ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அருட்பெருஞ்ஜோதி;

அருட்பெருஞ்ஜோதி;
                       "அறிவு ஆறு"

அதற்கு மேல் அருள் அறிவு அதுதான் உண்மையை அறியும் அறிவு.


அதற்குமேல் கடவுள் அறிவு.கடவுள் அறிவு விளங்கினால் மட்டுமே கடவுளைக் காண முடியும்.

ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
      ஆன்மாக்களாகிய நமக்குள் கடவுள் உயிருக்குள் உயிராகவும், உணர்வாகவும் இருக்கின்றார்கள்;
       உணர்வு என்பது உணர்தல் ,
இந்த உணர்வே அறிவு ,
 கடவுள் அனைத்து உயிர்களுக்கும் அவற்றின் வினைகளைப் பொறுத்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் செய்பவராய் இருக்கின்றார்கள்;
    இன்பத்தையும் துன்பத்தையும் பார்க்க இயலாது உணர்ந்து அனுபவிக்கமட்டுமே முடியும்;
     இறைவன் எல்லா உயிர்களுக்கும் இன்பத்தைக்கொடுத்து அனுபவிக்கச்செய்பவராய் அனுபவத்தில் விளங்குகின்றவராய் இருக்கின்றார்கள்;
   அறிவு என்பது ஐந்து புலன்களாகிய கண்,காது,மூக்கு,நாக்கு,உடம்பு முதலிய உடல் உறுப்புகளால் உணரப்படுகின்ற உணர்ச்சிகளாகும் ,;

     அறிவென்பது சிறிதும் இல்லாமல் அஞ்ஞானஇருளில் சிற்றணுப்பசுவாக கிடந்த ஆண்மாக்களுக்கு அவற்றின் உள்ளொளியாக இருந்து முதன்முதலில் ஓரே ஒரு அறிவு விளங்கக்கூடிய அதாவது அறிவு என்றால் உணர்வு ,
   அது என்ன உணர்வு என்றால் "தொடு உணர்வு "  என்ற ஓரறிவு இருக்கக்கூடிய தாவரமான புல், பூண்டு,செடி,மரம் முதலிய பிறவகளில் பிறக்கச்செய்து,
 அந்த ஓரறிவு விளக்கம் பூரணமாகும் வரை அதே தாவரப்பிறவியில் காலில் மிதிப்படும் புல்லினம் முதல் கடவுளுக்கு சாத்துகின்ற பூவாய் விருட்சம் வரைப் பலப்பிறவிகள்  எடுத்து எடுத்து அப்பிறவி ஓரறிவு நிறைவுற்றவுடன்,

  அடுத்து தொடு உணர்வு ,சுவைஉணர்வு என்னும் இரண்டு அறிவுள்ள  சிப்பியாய் முத்தாய் இவற்றில் இன்னும் பலப்பிறவிகளைப் பிறக்கச்செய்து அந்த இரண்டாவது அறிவு விளக்கம் பெற்று பூர்த்தியானவுடன் ,

அடுத்து தொடுஉணர்வு,சுவைஉணர்வு,பார்க்கும் உணர்வு என்னும் மூன்றறிவு உள்ள எறும்பு, ஈக்கள் முதலியப் பிறவிகளைக் கொடுத்து அந்தப்பிறவியிலும் பல்வேறு உயர்ந்த தாழ்ந்த பிறவிகளில் பிறக்கச்செய்து அந்த மூன்றாவது அறிவு பூரணமானவுடன் ,

அடுத்து தொடுஉணர்வு,சுவைஉணர்வு,பார்க்கும் உணர்வு,கேட்கும் உணர்வு உடைய பறவைகளாய் அவற்றிலும் உயர்ந்த தாழ்ந்த பிறவகளாய் பலப்பிறவிகள் பிறக்கச்செய்து அவற்றிலும் அந்த நான்கு அறிவு நிறைவுபெற்றவுடன் ,

அடுத்து தொடுஉணர்வு,சுவைஉணர்வு,பார்க்கும் உணர்வு,கேட்கும் உணர்வும்,நுகரும் உணர்வு ஆகிய ஐந்து உணர்வுகளுடைய விலங்குளாகவும் அவற்றிலும் உயர்ந்த தாழ்ந்த எனப் பலப்பிறவிகளில் பிறந்து பிறந்து அந்த ஐந்தறிவு பூர்த்தியானவுடன் கடவுள் பெருங்கருணையால் ,

அடுத்து மேற்கண்ட ஐந்து உணர்வுகளோடு மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் அந்தகரணங்கள் வழங்கப்பட்டு,
  ஒரு செயலை செய்வதற்கு முன்பு அக்காட்சியை கண்ணால் கண்டு,
பிறகு அக்காட்சி மனத்தால் நினைக்கப்பட்டு,
புத்தியால் விசாரிக்கப்பட்டு,சித்தத்தால் நிச்சயிக்கப்பட்டு,பிறகு அகங்காரத்தால் செயல்படுத்தப்படுகின்றது இவை அனைத்தும் ஒரு செயலின் நன்மைத் தீமைகளை விசாரித்து செய்யலாமா வேண்டாமா என்று விவரித்து அறியக்கூடிய ஆறாவது அறிவாகிய "பகுத்தறிவாகும்",
   இந்த அறிவின்மூலம்தான் ஆன்மாக்களாகிய" நாம் யார்" என்று "தன்னை அறிந்து",நம்மை இயக்கக்கூடிய நமது தலைவனாகிய கடவுளை அறிந்து அக்கடவுள்நிலையறிந்து முடிவில் அக்கடவுள்மயமாக மாறிடுவதற்கு இந்தப் பகுத்தறிவைக்கொண்டுதான் மேலும் பலஅறிவுகள் ஆன்மநிலையில் கடந்து முடிவில் கடவுள் அறிவைப் பெறவேண்டும்;

     இப்படி உயர்வுடைத்ததாகிய ஆறறிவு பெற்றுக்கொண்ட மனிதர்களாகிய நாம் எத்தனை ஆயிரம் பிறவிகள் கடந்து எத்தனை லட்சம் ஆண்டுகள் காத்துக்கிடந்து இந்த மனிதப்பிறவியைப் பெற்றுக்கொண்டோம் என்பதை சற்று சிந்தித்து  ,நம்மை சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும் நாம் இதற்குமுன்பிறவியில் கடந்துவந்தப் பிறவிகள்தான் என ஆன்ம உணர்வோடு அவற்றின்மீது கருணைக்கொண்டு ,
அவைகளும் நம்மைப்போன்றே இவ்வுலகில் வாழ்வதற்கு கடவுளால்"படைக்கப்பட்டவை என்பதை அறிவால் உணர்ந்து அவற்றின் வாழ்வை அழிக்க நினையாமல்
எவ்வுயிரையும் தம்முயிர்போல் பாவிக்கும் குணம்கொண்டு  ,அந்த உயிர்குலத்திற்கு தொண்டுசெய்து கடவுள் அருளைப்பெற விழைவோம்;

.....நன்றி;
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க;
வள்ளல் மலரடி வாழ்க !வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு