புதன், 24 ஜூன், 2015

உண்மையான தாய் யார் ? தந்தை யார் ?

உண்மையான தாய் யார் ? தந்தை யார் ?

நமக்கு உண்மையான உடம்பைக்  கொடுத்த தாய் ''மாயை'' என்னும் பெண் தன்மை உடைய ஒளியாகும் .

நான் என்னும் ஆன்மாவையும் உயிரையும் கொடுத்தது உண்மைத் தந்தையான அருட்பெருஞ் ஜோதி யாகும் ,..அவை ஆண் தன்மை உடைய அருட் பேரோளியாகும்

உலகியலில்  நமக்கு  தந்தை தாய் ஆகிய இருவரும் உபகாரக்  கருவிகளாகும்..

ஆன்மாவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணின் சுக்கிலத்தில் சேர்த்து .இரண்டு மாதங்களில் உயிரைக் கொடுத்து .பெண்ணின் சோனித உறுப்பினுள் அனுப்பி வைக்கின்றார்.

இரண்டு மாதம் சென்றபின் பெண்ணின் உறுப்பின் வழியாக  உள்ளே கருவறையில் சேர்க்கப்படுகின்றது.

கருவறையில் சென்றதும் மாயை என்னும் பெண்தன்மை உடைய ஒளியினால் பத்து மாதத்தில் உடம்பும் அதற்கு துணையான கருவிகளும்.பஞ்ச பூத சுத்த அணுக்களால்,பயங்கரமான இருட்டு அறையில் உடம்பு என்னும் அழகான வீடு கட்டிக் கொடுக்கப்படுகினறது.

ஆன்மா ஆணின் சுக்கிலத்தில் இரண்டு மாதமும் ,பெண்ணின் கருவறையில் பத்து மாதமும் சேர்ந்து பனிரண்டு மாதத்தில் உடம்பு என்னும் அழகான வீடு கட்டி இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றது.

ஒரு குழந்தை உருவாக பனிரண்டு மாதங்கள்
ஆகின்றன..அவற்றை கணக்கு வைத்துதான் ஒரு வருடத்திற்கு பனிரண்டு மாதங்கள் என்று கணக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே உண்மையான தாய் ''மாயை''.உண்மையான தந்தை ''அருட்பெரும்ஜோதி''யாகும்.

மனிதனாக பிறந்த நாம் உண்மையான தாய் ,தந்தை யார் என்று தெரியாமல் ஆதரவு அற்ற அனாதிகலாய்  வாழ்த்து கொண்டு வருகின்றோம்.

நமக்கு உபகார தாய் ,தந்தையை மதித்து உண்மையான தாய் தந்தையரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

உண்மையான தாய் தந்தையை தொடர்பு கொண்டால் அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம்.

ஆதலால் தான் வள்ளல்பெருமான் .தாயாகி ,தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தனக்கு நிகர் இல்லாத தனித்தலைமை தெய்வம் என்கின்றார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--தான் பெற்ற பேறு என்ற தலைப்பில் .முதல்பாடல்.

உருவமாய் அருவமாய் உபயமுமாய் யலவாய்
ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி ஒருவன் உண்டே அவன்தான்
பெருமையினால் எனை யீன்றான் நான் ஒருவன் தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் .

என்றும் .அடுத்த 14 வது பாடலில்;--

பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்ற உடம்பு இது .

என்பதை தான் அறிந்து மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்...

ஆகவே ஆன்மா என்பது எது என்பதை அறிந்து, உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் வாழ்ந்து வீண் போகின்றோம் என்பதை வள்ளல்பெருமான் நமக்குத் தெளிவுப் படுத்துகின்றார்.

உறுதி கூறல் என்ற தலைப்பில் ;--ஆறாவது பாடல்.

உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரெ
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நன்னுமினோ புண்ணியம் சார்வீரே !

என ;--உடம்பு வந்த வழியும் .உயிர்வந்த வழியும் தெரியாமல்,கண்டது எல்லாம் உண்பதற்கும் தூங்குவதற்கும்,அறிந்து உள்ளீர்கள் .

உங்கள் குரங்கு மனத்தை அடக்கத் தெரியாமல் ,அதை வசப்படுத்தும் வகை தெரியாமல் ,வழி துறை  தெரியாமல், கண்டதை எல்லாம் கேட்டு,பொய்யான வாழ்க்கைக்காக  அலைந்து கொண்டு உள்ளீர்கள் .

இறுதியில் மரணம் வருகின்ற போது எண்ணி எண்ணி அழுது புலம்புகின்றீர்கள் .

மரணம் வருகின்றவர்கள் எல்லோரும் ஏழைகள் தான்,

மரணம் வராமல் தடுக்கும் ஆற்றல் மிகுந்த அருளை கொடுப்பதற்கு நமது தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார் வாருங்கள்,வாருங்கள் என அழைகின்றார் .

உண்மையான தாய் தந்தை யார் ? என்பதை மனிதர்களாக பிறந்த அனைவரும் அறிந்து அருளைப் பெற்று புண்ணி யர்களாக வாழலாம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு