திங்கள், 22 ஜூன், 2015

இறந்த பிணத்தை புதைக்கும் இடம் !

இறந்த பிணத்தை புதைக்கும் இடம் !

ஒரு உடம்பில் இருந்து உயிர் பிரிந்தால் அதற்கு பெயர் பிணம் என்பதாகும் .

அந்த பிணத்தை புதைக்கும் இடம் இடுகாடு என்றும் சுடுகாடு என்றும் பெயர் வைத்துள்ளார்கள்

உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் இறந்த உயிர்களின் இறைச்சியை அதாவது மாமிசத்தை தன்னுடைய வயிற்றில் புதைக்கின்றார்கள்

அதற்கு என்ன பெயர் .
நம்முடைய வயிறு என்ன சுடுகாடா என்பதை சிந்திக்க வேண்டும்.

இறந்த உயிர்களின் இறைச்சி எதற்கும் பயன்படாது என்று ஊரைத் தள்ளி புதைக்கின்றார்கள் அதைப் பற்றி நாம் சிந்திக்காமல்.துர்நாற்றம் உள்ள அந்த இறைச்சியை நம்முடைய வயிற்றிலே புதைப்பது என்ன ஞாயம் என்பதை அறிவுடையவர்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதன் சாத்வீக உணவான தாவர உணவுகளை உட்கொள்ளாமல் அசுத்த பூதகாரிய உணவான துர் நாற்றம் பிடித்த மாமிச உணவை உட்கொள்ளுவதால் அறிவு மழுங்கி தீராத வியாதிகளால் அவதிப்பட்டு அழிந்து போகிறான் .

ஆகவே நம்முடைய வயிற்றை சுடுகாடாக மாற்றாமல் அருளைப்பெரும் தேகமாக மாற்றவேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான்.

கடவுளின் உண்மையை அறிவதற்கும்,கருணையான அருளைப் பெறுவதற்கும்,துன்பம் இல்லாமல் வாழ்வதற்கும் மாமிசம் அதாவது இறைச்சி தடையாக இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
மாமிசம் உண்பவர்களுக்கு, புன்மனம்தான் வேலை செய்யும் .நன்மனம் வேலை செய்யாது.

மாமிசம் உண்பவர்களுக்கு எவ்வளவு அன்பு தயவு,கருணை இருந்தாலும் கடவுள் ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களுக்கு கர்ம வினைகள் தீரவே தீராது .துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.
கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார்.

ஆதலால் உயிர்க்கொலையும் அதன் மாமிசத்தையும் உண்ணாமல் வாழ்பவர்களே நல்ல மனிதர்கள் .அவர்களை இறைவன் எக்காலத்திலும் கைவிடமாட்டார்..பாதுகாப்பு அரணாக விளங்கிக் கொண்டே இருப்பார் .
உலகத்தில் அதிகமாக தவறு செய்கிறவர்கள் அனைவரும் புலால் உண்பவகளாகவே இருப்பார்கள்.
.
அவர்கள் கொடூரமான மிருக குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள் .
கொலை கொள்ளை, கற்பழிப்பு தீவிரவாதம், பயங்கரவாதம்,நக்ஸ்லைட்டுகள் உயிர்க்கொலை செய்பவர்கள் அனைவரும் புலால் உண்பவர்களே

அவர்களுக்கு இரக்க குணமே சுட்டு போட்டாலும் வராது .காரணம் அவர்கள் உண்ணும் உணவிற்குத் தகுந்தாற்போல் உணர்வுகள் மாறிவிடும்.

எனவே நம்முடைய வயிற்றை சுடுகாடாக இடுகாடாக மாற்றாமல் சாத்வீக உணவை உட்கொள்ளும் வயிறாக மாற்றவேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு