வெள்ளி, 29 செப்டம்பர், 2017

பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா ?.

பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா ?.

ஆன்மநேய அன்புள்ளங்கள் அனைவருக்கும் வந்தனம்.

இந்த உலகமும் உலகில் உள்ள அனைத்தும்.பொருள்களே !  பொருள் தான் அருளை மறைத்துக் கொண்டு உள்ளது.

பொருளைப் பெற்றாலும் பொருள் மேல் பற்று வைத்தாலும்..பொருளை அனுபவித்தாலும் மரணம் நிச்சயம் என்பது இறைவன் நியதி. இறை சட்டம்.

பொருளை வைத்துக் கொண்டும்.பொருளை அனுபவித்துக் கொண்டும் எவ்வளவு தான் இறை நம்பிக்கையுடன் .தவம்.தியானம். யோகம் வழிபாடு செய்தாலும் பாறைமேல் விதைத்த விதைபோலும்.ஆற்றிலே கரைத்த புளிபோல் தான் வாழ்க்கை அமையும்.

அருள் பெற வேண்டுமானால் பொருளை விட்டு விலகி இடைவிடாது பொது நோக்கத்தோடு  இறைவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் .

அப்படி இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வது என்பது. புறத்தில் உள்ள பொய் தெய்வங்களை அல்ல மெய்யான தெய்வத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.அந்த மெய்யான தெய்வம் எங்கே உள்ளது.? அவரவர் சிரசிலே உள்ளது .அது அகம் என்ற இடத்தின் உள்ளே உள் ஒளியாக (ஆன்மாவாக ) உள்ளது.அவற்றை இடைவிடாது தொடர்பு கொள்ளபவர்களுக்கு பொருள் மீது ஆசை என்னும் இச்சை வராது.  அதைத்தான் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ  என்கிறார் வள்ளலார்.

பொருள் இச்சை உள்ளவர்களுக்கு பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை .கொலை.பயம் வந்து கொண்டே இருக்கும் இறுதியில் மரணம் என்னும் பிணி வந்து ..  மெய்ப் பொருள் என்னும் ஆன்மாவானது உடம்பை விட்டு வெளியே சென்று விடும்.அதற்குப் பெயர்தான் மரணம் என்பதாகும். மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருள் மருந்தை பெற்று உடம்பு எல்லாம் செல்லும்படி உண்ண வேண்டும்.

அருள்தான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் உடையது.

வள்ளலார் அருளை உண்டு மரணத்தை வென்ற வழியைச் சொல்லுகின்றார்..

661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே
667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
668. சிற்சபை நடுவே திருநடம்  புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே !

சிற்சபை நடுவே திரை மறைப்பின் உள்ளே இருக்கும்  அற்புத ஆனந்த அருள் மருந்தை உண்டால் மட்டுமே மரணம் என்னும் பெறும் பிணி நீங்கும்.

அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது தான் பொருள்  என்பதை அறிவால் அறிந்து பொருளை விளக்கினால் மட்டுமே அருள் கிடைக்கும்.

பொருளை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க சொல்வதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும். இதுதான் உளவு ...

பொருள் உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதால் அவற்றை விரும்பாமல் வாழ்ந்தேன் என்கிறார் வள்ளலார்.

பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதிவெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.!

பொருளை நினைத்தாலே உவட்டினேன் என்கிறார்.வாந்தி வருவதுபோல் உள்ளன என்கிறார்...

நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு அவைகளை கலைந்து வள்ளலார் சொல்லியுள்ள வண்ணம் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே அருளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

நான் பொருள் மீது இச்சை இல்லாமல்.பயம் இல்லாமல்.வள்ளலார் காட்டிக்கொடுத்த சுத்த சன்மார்க்கப் பாதையில் பின்பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளேன்.என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருமே என் ஆன்மநேய உறவுகள்.

சிந்திப்போம் செயல் படுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு