வெள்ளி, 18 டிசம்பர், 2015

அறிவின் விரிவு !

அறிவின் விரிவு !

நம் உலகில் அறிவைப் பற்றி பேசாதவர்களே இல்லை என அறியலாம் .

எது அறிவு ? வள்ளலார் சொல்லுகின்றார் ,

அயர் வறு பேரறிவாகி

அவ் அறிவுக்கு அறிவாய்

அறிவறிவுள் அறிவாய்

அதன் உள்ளோர் அறிவாய்

மயர் வறும் ஓர் இயற்கை உண்மைத் தனி அறிவாய்ச்

செயற்கை மன்னு அறிவு அனைத் தினுக்கும் வயங்கிய தாரகமாய்த்

துயரறு தாரக முதலாய் அம் முதற்கோர் முதலாய்த்

துரிய நிலை கடந்து அதன்மேல் சுத்த சிவ நிலையாய்

உயர்வறு சிற்றம்பலத்தே எல்லாம் தாமாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்று வள்ளலார் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அறிவு நிலையையும் அருள் நிலையையும் அதன் நிலையைப் பற்றிப் பதிவு செய்கின்றார்.

மனிதர்கள் எந்த அறிவில் உள்ளார்கள்.

மனிதர்களின் உடம்பில் நான்கு அறிவு உள்ளது .

இந்திரிய அறிவு,கரண அறிவு,ஜீவ அறிவு ,ஆன்ம அறிவு,என நான்கு அறிவுகள் நம்முடைய உடம்பில் உள்ளது .

ஒவ்வொரு மனிதனுக்கும் செயல்படும் அறிவு இந்திரியம் என்னும் ,கண்,காது,மூக்கு,வாய்,மெய்
( உடம்பு ) என்பன போன்ற அறிவுதான் செயல்ப் பட்டுக் கொண்டு உள்ளது.

அதற்கு மேல் உள்ள அறிவுக்கு நாம் வேலைக் கொடுப்பதில்லை,புற அறிவான இந்திரிய அறிவிலே நின்று விடுகின்றோம்.

இந்திரிய அறிவை அடக்கினால் கரணம் என்னும் மனம், புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் அறிவு விளங்கும்,

கரண அறிவை அடக்கினால் ஜீவன் என்னும் உயிரின் அறிவு விளங்கும்,

இந்திரியம் ,கரணம்,ஜீவன் என்னும் மூன்று அறிவையும்  அடக்கினால் தான் ஆன்ம அறிவு விளங்கும்,

ஆன்ம அறிவுதான் உண்மையை வெளிக்காட்டும் அறிவாகும்,

அதற்குமேல் அருள் அறிவு வெளிப்பட வேண்டும்,

அருள் அறிவு பூரண மாகும் போதுதான் கடவுள் அறிவு என்னும் பேரறிவு வெளிப்படும்,

கடவுள் அறிவு விளங்கும் போதுதான் கடவுள் யார் ? என்பதுத் தெரியும்.

கடவுள் அறிவு விளங்கினால்தான் கடவுள் நிலை அறிந்து அம் மயமாக மாற முடியும்.,

மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவு ஏழு வகையாக உள்ளன.

ஆன்ம அறிவு விளங்கும் போது !

ஆன்ம அறிவு விளங்கும் போது ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க ஆரம்பித்து விடும்.

அந்த அருளை தக்கவைத்துக் கொண்டு மேலும் உயர வேண்டும்.

சித்தர்களும் யோகிகளும் ஆன்ம அறிவோடு நின்று விசித்தரங்கள் பல செய்து பல பேர் சமாதி நிலையை அடைந்து விட்டார்கள் பல பேர் தண்ணீரிலும், அக்கினியிலும் ,காற்றிலும்,ஆகாயத்திலும் கலந்து போய் விட்டார்கள்.,

''வள்ளல்பெருமான் மட்டுமே முழு அறிவையும் பெற்று பூரண அருளைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளார்''.

இப்போது நம்முடைய அறிவு எந்த இடத்தில் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவு மேலோங்க ஜீவ காருண்யமும் என்னும் பரோபகாரமும் ,உயிர் இரக்கமும் ஆன கடவுள் வழிபாடும்,..ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் சத் விசாரமும்,இடை விடாது செய்து கொண்டு இருந்தால் மட்டுமே அறிவு படிபடியாக மேலோங்கும்,

ஆன்ம அறிவு விளங்கும் போதே பசி,பிணி,தாகம், இச்சை, எளிகை,பயம்,கொலை ,போன்ற துன்பங்கள் யாவும் தன்னைத்தானே  நின்று விடும்.

சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் காட்டிய வழியை முழுமையாகப்  பின் பற்றினால் அறிவு விளக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அறிவு விளக்கம் அதிகரிக்க அதிகரிக்க அருள் விளக்கம் தோன்றும்.அருள் விளக்கம் தோன்றினால் மட்டுமே நாம் மேலே ஏறமுடியும் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896, 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு