திங்கள், 8 ஜூன், 2015

பொருள் வேண்டாம் அருள் வேண்டும் !

பொருள் வேண்டாம் அருள் வேண்டும் !

பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றில்லை நான்
படைத்த அப்பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீ தான் கொடுக்கின்ற பொருளை
எறிகளேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம்  காட்டும் நின் அருளைக்
கண்டனன் இனிச்சொல்வது என்னே !

இந்த உலகம் பொருளால் இயங்கிக் கொண்டு உள்ளது .பொருளால் அழிவுவரும் .மரணம் வரும் என்பதை அறிந்து .எனக்கு பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றும் இல்லை.

அப்படியே எனக்கு கிடைத்த பணத்தை பல நேரங்களில் கிணற்றிலும் குளத்திலும் எறிந்தேன் கால்வாயிலும் எறிந்தேன் .

ஏன் வள்ளலால்பெருமான் கிணற்றிலும்,குளத்திலும் எறிந்தார் வேறு யாருக்காவது கொடுத்து இருக்கலாமே என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள் .

உயிரை அழிக்கும் பணத்தை யாருக்கும் கொடுக்கமாட்டார் .அதனால் அவர்கள் அழிந்துவிடுவார்கள்  எனநினைத்து எவருக்கும் வள்ளல்பெருமான் கொடுப்பதில்லை எரிந்து விடுவார் .

அருள் !

அதே நேரத்தில் இறைவன் கொடுக்கும் அருளை எறிவதில்லை.பிறர்க்கு கொடுக்கின்றேன் என்கின்றார் .

இறைவனால் கொடுக்கும் அருள் என்னும் பொருள்,யாரையும்  .எந்த உயிர்களையும், அழிப்பதில்லை. என்பதை நான் கண்டு கொண்டேன் அதனால் பிறர்க்கு கொடுக்கின்றேன் என்கின்றார் .

உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பு எடுத்த நாம் பொருளைத் தேடி அலைந்து பொருளை சம்பாதித்து என்னபயன் ? அந்தப்பொருள் உங்கள் உயிரைக் காப்பாற்றாது .உயிரைக் காப்பாற்றாத பொருளைத் தேடி அலையாமல் ,உயிரைக் காப்பாற்றும் அருளைத் தேடுங்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்.

இந்த உண்மையை அறிந்து இருந்தாலும் போருளுக்காகவே மக்கள் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

பொருளால் இருள் உறும் என்று தெரிந்தே தவறு செய்து கொண்டு உள்ளார்கள் .

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் சாதி,சமயம்,மதங்களின் வழிக் காட்டுதலின் படி வாழ்வதால் வந்த மயக்க நிலைகளாகும்

பொருள்மேல் வெறுப்பு உண்டாகி ,அருள்மேல் விருப்பம் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைநிலையை அடையமுடியும்.

உயர்ந்த அறிவு உள்ள மனிதர்கள் தாழ்ந்த நிலைக்கு செல்லாமல் உயர்ந்த அருள் நிலைக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே மனித பிறவி இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு