திங்கள், 15 ஜூன், 2015

தந்தை பெரியார் சொல்லியது என்ன ?

தந்தை பெரியார் சொல்லியது என்ன ?


வள்ளலார் சொல்லியதைத்தான் பெரியார் சொன்னார் .

வள்ளலார் எழுதிய அருட்பாவைப் படித்து அதில் உள்ள கடவுள் மறுப்புக் கொளகைகளை பார்த்தபிறகுதான் பெரியாருக்கு அறிவு விளக்கமே உண்டானது.

நம்முடைய தமிழ் நாட்டில் இப்படி ஒரு அருளாளரா ?என்று வியந்து போனார் பெரியார்.

பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைகள் யாவும் வள்ளலாரிடம் கற்றுக் கொண்டதாகும்.

கடவுளை கற்பித்தவன் பைத்தியக் காரன் என்றார் வள்ளலார் .கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார்.

கடவுள் இல்லை என்பது இல்லை!.ஆனால் மனிதன் கடவுளை உருவாக்க முடியாது என்பதுதான் வள்ளலாரின் கொள்கைகளாகும்.

கடவுளுக்கு உருவம் இல்லை ! அவர் ஒளியாக உள்ளார் ஒளியானக் கடவுளை எப்படி உருவமாக படைக்கமுடியும் என்பதைத்தான்

வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையைக் கட்டி அங்கு ஒளியே கடவுள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் .

அந்த சபையின் வெளிச்சுவரில் புலால் உண்பவர்கள் உள்ளே செல்ல அனுபதி இல்லை என்று எழுதி வைத்துள்ளது..
பெரியார் வடலூர் சென்று சத்திய ஞான சபையை உள்ளே சென்று பார்க்க ஆவல் கொண்டு சென்றார் .வெளியில் எழுதி உள்ளதைப் பார்த்து அதை மதித்து உள்ளே செல்லாமல் வந்துவிட்டார் .

வள்ளலாரின் கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட பெரியார் வள்ளலாரின் கொளகைகளை வைத்து மனித சமுதாயத்திற்கு பகுத்தறிவு கொள்கை என்ற ஒரு புதிய கோணத்தில் மக்களுக்கு அறிவு சார்ந்த கருத்துக்களை விதைத்தார்.

வள்ளலார் எழுதிய திரு அருட்பா .சமய மத வாதிகளின் பிடியில் சிக்கி இருந்த காலத்தில் பெரியார் அவர்கள் வள்ளலாரின் கொளகைகளை வெளியே கொண்டுவந்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல !
உள்ளபடி மனித சமுதாயம் பெரியாரைப் பாராட்டவேண்டும்.

இன்னும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் சமய மத வாதிகளின் கையில் சிக்கிக் கொண்டு உள்ளது அதை அவர்களுக்கும் புரிய வைத்து வள்ளலாரின் தனித்தன்மை கொள்கைகளை நெறிப்படுத்த வேண்டும்.

கற்பனைக் கடவுள்களின் வழிப்பாட்டில் புதைந்து கிடக்கும் மக்களை திருத்தி உண்மையான வழிபாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் அழுத்தமான கொள்கைகளில் ஒன்றாகும். .

அப்போதுதான் மனிதன் புதிய புனித மனிதனாக வாழ முடியும்.
சாதி,சமயம்,மதம் ,கடவுள் ,தெய்வம் எல்லாம் மனிதர்களால் தோற்று வித்தது...கடவுளால் தோற்றுவிக்கப் படவில்லை.மனிதன்தான் தோற்றுவித்து உள்ளான் .

அதனால்தான் கடவுளைக் கற்பித்தவன் பைத்திககாரன் என்றார் வள்ளலார்.அதையே முட்டாள் என்றார் பெரியார்.

வள்ளலாரின் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்தவர் பெரியார்.ஆனால் ஒன்றை மட்டும் கோட்டைவிட்டார் .மாமிசம் உண்பதை அவரால் விடமுடியவில்லை. அதனால் அவருடைய கொள்கைகள் முற்றும் மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

மாமிசம் உண்ணாமல், போதித்து இருந்தால் அவருடைய கொள்கைகள் இன்னும் வேகமாக மக்கள் மத்தியில் வேறு ஊன்றி இருக்கும்.

வள்ளலாரின் கொள்கை நாத்திகமும் இல்லை ! உலக ஆத்திகமும் இல்லை !. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்கும் புனிதமான சுத்த சன்மார்க்க வாழ்க்கை நெறியாகும்.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியானது ஒரு தனித்தன்மை வாய்ந்தது.அதற்கு ஈடு இணையானது உலகில் வேறு எதுவும் இல்லை.
இறுதியில் வள்ளலார் சொல்லுவது !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசிக் கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு

என்பார் அதற்கு என்ன விளக்கம் என்ன என்றால் .

கடவுள் இல்லை என்பவர் நாக்கு முடை நாக்கு என்பது, பேசமுடியாத நாக்கு இல்லாத ஊமையன் என்பதாகும்.

அடுத்து நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்பது .நாக்கு ருசிக்காக புலால் உண்பவன் மலம் உண்பதற்கு சமம் என்கின்றார் அதாவது துர்நாற்றம் உடைய மலத்தை உண்பதற்கு சமமாகும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

அதனால்தான் இறைவன் படைத்த உயிர்களை கொலை செய்வதும் பாவம் .அதனுடைய புலாலை உண்பதும் பாவம் என்கின்றார்.
புலால் உண்பவர்களுக்கு கடவுளைப் பற்றி பேச அருகதை இல்லை என்கின்றார் வள்ளல்பெருமான்.

உலகில் உள்ள எந்த மதமாக இருந்தாலும்,எந்த சமயமாக இருந்தாலும்.எந்த சாதியாக இருந்தாலும் அவர்கள் உயிர்க் கொலை செய்வதையும் அதன் புலாலை ( மாமிசம் ) உண்பதை ஆதரிக்க படுவார்களே ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல ! அவர்கள் அருளாளர்களும் அல்ல ! அவர்கள் உண்மையான இறைவனை அறிய தகுதி அற்றவர்கள் என்பார் வள்ளல்பெருமான்.

மனித தேகம் எடுத்த அனைவரும் உயர்ந்த அறிவைப் பெற்றவர்கள் .அறிவைக் கொண்டு அறிவைத் தேடுங்கள் உண்மைகள் தானே வெளிப்படுத்தும்.

கடவுள் இல்லை என்பது ஏமாற்று வேலை !
கடவுள் பலஉண்டு என்பதோ பைத்தியக் காரத்தனம் !
கடவுள் ஒருவர் என்பதே உண்மை அறிவு !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு