புதன், 13 செப்டம்பர், 2017

கடவுளைக் கண்டார்! கடவுளிடம் கேட்டார் ! கடவுளிடம் பெற்றார்!

கடவுளைக் கண்டார்! கடவுளிடம் கேட்டார் !
கடவுளிடம் பெற்றார்!

 மனிதனுக்கு அறிவு விளங்கிய காலத்தில் இருந்து உண்மையான தாய் .தந்தை.குரு யார் என்பது தெரியாமல்.உபகாரக் கருவிகளையே தாயாகவும்.தந்தையாகவும்.குருவாகவும் நினைத்து வணங்கி வாழ்ந்து கொண்டு வருகிறோம். அனைத்தும் உண்மை அல்ல.எல்லாமே பொய்தான் என்பதை வள்ளலார் உணர்ந்தார் உலகிற்கும் உணர்த்துகின்றார்.

அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும்.தோற்றுவித்தலும்.இயக்குவித்தலும்.அடக்குவித்தலும்.மயக்குவித்தலும்.தெளிவித்தலும் ஆகிய ஐந்து வகையான  தொழில்களை செய்யும் அருள் வல்லப சக்தி சத்தர்களைப் பெற்ற வர்களையும்.படைத்து் காத்து .பக்குவம் வருவித்து கொண்டு தன்னை வெளியே காட்டிக் கொள்ளாமல் .இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் ஒரே உண்மைக் கடவுள் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்.அவர்தான் உண்மையான தாய்.தந்தை.குரு என்பவராகும்.

இந்த மாபெரும் உண்மையை தெரிந்து கொண்டாலே.அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தானே தோன்றும்.

அந்த எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய கடவுள் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அந்த உண்மைக் கடவுளைக் கண்டவர்தான் நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான்.

அவரைத் தொடர்பு கொண்டு கருணையுடன் வாழ்ந்து .நம் கருணையை கணக்கில் வைத்து.அவர் பெருங்கருணையால் அருள் வழங்கினால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பெரு வாழ வாய்ப்பு கிடைக்கும். என்பதை   உண்மையாக அறிந்து உணர்ந்து வாழ்ந்து உரிமையுடன் அருளைக் கேட்டுப் பெற்றவர் தான் வள்ளலார்.

அருளைப் பெருவதற்கு நாம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எவ்வாறு தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் என்பதை தெளிவாக கீழ்வரும் பாடல்களிலே பதிவு செய்துள்ளார்.

அவற்றைப் படித்து அவற்றில் உள்ளபடி வாழ்க்கையில் கடைபிடித்து வாழந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.என்பது தான் வள்ளலாரின் வேண்டுதலாகும்.

வேண்டுதல் பாடலை  பல முறை நன்கு படித்து தெளிவு பெறவும்....

சுத்த சன்மார்க்க வேண்டுதல் !

1. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
2. ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கணடு் வுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில்  எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
7. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
8. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
9. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
11. அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே. !

வள்ளலார் மேலே கண்ட பாடல்களில் உள்ளபடி அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் தொட்பு கொண்டு.சாதி.சமயம்.மதங்களை கடந்து பொது நோக்கத்தோடு எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்தை அறிந்து உயிர் இரக்கத்தோடு கருணையே வடிவமாக வாழ்ந்த்தால் இறைவன் காட்சி கொடுத்தார் அருளை வாரி வாரி வழங்கினார்.மரணம் இல்லாப்பெருவாழ்வு பெற்றார்.கடவுள் நிலை அறிந்து அம்மயமானார்

என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  என்னும் விண்ணப்பத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் பணித்துள்ளார்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவரைக் கண்டார் நாம் அனைவரும்  எவ்வாறு காண வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்பதை கருணை கொண்டு தூய்மையான சுத்த சன்மார்க்க நெறியை இவ்வுலத்திற்கு படைத்துள்ளார்.

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இனைந்து வள்ளலார் காட்டிய பாதையில் பயனிப்போம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு