

உலகில் பிறந்து வாழ்ந்துள்ள அருளாளர்கள் இம்மை இன்ப வாழ்வு..,மறுமை இன்ப வாழ்வு,பெற்று இருக்கின்றார்கள் .....பேரின்ப வாழ்வு என்னும் வாழ்க்கை வள்ளல் பெருமானைத் தவிர வேறு எவரும் பெற்றதில்லை.

அதற்கு பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.பேரின்ப  சித்திப் பெருவாழ்வு பெற்றவர்களால் மட்டுமே பிறப்பு ,இறப்பு இல்லாமல் வாழ முடியும்.அதற்கு வள்ளலார்  வைத்தப் பெயர் ''மரணம் இல்லாப் பெருவாழ்வு '' என்பதாகும்

மனிதனாக பிறந்த அனைவரும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று ,பிறப்பு இறப்பு  இல்லாமல்,மரணத்தை வென்று  வாழ வேண்டும்,

 உலக மக்களுக்கு வள்ளல்பெருமான் தோற்றுவித்து காட்டிய உண்மையான மார்க்கம் தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''என்ற மார்க்கமாகும்.அந்த மார்க்கத்தின் வழியாக கற்றுக் கொள்வதுதான் ''சாகாக் கல்வி'' என்னும் ஒழுக்கம் நிறைந்த ,உயர்ந்த அருள் கல்வியாகும்.

உலக மக்கள் அனைவரும்,அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவதற்காக, தோற்று விக்கப் பட்ட மார்க்கம் தான்  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் உயர்ந்த ஒப்பற்ற மார்க்கம் என்பதாகும்.மேலும் வள்ளல்பெருமான்  சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே ''சாகாக் கல்வியில்'' தேர்ச்சி பெற முடியும். ,தேர்ச்சி பெற்றால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் ''முத்தேக சித்தியைப்'' பெறமுடியும்.

சுத்த சன்மார்க்க கொள்கைகளில்,நாம் கடைபிடிக்க வேண்டிய  முக்கியமானது இரண்டே வழிகள்தான்..ஒன்று ஜீவ காருண்யம்,அதாவது ''பரோபகாரம்'' .ஒன்று ''சத் விசாரம்''.அதாவது கடவுளை தொடர்பு கொள்வது .இந்த இரண்டும் எது வென்பதை தெளிவாக அறிந்து,தெரிந்து,புரிந்து கடைபிடித்து அனுபவித்து வாழ்ந்தோம் என்றால் நிச்சயம்  மரணத்தை வெல்ல முடியும்,

அதைவிடுத்து குறுக்கு வழிகளில் சென்றால் பயன் ஏதும் கிடைக்காது .

சன்மார்க்க அன்பர்கள், ''ஜீவ காருண்யம்'' என்பதில் முதலில் உள்ள பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகின்றார்கள் .அதற்கு மேல் உள்ள .கொலை,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம் போன்ற மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குவதற்கு,தங்களால் முடிந்த அளவு வழிவகைகளை செய்ய வேண்டும்.

அடுத்து சத்விசாரம் என்பதாகும்.,,மேலே சொன்னவாறு சத்விசாரத்தில் இரண்டு வகைகள் உள்ளன .''பரலோக விசாரம்,இகலோக விசாரம்'' என்பதாகும்.

இகலோக விசாரம் செய்து கொண்டு வந்தால் பரலோக விசாரம் தன்னைத்தானே விளங்கும்..இகலோகம் விசாரம் என்பதுதான் சுத்த சன்மார்க்க புற வழிப்பாட்டு முறையாகும்.

 புற வழிபாடு எப்படி செய்வது ?

சமய மதங்களில் சொல்லி காட்டியுள்ள உருவ வழிப்பாட்டு முறையைத் தவிர்த்து சுத்த சன்மார்க்க வழிப் பாட்டு முறையைக் கடைபிடிக்க வேண்டும் ..

வள்ளல்பெருமான் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளது ...

நாம் இதுவரையில் நாம் நாமும், பார்த்தும்,கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் ...அவைகளின் ஒன்றிலாவது வெளிப்படியாக காட்டாமல் சொல்லாமல்  உண்மைக்குப் புறம்பாக வெளியில் ஆலயங்களை அமைத்து அதன் நடுவில் சிலைகளை வைத்து,ஆச்சார, சங்கற்ப, விகற்பங்களான அபிஷேக ஆராதனை போன்ற சடங்குகள் சம்பரதாயங்கள்  உருவாக்கி   கடவுள் வழிப்பாட்டு முறைகளை செய்து இருக்கின்றார்கள்

தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் வெளிப்படையாய்  காட்டாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணு அளவு கூட உண்மையைத் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள் .

எவ்வாறு எனில் ;--கைலாசபதி,என்றும் வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயர் இட்டு இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவை யாவும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பது போலவே சொல்லி இருக்கின்றார்கள் .

தெய்வத்திற்கு கை,கால்,முகம்,வாய்,உடம்பு முதலியன இருக்குமா என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள் .

இஃது உண்மையாக இருப்பதாகவே ...முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள் என்கின்றார் வள்ளலார் ...அதாவது ,அனைவரையும் கண் இருந்தும் குருடர்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்,  

உடம்பில் உள்ள ஆன்மா ,உயிர்,அந்த கரணங்கள்,இந்திரியங்கள் நடத்தும்  செயல்படும் கலையை,புறத்தில் பொய்யான கற்பனைக் கதைகளாக எழுதி கதா பாத்திரங்களை உருவாக்கி அதற்கு தகுந்தாற் போல் பெயர்களை வைத்து ,இடம்,வாகனம், ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள்.

மேலும் தெயவத்தின் உடைய உண்மை இன்னதென்றும்,கொஞ்சமேனும் புறங் கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .அணு அளவு கூட உண்மையைத் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள்,

யாதெனில் ;--கைலாசபதி என்றும்,வைகுண்ட பதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பயர் இட்டு பொய்யை விதைத்து விட்டார்கள் .அவைகள் யாவும் உண்மை என்று நம்பி மக்கள் வாழ்க்கையில் கடைபிடித்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

தெய்வத்திற்கு  கை, கால் , முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள் ,

உண்மையாக இருப்பது போலவே கடவுள்களை படைத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள்  .மக்களும் ஏமாந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண் மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப் போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே
உலை வறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம் கரைத்துத் திரு அமுதம் அளித்தோய்
சித்த சிகாமணியே என் திரு நட நாயகனே !

என்று தெளிவாக பதிவு செய்து உள்ளார் ...

மேலும் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்ட பாடில்லை .அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்க வில்லை ..இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை ..நான் உடைத்து விட்டேன் என்கின்றார் வள்ளல்பெருமான் ..

அப்படி அவர்கள் சொல்லிய கற்பனைக் கதைகளில் கவனம் செலுத்தினால் ஏகதேசம் கர்ம சித்திகளைப் பெறலாம் அதற்குமேல் அவைகளில் லாபம் ஒன்றும் இல்லை.

அதற்காக ஒவ்வொரு சித்துக்கும் பத்து வருடம்,எட்டு வருடம்,பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம் .அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் உண்மையான ஆண்டவர் இடத்தில் வைத்த லஷியம் போய் விடும்.

ஆண்டவர் இடத்தில் வைத்த லஷியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகிற பெரிய பிரயோஜனம் (லாபம் ) போய் விடும்.என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களுக்கு வள்ளலார் தெரியப்படுத்து கின்றார் ..

நீங்கள் அடைய வேண்டுவது பெரிய லாபம் ஆகிய ஆன்ம லாபம்,..ஆன்ம லாபம் கிடைத்தால் தான்  இம்மை இன்ப லாபம்,.மறுமை இன்பலாபம் ..,பேரின்ப லாபம் கிடைக்கும். சிறிய லாபம் வேண்டுமா ?பெரிய லாபம் வேண்டுமா ? நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றார் .

ஆதலால் சுத்த சன்மார்க்கிகள் அவைகளில்  கவனத்தை செலுத்தாமல், உண்மையை உணர்ந்து கொண்டு வழிப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றார் .

மேலும் இதற்கு மேற்பட நாம் நாமும் ,பார்த்தும் ,கேட்டும்,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த  வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லி உள்ளார் .

மேலும் சுத்த சன்மார்க்கத்தின் கொள்கை யானது எதுவெனில்.முழுமையான அருளைப் பெறுவதாகும்.அருள் பெறுவதுதான் ஆன்ம லாபம் என்பதாகும். .அருளைப் பெற்று  பேரின்ப லாபம் அடைவதற்கு எது எது தடையாக இருக்கின்றதோ அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்கின்றார் .

மேலும் வள்ளலார் சொல்லியது ;--
சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !
தேவரீர் எங்கள் ஆன்மாவில் அமர்ந்து அருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும்,இவ் உலகில் இத் தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியார் களாக்கி  ,உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில்  வைத்துச் சத்திய  வாழ்வை அடைவித்து  ,நித்தியர் களாக்கி ,வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும்,சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய  சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,

வருணம் ,ஆசிரமம் ,முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சயமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை ,எங்களுக்குள் ,

எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும்,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !
தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்,வந்தனம்,

என்றும் ...இறைவனிடம் வேண்டுதல் எப்படி வேண்ட வேண்டும் என்றும்,  விண்ணப்பம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெளிவாக சொல்லி உள்ளார் .நாம் தினம் தோறும்  வேண்டுதல்,விண்ணப்பம் செய்கின்றோம்,.எவை எவை சுத்த சன்மார்க்கத்திற்கு தடை என்பதை அறிந்து உணர்ந்து தெரிந்து ,அவைகளை எல்லாம் விட்டு விட்டோமா ? என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சாதி,சமயம்,மதம் என்பதின் கொள்கைகள் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு தடையாக உள்ளது ..இந்த மூன்றையும் முழுமையாக விட்டவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கையை  முழுமையாக கடைபிடிக்க தகுதி உள்ளவர்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார் ..

சாதியும்,மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி.

எங்குலம் எம் இனம் என்பது தொண்ணுற்று ஆறு
அங்குலம் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி .

சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி .

சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்
ஜோதியைக் கண்டேன் .....என்றும்

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன் .....என்றும்

மேலே கண்ட வரிகளில் வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார் .

மேலும் ;--















1 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 அன்று PM 8:25 க்கு, Blogger Unknown கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு