திங்கள், 8 ஜூன், 2015

சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணம் செய்யுங்கள்.!

சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணம் செய்யுங்கள்.!

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !

ஆதி காலத்தில் இருந்து சாதி,சமயம்,மதம்,சாத்திரம் போன்ற சூழ்ச்சிகளால் மனிதகுலத்தை பலவகையாக பிரித்து வைத்த கோத்திரம் போன்ற குப்பைகளில் தள்ளி மனித அறிவை மழுங்க வைத்துவிட்டார்கள்.அந்த குப்பைகளை நிரைப்பிக் கொண்டு சண்டையிட்டு வீணாக அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

இனிமேல் அப்படி ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது .

இப்போது உள்ள சட்டங்களாலும்,ஆட்சியாளர்களாலும் சாதியை ஒழிக்க முடியாது.அவர்கள் சாதியை வளர்த்துக் கொண்டு உள்ளார்கள்.சாதிப் பிரிவினையைத் தூண்டி விட்டுக் கொண்டு உள்ளார்கள்.,

இப்போது இயற்கையின் நீயதிப்படி ,சன்மார்க்க கொள்கைப்படி சாதிகள் ஒழிந்து கொண்டு உள்ளது.

எப்படி சாதிகள் ஒழியும் என்றால் காதல் திருமணத்தினால் தான் சாதியை ஒழிக்க முடியும்.

காதலுக்கு சாதி ,சமயம், மதம்,தெரியாது .காதலுக்கு அன்பு மட்டுமே தெரியும்.ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அன்பு செலுத்துகின்ற போது சாதிகள் தானே அழிந்துவிடும்.

இப்போது சாதி,சமய,மதங்களில் விழுந்து தவித்துக் கொண்டுள்ள மக்களைத் திருத்துவதற்காக எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளல்பெருமான் உடம்பில் அமர்ந்துகொண்டு மக்களைத் திருத்திக் கொண்டு உள்ளார் .

இதைத்தான் அருட்ஜோதி வீதியிலே விளையாடல் புரிகின்ற தருணம் என்கின்றார் ..இது நல்லத் தருணம் இது நல்லத் தருணம் அருள் செய்ய இது நல்லத்தருணம்

ஆதலால் மக்கள் இந்த நல்லத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டு அவரவர்கள் தகுதிக்கு தகுந்தாற் போல் காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள். .சாதி,சமயம்,மதம் தானே ஒழிந்துவிடும்.

உண்மையான ஒரேக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி மட்டுமே என்பதை அறிவால் அறிந்து கொண்டு செயல்படுங்கள் எல்லாம் நன்மையாகவே .மகிழ்ச்சியாகவே நடக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு