வியாழன், 4 ஜூன், 2015

தமிழன் யார் ?

தமிழன் யார் ?

தினைத் துணையும் பேதமின்றிச் ஜீவகாருண்ய வழி சேர்ந்து வாழ
மனத்திருளை மாற்றி அறிவு ஆனந்தத் துரியமலை வள நாடேறி
நினைத்திடவும் முடியாத நிலைக்கு நம்மை அழைத்தானை நேரிலோர் நாள் 
அனைத்து உலகம் அறிவானைத் தமிழர் இன்னும் அரியானை அணிந்து வாழ்வாம் .;----கவியோகி சுத்தானந்த பாரதியார் .எழுதிய பாடல்.

தமிழையும் தமிழின் பெருமையும் பேசும் தமிழ் அறிஞர்கள் .தமிழ் பத்திரிகைகள் .தமிழ் டி,வி சேனல்கள் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை இருட்டடிப்பு செய்து வருகின்றார்கள் .

உலகம் போற்றும் உத்தமர் வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பா என்னும் அருள் நூலைப் பற்றியோ .அவர் எழுதிய தமிழின் பெருமை பற்றியோ இதுவரையில் சன்மார்க்கிகள் தவிர வேறு எவரும் அதனுடைய பெருமையும் அருமையும் தெரிந்து கொள்ளவில்லை.

தமிழ் பத்திரிகைகளும் வள்ளல்பெருமானைப் பற்றியும் அவருடைய உண்மை நிலைகளைப் பற்றியும் வெளியிடுவதில்லை.

கண்ட கண்ட அருவருக்கத்தக்க செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் சன்மார்க்க நிகழ்ச்சிகளையும்.சன்மார்க்க விழாக்கள் ,சன்மார்க்க மாநாடுகள் நடந்தாலும் பத்திரிகையில் வெளியிடுவதில்லை.இவர்கள் எல்லாம் தமிழர்களா ?

ஏன் இந்த அவலநிலை என்று புரியவில்லை.
அவர்களுக்கு பணம் வேண்டும் பணம் கொடுத்தால் எந்த செய்திகளையும் வெளியிடுவார்கள்.

அதேப் போல் டி,வி,சேனல்கள் வேண்டாத அறுவருக்கதக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்கள் வள்ளல்பெருமானின் அருமை பெருமைகளை,
சன்மார்க்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை

இவர்கள் எல்லாம் தமிழர்களா ? தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசும் இவர்கள் எல்லாம் தமிழன் என்று சொலவதற்கு கேவலமாக இருக்கின்றது.

வள்ளல்பெருமானை தெரிந்து கொள்ளாத தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல .பச்சோந்திகள்

உலகம் எல்லாம் உள்ள தமிழர்களும் மற்ற இனத்தவர்களும் வள்ளலாரின் உண்மை நிலையை அறிந்து வடலூரை நோக்கி வந்து கொண்டு உள்ளார்கள்.

ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் .தமிழை காப்பாற்று பவர்கள் தமிழைப் பற்றி பேசும் போலிகள் வள்ளல்பெருமானைப் பற்றியும் அவர் எழிதிய திரு அருட்பாவையும் அறியாமல் என்ன பேசினாலும் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல ! வெறும் வெத்து வெட்டுகள் என்பதை மக்கள் அறிவார்கள் .

வள்ளல்பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தமிழர்கள் அல்ல ! தெரிந்து கொண்டவர்களே தமிழர்கள் .

தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும்.அரசியல் தலைவர்களும் வள்ளலாரைப் பற்றி சிந்திப்பதே இல்லை .இவர்கள் எல்லாம் தலைவர்களா ? இவர்களை நினைத்தால் தமிழ் தலை குனிந்து நிற்கின்றது.

தமிழ் என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவர் வள்ளல்பெருமான்.தமிழ் உலக மொழிக்கு எல்லாம் தந்தை மொழி என்றவர் வள்ளல்பெருமான்.தமிழ் இறைவனால் எழுதப்பட்ட மொழி என்றவர் வள்ளல்பெருமான்.

பணத்திற்காகவும் ,புகழுக்காகவும்.பெருமைக்காகவும்  தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்களா ? இல்லை இல்லை ,அவர்கள் மிருகங்கள் .மிருகங்களை விட கேவலமானவர்கள்.

இனிமேலாவது வள்ளல்பெருமானின் உயர்ந்த ஒப்பற்ற உண்மைகளை,கொளகைகளை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் உங்களை காப்பாற்றும்.இறைவன் உங்களை காப்பாற்றுவார் .

வள்ளல்பெருமானை விட்டுவிட்டவர்கள் தமிழர்களே அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் வள்ளல்பெருமான் எழுதிய ''திருஅருட்பா '' ஒன்றுதான் உங்களுக்கு நல்ல வழியைக் காட்டும்.புரிந்து அறிந்து, தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு