வியாழன், 14 செப்டம்பர், 2017

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி;
             ஆன்ம உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
            அறிவுருவான கடவுள் அறிவைப் பெறவேண்டுமானால் ;
    நமது இந்திரிய அறிவு,கரண அறிவு,ஜீவஅறிவ,ஆன்மஅறிவு,அருளறிவு இவைகளைக்கடந்து சென்றுதான் மேலான கடவுள் அறிவைப் பெறமுடியும்;
      அப்படி என்றால் "அறிவை அறிவால் அறியும் அறிவானப் பொதுவாகிய கடவுளைப்" பற்றி முழுமையாக அறிந்து தெளிந்தால்தான் நாம் கடவுள் அறிவை தடையன்றிப் பெறுவதற்கு ஏதுவாகும்;
         
            அதற்கு கடவுளைப்பற்றிய விஷயத்தில் தெளிவு வேண்டும் ;
கடவுளின் "நாம,ரூப,சொரூபத்தை "அறிந்து தெரிந்து தெளிந்து ஐயமற்றிருக்கவேண்டும்;
         புறத்தில் கடவுள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும்  மார்க்கத்தைப் பற்றியிருக்கவேண்டும்;
         
        கடவுள் உண்மையை வெளிப்பட தெரிவிக்காத மார்க்கத்தில் இருந்து நமது காலத்தை விரயம் செய்து ,
  பிறப்பு இறப்பை நீட்டித்து வீண்போகக்கூடாது;
 
      மார்க்கத்தை நடத்துபவரின் தரத்தையும்,
அந்த மார்க்கத்தின் கொள்கைப்படி அவர்  கடவுள் பூரண ஞானத்தைப் பெற்றுக்கொண்டு கடவுள் நிலையை அடைந்தவரா ? அடைந்து காட்டியவரா ?என்பதையும் அறிந்து அவர்காட்டுகின்ற மார்க்கத்தில் இணைந்து  ,அவர் வகுத்த நெறியைக் கடைபிடித்து ,அந்த நெறிப்படி வாழ்ந்து நாமும் அவரைப்போன்றே அருளைப் பெறுவதற்கு முயன்றிடுதல் வேண்டும்;

    அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளுடைய திருவுளச் சம்மதத்துடன் வருவிக்கவுற்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான்,
      ஆன்மாக்களாகிய நமது வாழ்வு அழிந்துவிடாமல் மரணத்தை தவிர்த்துக்கொண்டு,ஆண்டவருடைய பரிபூரண அருளைப் பெற்றுக்கொண்டு இவ்வுலகிலேயே நிலையான "அனக"அருள் வாழ்க்கை வாழ்ந்திடவேண்டும் என்ற பெருங்கருணையில் ,
     
       எல்லாம் வல்ல ஆண்டவரின் பூரண அருளைப் பெற்றுக்கொண்டு ,
 அவ்வருளே வடிவாய் இருந்து ,
      மரணத்தை தவிர்த்துக்கொண்டு முத்தேகச் சித்தியுடன் ஒளியுடம்பு பெற்றுக்கொண்டு,
 இவ்வுலகை ஐந்துதொழில் செய்யும் வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு,
     தாம் பெற்ற "அருட்ஜோதி இயற்கை உடம்பைக்"கொண்டு இவ்வுலக உயிர்திரள்கள் எல்லாம் மருவிக்கலந்து நிறைந்து இன்று ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் இருந்துகொண்டு இவ்வுலகில் "சுத்தசன்மார்க்கத்தால்" அருளாட்சி செய்கின்றார்கள்;

    தாம்பெற்றுக்கொண்ட அந்த பெரும்பேற்றை இவ்வுலகவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணையுடன்,
            இவ்வுலகத்திலுள்ள பிரிந்துகிடக்கும் சமய மதமார்க்கங்களை எல்லாவற்றையும் ஒருநிலைப் படுத்தி "சுத்த சன்மார்க்கம் "என்ற ஒருகுடைக்குள் கொண்டுவந்து இவ்வுலகவருக்கு அருளவிளக்கம் செய்து ,அவர்கள் அனைவரும் கடவுள் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற பெருநோக்கத்தில் இன்று இவ்வுலகில் சுத்தசன்மார்க்கத்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நடத்திக்கொண்டகின்றார்கள்;

      நாமும் இதுவரை வழிதுறை தெரியாமல் வீணில் காலத்தை விரையாமாக்கி மாண்டு மடிந்ததுப் போல் இல்லாமல் , இப்பிறவியல் இல்லாவிட்டாலும் இனி வரும் பிறவியிலாவது கடவுளின் பூரண அருளைப் பெற்று நிலையான அழிவற்ற அருள் வாழ்க்கை வாழ்வதற்கு சுத்தசன்மார்க்கத்தில் இணைவோம் , சுத்தசன்மார்க்க சுகப்பெருநிலையைப் பெறுவோம்;
...........நன்றி;
............வள்ளல் மலரடி வாழ்க வாழ்க;

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு