வெள்ளி, 22 செப்டம்பர், 2017

அமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் !

அமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் !

இந்த உலகம் பொருள் நிறைந்த்து.பொருளை அனுபவிக்கின்ற வரை மரணம் வந்து கொண்டேதான் இருக்கும் மீண்டும் பிறப்பு எடுத்து கொண்டேதான் இருக்க வேண்டும். இதுதான் பொருளின் தன்மை.இறைவன் சட்டம்....இந்த சட்டத்தை கிழித்தவர் .கிழிக்க வந்தவர்தான் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலை விட் டொழித்தேன்கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்சாவையும் நோவையும் தவிர்ந்தேன்

சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்

பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்பண்ணிய தவம்பலித் ததுவே.!

என்ற பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

இதுவரை இறைவன் அருளைப் பெற பக்தி மார்க்கத்தில் சென்று  சரியை கிரியை யோகம் ஞானம்.என்னும் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு  முக்தி நலை பெற நினைத்தார்கள் சில சித்தர்கள் முத்தர்கள்  எல்லாம் கடுமையான பக்தி.தியானம்.தவம்.யோகம்.ஞானம் பெற்று முக்தி நிலை அடைந்தார்கள்.சமாதி அடைந்தார்கள்.பஞ்ச பூதங்களில் கலந்தும் வாழ்ந்து கொண்டும்  உள்ளார்கள்.

ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவல்ல...அவர்களின் தகுதி். காலம். அருள் முடிந்த பின்பு மீண்டும் பிறப்பு எடுத்தே  ஆகவேண்டும்.இதுதான் இறை சட்டம்

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே

மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!

என்னும் பாடல் வரிகளில் விளக்கமாக சொல்லி உள்ளார்.

உண்மையான கடவுளை நேரில் கண்டவர்கள் இந்த உலகில் ஒருவரும் இல்லை.இறைவனை ஏதோ ஒரு உருவத்தில் வைத்து  நினைத்து  மனம் உருக உள்ளம் உருக உயிர் உருக கண்ணீர் மல்க கசிந்து உருகி வழிபட்டார்கள்.தவம்.தியானம் யோகம்.மூச்சி பயிற்சி போன்ற கலைகளில் ஈடுபட்டார்கள்.இவர்கள் எந்த வழிமுறைகளை பின் பற்றினாலும்.மறைமுகமாக நன்மை செய்பவர். .. ஏக தேச அருளை வழங்குபவர் யார் ?  என்றால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான்.என்பது அவர்களுக்குத் தெரியாது.....

வள்ளலார் அவற்றை அறிந்து தெரிந்து புரிந்து சொல்லுகின்றார்..

எங்கு எங்கு உயிர் எது எது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும்ஜோதி !.

யாரே என்னினும் இரங்குகின்றாரக்குச் சீரே அளிக்குஞ் சிதம்பர சிவமே !

என்பார் வள்ளலார்.இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.உண்மையான ஒரே கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் எல்லாவற்றுக்கும் காரணக் காரியமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பவராகும்.

 நேரடியாக ஆன்ம அறிவாலே.அருள் அறிவாலே ஆன்மக் கண் கொண்டு. அருட்பெரும்ஜோதி ஆண்டவரைக் கண்டவருக்கு மட்டுமே பூரண அருள் கிடைக்கும். மரணத்தை வெல்ல முடியும்.வேறு குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு ஏதோ சிறிய ஏகதேச அருள் கிடைக்கும்.சத்து.சித்து ஆனந்தம் கிடைக்கும் அதைக் கண்டு பல் இலித்து இறுமாந்து. ஏமாந்து கெட்டுப்போக நேரிடும்.என்கிறார்.

எனவே நாம் காலம் உள்ள போதே பெற வேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும்....

வள்ளலார் வந்து தான் பிறவிச் சட்டத்தை தடுக்க வேண்டி சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து உள்ளார்.அந்த உண்மையான.நேர்மையான.ஒழுக்கமான புதிய பாதையைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணம் இல்லாமல்..மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ முடியும்.

பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்றார்கள் நம் முன்னோர்கள்.அந்த சட்டத்தை மாற்றி  இறப்பதும் பிறப்பதும் இயற்கை அல்ல அனைத்தும் செயற்கையே என்றார் வள்ளலார்.

இயற்கை என்பது மரணம் அடையாமல் வாழ்வதுதான் .மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு இறப்பு  உண்டு .ஆனால் எந்த எந்த பிறப்பு கிடைக்கும் என்ப்பது என்பது எவருக்கும் தெரியாது.இதுதான் இறை ரகசியம்..

வள்ளலார் பாடல். !

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி

நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த

நோவை நீக்கிஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே

ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.!

சாவதையும் பிறப்பதையும் மாற்றும் அதிகாரம் சட்டம் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் மட்டுமே உள்ளன. அந்த சட்டத்தை சட்ட திருத்தம் செய்தவர் வள்ளல்பெருமான்.பிறவிச் சட்டத்தை கிழித்து போட்டுவிட்டு புதிய சட்டத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி நிறைவேற்றி உள்ளார்.வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வகுத்து தந்த சட்டதிட்டத்தின்படி வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து சுத்த சன்மார்க்க சட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று நிறைவேற்றுவோம்..

இதுதான் சத்தியவான் வார்த்தை.! வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

என்ற சத்தியவான் வார்த்தையைப பின்பற்றி சுத்த சன்மாரக்கத்தை கடைபிடித்து வாழ்வோம் வெற்றி பெறுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு