திங்கள், 18 செப்டம்பர், 2017

சுத்த சன்மார்க்கம் என்பது என்ன !

சுத்த சன்மார்க்கம் என்பது என்ன !

வள்ளலார் சிறு வயதில் இருந்தே உண்மையான கடவுளைத் தேடினார் .

சமய மதங்களில் பற்று வைக்கவில்லை.சமய மதங்களில் சொல்லிய காட்டிய தெய்வங்களின் பெயரில் நிறைய பாடல்களை எழுதினார்.வணங்கினார். மிகுந்த ஒழுக்கத்தை கடைபிடித்தார்.ஒவ்வொரு நாளும் அறிவு விளக்கமும்.ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் கூடிக் கொண்டே இருந்தன.

சமய மதங்களில் சொல்லி உள்ள கடவுள்கள் யாவும் தத்துவங்களேத் தவிர உண்மையான கடவுள்கள் அல்ல என்பதை அறிந்நார்.

மேலும் இரவு பகலாக உண்ணாமல் உறங்காமல் உண்மைக் கடவுள்த் தேடிக் கொண்டே இருந்தார்.அந்த காலக்கட்டத்தில் இறைவன் அசரீரியாக உண்மையான வழிகளைக் காட்டினார் வெளிப்படையாகச் சொன்னார்.

இராமலிங்கம் நீ என்னைக் காண வேண்டுமானால்.மரணத்தை. வென்றால் மட்டுமே என்னைக் காண முடியும் என்ற உண்மை செய்தியை இறைவன் வெளிப்படுத்தினார்.அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கேட்கின்றார்.

இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று ஜீவ காருண்யம் என்னும் ஏழைகளின் பசியைப் போக்குவது.மற்றொன்று சத்து விசாரம் என்பதாகும் அதாவது இடைவிடாது மனத்தை சிற்சபையின் கண் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இரண்டு வழிகளைக் காட்டினார்.இவை சத்தியவான் வார்த்தை என்பதை உணர்ந்த வள்ளலார் அவற்றை சிரமேற் கொண்டு செயல்பட்டார்.

முதலில் ஜீவகாருண்ய பணியைத் தொடங்கினார்.உலகில்  உள்ள ஜீவர்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற இறைவன் கட்டளையை நிறைவேற்றினார்.

வள்ளலார் பதிவு செய்து பாடல் !

என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்சாலையிலே வாஎன்றான் தான்.

மேலே கண்ட பாடலின்படி சத்திய தருமச்சாலையைத் தோற்றுவிக்கின்றார்.
அதற்க்காக வடலூர் மக்களிடம் 80.காணி நிலம்(இடம்) பெற்று  பசித்த ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதற்கு..1867.ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11.ஆம் தேதி அன்று.சத்திய தருமச்சாலையை நிறுவினார்.அவை அன்றிலிருந்து இன்றுவரை அணையா அடுப்பாக  பசிப்பிணியை சுட்டு எரிக்கும் நெருப்பாக  எரிந்து கொண்டு பசிப்பிணியை இடைவிடாது அகற்றிக் கொண்டு உள்ளது.

இறைவனிடம் அருளைப் பெற இறைவன் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அருள் கோட்டையின் கதவைத் திறந்து உள்ளே செல்ல அருள் என்னும் சாவியைப் பெறவேண்டும்  என்ற வாக்கு மூலத்தின் படி தருமச்சாலையைத் தோற்றுவித்து.பசிப்பிணியைப் போக்கி  வள்ளலார் அருள் என்னும் சாவியைப் பெற்றார்.

சத்விசாரம் என்பது!

இறைவனிடம் அன்பைப் பெறுவது.

கோட்டையின் சாவியைப் பெற்றார் .கோட்டைக்குள் செல்ல வேண்டுமானால் இறைவனிடம் இடைவிடாது அன்பு கொண்டு காதலிக்க வேண்டும்.காதல் என்ற அன்பு முதிர்ந்து ஆன்மாவை பரமான்மா அணைத்து அனுபவிக்க வேண்டும்.அந்த தருணத்தில் அன்பு அருள் ஆனந்தம் பெறுகும்் அந்த சுத்த உஷ்ணம் கிடைத்தால் மட்டுமே கதவு திறக்கும் ் அந்த சுத்த உஷ்ணத்தினால்.மூடிக்கிடந்த  மடல் போன்ற மூலை கொஞ்சம் கொஞ்சமாக .. மலர்ந்து விரிந்து காட்சித் தரும்.அது தருணம்  உள் ஒளியான ஆன்மா மலர்ச்சி அடைந்து.நெகிழ்ச்சி அடைந்து.இரக்கம்.தயவு.கருணைக் கொண்டு.அன்பு நிறைந்து விரியும் பொழுது ஊற்றுபோல் அமுதம் சுரந்து திரவம் போல் வெளியே வரும்.இதற்குப் பெயர்தான் அருள் சுகம் என்பதாகும்.

உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட வெள் ஒளி காட்டிய மெய் அருட் கனலே என்பார் வள்ளலார்.

மேலும்

அருள் அமுதம் அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெரும்ஜோதி!
என்பார் வள்ளலார்.

முழுமையாக அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு வைத்து உறவு கொள்ளும் போது.அந்த  இன்பத்தால் அந்த அருள் சுகத்தால் இன்பம் பொங்கி ததும்பி  முழுமை அடைகின்ற போதுதான் அருள் சுரக்கும். அந்த இன்பத்தின் வாயிலாகத்தான் அருள் பெற வேண்டும் பின்பு இறைவன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றால் தான் உண்மையான இறைவனைக் காண முடியும்.இவைதான் சத்விசாரம் என்பதாகும்.

இந்த இரண்டு வழிகளையும் இறைவன் ஆணைப்படி முழுமையாக கடைபிடித்தார் வள்ளல் பெருமான்.

கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டது. கண்டார் களித்தார் கலந்து கொண்டார்.
உண்மையான இறைவன் யார் ? என்பதை உலக மக்களுக்குத் தெரியப் படுத்தினார்

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவேஇத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே..!

காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனதுகடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவேசித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியேபலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.!

மேலே கண்ட பாடல்களின் வாயிலாக உண்மையான காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

ஆண்டவரே.. தன்னுடைய. உண்மையான பெயரை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று.வள்ளலாருக்கு ஆணையிடுகின்றார்

ஆண்டவர் ஆணையின்படி.வடலூருக்கு அடுத்த  மேட்டுக்குப்பம் என்னும் இடத்தில்..22-10-1873.ஆம் வருடம் சமரச சுத்த சன்மார்க்க...உலகை கட்டி ஆளும்  நீதிக்   கொடியை ஏற்றி.மகா உபதேசம் செய்கின்றார்.அந்த நாளில் தான் ஆண்டவரின் முழுப்பெயரை வெளிப்படுத்துகின்றார்....

அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி.!

என்னும் மகா மந்திரம் என்னும் மகாவாக்கியத்தை வெளிப்படுத்துகின்றார். அந்த அருட்பெரும்ஜோதி என்னும் அருள் பேர் ஒளிதான் உண்மையானக் கடவுள் என்பவராகும்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகைக்கு வருகை புரிய வைத்தவர் தான் வள்ளலார்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ஒளி தேகத்தை கொடுத்து தன் வசமாக இணைத்துக் கொண்டார்.

வள்ளலார் பாடல் !

தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியேபொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளேபுத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.!

என்றும் மேலும்.

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனதுபேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமேமின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கேவெளியாகும் இரண்டரைநா
 ழிகைகடந்த போதே.!
 
என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தன் உடம்பிலே கலந்த நேரத்தையும் நாளையும் குறிப்பிட்டு .ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சொல்லிவிட்டுதான் இறைவனுடன் கலந்து உள்ளார் .

வள்ளலார் இறைவனுடன் கலந்த காலம்.

30-1-1874.ஆம் நாள் (தமிழ் ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 நாள்) வெள்ளிக்கிழமை.அன்று முத்தேக சித்திப் பெற்றார்.

எந்த சத்தியாலும்.மற்றும் தீய சத்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்பதையும் பதிவு செய்துள்ளார் .அந்த பாடல் !

காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலேவேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கேஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

உலக மக்கள் அனைவரும் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு.இரக்கத்தோடும்.உருக்கத்தோடும்.நெகிழ்ச்சியோடும்.மகிழ்ச்சியோடும் அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று.அருளை அனுபவித்து ஆன்ம இன்ப லாபத்தை அடைந்து.மரணத்தை வென்று பேரின்ப லாபத்தைப் பெற்று என்றும் அழியத பேரின்ப சித்திப் பெரு வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


விரிக்கில் பெருகும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு