செவ்வாய், 23 ஜூன், 2015

ஜீவ காருண்யம் ஏன் செய்யவேண்டும் ?

ஜீவ காருண்யம் ஏன் செய்யவேண்டும் ?

ஒவ்வொரு ஜீவன்களுக்கும் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ''மாயை'' என்னும் அதிகாரியால் உடம்பு என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கப்படுகின்றது .

வாடகை வீட்டில் குடி இருக்கும் ஜீவன்கள் வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை விட்டு காலி செய்யப்படுகின்றது .அதுதான் பிறப்பு இறப்பு என்பதாகும்.

குடி இருக்கும் வீட்டிற்கு வாடகை என்பது உணவாகும்.உணவு என்னும் வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஜீவன்களுக்கு வாடகை என்னும் உணவைக் கொடுத்து ஜீவன்களை அந்த வீட்டை விட்டு வெளியேறாமல் காப்பாற்றுவதே ஜீவ காருண்யம் என்பதாகும்.

வாடகைக்கு மேலாக சேர்த்து வைத்து இருக்கும் ஜீவன்கள்.அளவுக்கு மேலாக சேர்த்து வைத்திருக்கும் ஜீவன்கள்  .வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஜீவன்களுக்கு வாடகை கொடுத்து அவர்களை காப்பாற்றுவதே ஜீவ காருண்யம்.

பசி என்னும் பிணியினால் தவிக்கும் ஜீவர்களுக்கு உணவைக் கொடுத்து அவர்களின் துன்பத்தைப் போக்கு கின்றவர்களுக்கு மோட்ச வீட்டின் கதவுகள் திறக்கப்படும்.

உணவு என்னும் வாடகையைக் கொடுத்து ,உடம்பை விட்டு உயிர் பிரியாமல் காப்பாற்றுவதே ஜீவ காருண்யம்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் ?என்று அறியவேண்டுமானால்.

அருள் என்பது கடவுள் தயவு ,கடவுள் இயற்கை விளக்கம்.

ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவு ,ஜீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்.

இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும்,விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் வேண்டும்.

வேறு ஒன்றினால் பெறக் கூடாது என்பது அனுபவம் ஆகும்.

வேறு ஒன்றினாலும் பெறக் கூடாமை நிச்சயம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

இதற்கு வேறு எந்த செய்கையும் பிரமாணமும் வேண்டாம் என்று அறிவினால் அறிந்து கொள்ளவேண்டும்.

ஜீவ காருண்யத்தின் வல்லபமே அருளைப் பெறுவதுதான் .

அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்யமே வழி ஆதலால் அதற்கு ஞான வழி என்பதாகும்.

ஞான வழி என்பதும்,சன்மார்க்கம் என்பதும்,ஜீவ காருணய ஒழுக்கம் என்பதாகும்.

அஞ்ஞான வழி என்பதும்.துன்மார்க்கம் என்பதும் ஜீவ காருண்ய ஒழுக்கம் இல்லாமை என்றும் அறிய வேண்டும்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகார சத்தி விளங்கும்.அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் உடனே தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் உடனாக மறையும்.அதனால் உபகார சத்தி மறையும்.உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

ஆகவே மனிதர்களாகிய நாம் வாடகை கொடுக்கமுடியாமல் உடம்பை விட்டு உயிர் பிரியும் நிலையில், தவிக்கும் ஜீவர்களுக்கு உணவைக் கொடுத்து உடம்பையும் உயிரையும் காப்பாற்றுவதே ஜீவ காருண்யம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு