திங்கள், 25 செப்டம்பர், 2017

தலைமைச் சங்கம் எங்கு உள்ளது ?

தலைமைச் சங்கம் எங்கு உள்ளது ?

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு அன்பான வந்தனம்.

1873.ஆண்டு ஆடி மாதம் 5 ஆம் தேதி அன்று வள்ளலார் வெளியிட்டது.!

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்.சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க தருமச்சாலை என்றும்.சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்.பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் கட்டளை யிட்டுள்ளார்.

வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தான் தலைமைச் சங்கம்.மற்ற சங்கங்கள் யாவும் கிளைச் சங்கங்களாகும்.

வள்ளலார் தோற்றுவித்த தலைமைச் சங்கம் இப்போது தமிழ்நாடு இந்து அறநிலைய ஆட்சி துறையிடம் உள்ளது.அதை வள்ளலார் தெய்வ நிலையங்கள் என்ற பெயரில் உள்ள  தருமச்சாலை நிர்வாகத்திடம் உள்ளது.அதில் சன்மார்க்கிகள் உறுப்பினராக சேர்ந்து வள்ளலார் கொள்கைப்படி செயல் பட முயற்ச்சி செய்ய வேண்டும்.அப்படி அவர்கள் செயல்பட தவறினால் அதைத் தட்டிக் கேட்டு செயல்பட பாடுபட வேண்டும்.இறைவன் திருவருள் காரியப்படும் போது சன்மார்க்கிகள் பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்ய வேண்டும்.அது தான் தலைமைச் சங்கம் என்பதாகும்.

வள்ளலார் தோற்றுவித்த தலைமைச் சங்கத்திற்கு.அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் தலைவர்..வள்ளல்பெருமான் செயல் தலைவர்.அதனால் தான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்று  வள்ளலார் சொல்லுகின்றார்.

வள்ளலார் பாடல்.!.

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவசன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்என்மார்க்கம் நின்மார்க்க மே.!

கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்எந்தாய் கருணை இது.!

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவசன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!

மேலே கண்ட பாடல் பதிவுகளின் படி சன்மார்க்கச. சங்க தலைவர் யார் ? என்பதையும்.செயல் படுத்த வேண்டியவர் யார் என்பதையும். தெளிவுப் படுத்தி உள்ளார்.

இனிமேல் தலைமைச் சங்கம் என்று யாரும் பெயர் வைக்கவோ.உரிமை கொண்டாடவோ கூடாது.

எங்களைக் கேட்டுத்தான் மாநாடு நடத்த வேண்டும்.விழாக்கள் நடத்த வேண்டும் என்ற உரிமையை வள்ளலார் யாருக்கும் கொடுக்கவில்லை.

வாயடங்கி மனம் அடங்கி வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டுமேத் தவிர எதிலும் மூக்கை நுழையவிட கூடாது.

தலைமைச் சங்கத் தலைவன் என்று வெளியில் எவரும் சொல்லக் கூடாது.அப்படி தான் தோன்றித்  தனமாக சொன்னால் அவர்களை வள்ளலார் ஓரம் கட்டிவிடுவார்.

தலைமைச் சங்கம் என்பது தருமச்சாலை நிர்வாகம் மட்டுமே.அதன் தலைவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மட்டுமே என்று வள்ளலார் தெளிவாகச் சொல்லி விட்டார்.

அந்த நிர்வாகம் தவரான பாதையில் சென்றால் அவற்றை ஒழுங்குப் படுத்த பாடுபடுவது எல்லா சன்மார்க்க அன்பர்களின் கடமையாகும்...உரிமையாகும்.

இனிமேல் தலைமைச் சங்கம. என்ற பெயர்.தலைவர் என்ற பெயர்  வெளியில்  எங்கும் இருக்க சன்மார்க்கிகள் அனுமதிக்க கூடாது.

 தனிநபர் ஆதிக்கம் சன்மார்க்கத்தில. கிடையாது.தயவு உடையவர்கள் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு