கடவுளை வழிபடும் முறைகள் !
கடவுளை வழிபடும் முறைகள் !
பக்தி என்பது ;--பக்தி காண்டிகள், விக்கிரத்தை வைத்து வழிபடுபவர்கள் .கண்,காது,மூக்கு வாய்,உடம்பின் இந்திரியங்கள் வழியாக வழிபடுபவதாகும்.
கர்ம காண்டிகள் ;--அக்கினியை வைத்து வழிபடுபவர்கள் மனம், புத்தி .சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள் வழியாக வழிபடுபவதாகும்.
யோகிகள் ;--இருதயத்தில் வழிபடுபவர்கள் .ஜீவன் (பிராணன் ) என்னும் உயிரின் வழியாக வழிபடுபவர்கள்.
ஞானிகள் ;--கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார் என்பதை அறிந்து வழிபடுபவர்கள்..ஆன்மாவின் வழியாக வழிபடுபவதாகும்.
மேலே கண்ட வழிபாட்டில் சிறந்தது ஆன்மாவின் வழியாக வழிபடுவதாகும்.
அதற்குத்தான் வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும் ,எவ்விதத்தும்,எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளால் வேண்டும்.என்றார் .
ஆகவேதான் ஆன்ம ஒளி வழிபாட்டை புறத்தில் காட்டுவதற்கு வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை'' அமைத்து,சாதி ,சமயம்,மதம் போன்ற வேறுபாடு இல்லாத, பொது வழி பாட்டு முறையைக் காட்டி உள்ளார் .
எல்லா உயிர்களிலும் இறைவன் ஆன்ம ஒளியாக உள்ளார் .என்பதை மக்களுக்கு போதித்து .''உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்றார் .
அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம் ,..ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார் .
சன்மார்க்கிகள் அகத்தில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொண்டு வழிபடுவதே சிறந்த வழிபாடாகும்.
வள்ளல்பெருமான் சொல்லிய ஜோதி வழிபாட்டை விட்டுவிட்டு மற்ற வழிபாடுகள் செய்பவர்கள் சன்மார்க்கிகள் அல்ல, என்பதை அவரவர்களே புரிந்து கொள்ளவேண்டும்.
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி !
என்னும் பாடல் வாயிலாக சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி விளக்கி உள்ளார் .
இன்னும் சன்மார்க்கிகள் திருந்தவில்லை என்றால் படவேண்டிய துன்பத்தை பட்டே, அனுபவித்தே திருந்த வேண்டியதுதான்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு