திங்கள், 14 டிசம்பர், 2015

கருணை உள்ள ஆட்சி வரவேண்டும் !

கருணை உள்ள ஆட்சி வரவேண்டும் !


கருணை உள்ள ஆட்சி வரவேண்டும் என்றால் .வள்ளலார் கொள்கையைப் பின் பற்றி வாழும் மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று .ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் களாகவும்,மாவட்ட காவல் துறை கண்காணிப்பு பனியின் பொறுப்பில் இருக்க வேண்டும்

மேலும் மத்திய மாநில ஆட்சியில் அமரும் தலைவர்கள் வள்ளலார் கொள்கையை முற்றிலும் கடைபிடிக்கும் கருணை உள்ளவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மக்கள் புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம், பல வருடங்களாகும்

மக்கள் மனதில் ..வள்ளலார் சொல்லிய வலியுறுத்திய ''சுத்த சன்மார்க்க'' கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ளும்படி தெரிந்து கொள்ளும்படி ,மக்கள் எப்படி வாழ வேண்டும் என்ற வாழும் வழிமுறைகளை சுத்த சன்மார்க்க அன்பர்கள் மக்களுக்கு தெளிவாக போதிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் சொல்லிய ''சுத்த சன்மார்க்க கொள்கை''விதிகளை  விதைகளை உலகம் முழுவதும் விதைக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் நமக்கு இட்ட கட்டளையை ஆன்மாவில் பதிய  வைத்து கொண்டு வழி இது,  துறை இது,  நீ செய்யும் முறை இது ..என்பதை தெளிவாக ,உலக  மக்களை காப்பாற்ற சுத்த சன்மார்க்கிகள் தீவிரமாக ஜீவ காருண்யத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இது நிச்சயம் நடக்கும் இவை வள்ளலார் சொல்லிய அருள் வாக்காகும்.

மக்கள் துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழ வேண்டுமானால் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை விட்டால் வேறு வழியே இல்லை.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.;--

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்த்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே''சமரச சன்மார்க்கம்''
அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேற் பொருளே
வன்புடையார் பெறற் அரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்று உரைமின் தீமை எல்லாம் தவிர்ந்தே !

நீங்கள் துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழ்வதற்கு நீங்கள் சேர வேண்டிய ஒரே இடம்,வள்ளல்பெருமான் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்பதாகும்.

இங்குதான் உங்களின் உயிர்,உடம்பு,உடமைகள் என்றும் அழியாமல் காப்பாற்றும் உண்மையான வழியைக் காட்டுகின்றது.

சுத்த சன்மார்க்கம் ஒன்றில்தான் அறிவு விளக்கம் தரப்படுகின்றது.

ஒருமனிதன் உண்மையான அறிவு விளக்கம் பெற்றால் எக்காலத்திலும் தவறு செய்யவே மாட்டான்.

மனிதர்கள் தவறு செய்வதற்கும் ,அழிந்து போவதற்கும் அடிப்படைக் காரணம் அறிவு தெளிவு இல்லாமையே காரணமாகும்.

இதுவரையில் எந்த ஒரு சமயங்களும்,மதங்களும், போதகர்களும்,விஞ்ஞானிகளும்,அறிவியல் ஆராய்சி யாளர்களும் ,அரசியல் தலைவர்களும்.மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அறிவின் செயல் பாட்டுக்கு செல்லவில்லை.

புத்தியைக் கொண்டுதான் செய்லபடு கின்றார்கள் .அறிவைக் கொண்டு செயல்பட வில்லை.புத்திவேறு .அறிவு வேறு  என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

புத்தி என்பது புறத்தில் செல்லும் இயல்பு  உடையது .அறிவு என்பது அகத்தில் உள்ளது...

புத்தியின் வழியில் சென்றால் துன்பம்,துயரம்,அச்சம, பயம்,போன்ற துன்பங்களினால் மனிதன் அழிந்து போவான் .

அறிவின் வழியில் சென்றால் மனிதன் என்றும் அழியாமல் மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வான் .

அகத்தில் உள்ள அறிவை தட்டி எழுப்புவதுதான் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கை களாகும்

தானும் வாழ்ந்து மக்களை காப்பாற்ற வேண்டுமானால் வள்ளலார் சொல்லிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புனிதமுறும் சங்கத்தில் சேர்ந்து பயன் பெறுவோம்.

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !

அருளாலே அருள் இறை அருள்கின்ற போது
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !

அறிவு விளக்கம் அடைகின்ற போது அறிவுனுள் இருக்கும் அருளின் தன்மை என்னவென்று தெரியும்.என்கின்றார் வள்ளல்பெருமான் .

அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தெரிந்தால் நாம் யார் ? என்ற உண்மையும் ,நம்மைப் படைத்தவன் யார் ? என்ற மெய்ப்பொருள் உண்மையும் தெரியும்.

இவை யாவும் மனிதன் தெரிந்து கொண்டு வாழ்வதற்கு உலகில் எவரும் மக்களுக்கு சரியான வழியைக்  காட்டவில்லை..காட்டி இருந்தால் மக்கள் தவறான வழியில் சென்று அழிந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.

எனவே உலகில் உள்ள துன்மார்க்க செயல்களை எல்லாம் அழித்து விட்டேன் என்கின்றார் வள்ளல்பெருமான்.

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்
மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து !.....என்கின்றார் .

மேலும்

பன் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத் ததுவே --சொன்மார்க்கத்து
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு !

இனிமேல் எந்த மார்க்கமும் செயல்பட முடியாமல் அழித்து விட்டேன் சுத்த சன்மார்க்கம் ஒன்றே செயல்படும்.இது இறைவன் சட்டம் இறைவன் செயல் என்கின்றார் வள்ளல்பெருமான்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ,மனிதனுக்கு அறிவு விளக்கம் இல்லாமல் தடுத்துக் கொண்டு இருக்கும்,மனிதனை அழித்துக் கொண்டு இருக்கும் சாதி,சமயம்,மதம்,முதலிய பொய்யான கற்பனைக் கதைகளை குழி தோண்டி புதைத்து விட்டு மனிதனாக வாழ்வோம்

கருணை உள்ள ஆட்சியை கொண்டு வருவோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு