புதன், 30 ஜூன், 2021

சொல்லுவோம் கேட்கதிறம் உண்டோ!

 *சொல்லுவோம் கேட்கத்திறம் உண்டோ!*

வள்ளலார் மேட்டுகுப்பத்தில் அமரந்திருந்தபோது ஒருநாள் *வையாகரணி தார்க்கீகியாகிய* இரண்டு *வித்வான்கள் வள்ளலாரைச் சந்தித்து *திருவாசகத்தில் முதல் அகவலுக்கு உரைசொல்ல வேண்டும் என கேட்க* 

அதற்கு வள்ளலார் *சொல்லுவோம் கேட்கத்திறம் உண்டோ* என்று கூறினார்.யாவரும் சரி என்றார்கள்.மாலை நேரம்

வெளியில் வந்து அனைவரையும் அமரவைத்து சொற்பொழிவைத் தொடங்கினார்.

*பாடல்!*

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 

ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க !  

என்ற வரிகளுக்கு ஒவ்வொரு வரிக்கும் தகுந்த விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

முதல் ஒரு வரிக்கு விளக்கம் சொல்ல *இரண்டுமணி நேரம் ஆயிற்று.  முதலில் ஒருசாரார் தூங்கிவிட்டார்கள்.* 

இரண்டாவது வரிக்கு விளக்கம் சொல்ல *மூன்றுமணி நேரம் ஆகியது. விளக்கம் கேட்க வந்தவர்களும் மற்றமுள்ளவர்களும் தூங்கிவிட்டார்கள்*.  

மூன்றாவது வரிக்கு விளக்கம் சொல்லும்போது *நான்குமணி நேரமாகியது.அதற்குமேல் உணரமுடியாமல் தொழுவூர் வேலாயுதனாரும் தூங்கிவிட்டார்கள்*.

*மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்*!

அனைவரும் தூங்கிவிட்ட பின்னும் வள்ளலார் தனிமையில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

வேலாயுதனார் விழித்து எழுந்து பார்க்கிறார் அனைவரும் தூங்கிவிட்டார்கள்.தூங்கியது தெரியாமல் வள்ளலார் பேசிக்கொண்டே உள்ளார் என நினைத்து.  *அய்யா அனைவரும் தூங்கிவிட்டார்கள் என்றார்* வேலாயுதனார்.

*பிச்* என்று கோபமாக சொன்னார்  இதுசமயம் *மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் கேட்டுக்கொண்டு உள்ளார்கள்* அவர்களுக்காக பேசிக்கொண்டுள்ளேன் *அவர்கள் விழித்துக் கேட்டுக்கொண்டு உள்ளார்கள் என்று விளக்கினார்.*

*அதற்குமேல் அருள் சார்ந்த மேல்நிலை அனுபவங்களை வேலாயுதனாரும் உணர்ந்தகொள்ள முடியாதவர்* என்பதை  தெளிவுப்படுத்தி புரிய வைத்தார் வள்ளலார்.

ஆண்டவர் அருள் பெற்றவர்கள் எழுதிய அருள் வாசகத்திற்கு அருள்பெறும் தகுதி உடையவரகள் மட்டுமே அதன் விளக்கத்தை எளிதில் புரிந்து அறிந்து தெரிந்து மேல்நிலைக்கு செல்லமுடியும். என்பதை வள்ளலார்.

*சொல்லுவோம் கேட்கத் திறமுண்டோ* என்று சொல்லி புரியவைத்தார்.

வந்த வித்வான்கள் தூங்கி எழுந்து  மவுனமாகி வள்ளலாரை வணங்கி *நீங்கள் முழுமையான அருள்பெற்ற மகாஞானி* நாங்கள் சாதாரண வித்வான்கள். என்பதை உணர்ந்து போற்றி புகழ்ந்து வணங்கி விடைபெற்று சென்றார்கள். 

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

அருளாளர்கள் அருட்பாடல்களின் விளக்கம் உலக அறிவுக்கும் பொருந்தும் அருள் அறிவுக்கும் பொருந்தும்.

ஆனாலும் *அருள் அறிவால் அறிவதே உண்மை விளக்கமாகும்*.

*வள்ளலார்பாடல்*

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்கனுபவ மாகின்ற தென்னடி தாயே

செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்*திருவருள் உருவம்* என்றறியாயோ மகளே.!

அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்

கனுபவ மாகின்ற தென்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்*திருநட இன்பம்* என்றறியாயோ மகளே.!

என்னும் பாடல் வாயிலாக தெளிவுப்படுத்துகின்றார்.

*ஆன்ம அறிவைக் கொண்டு அருள்அறிவை தொடர்பு கொண்டால் அனுபவம் உண்டாகும்* பின்பு 

*அருள் அறிவைக் கொண்டு கடவுள் அறிவைத் தொடர்பு கொண்டால் கடவுளின் திருநடனமும் அதன் இன்பமும் அனுபவிக்கமுடியும்.*

*வள்ளலார் பாடல்*!

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே

*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* *வெறும்வார்த்தை என்வாய்*

*விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*

செல்லுகின்ற படியேநீ காண்பாய் இத்தினத்தே

தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்

ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

செவ்வாய், 29 ஜூன், 2021

வழிதப்பி போனவர்களுக்கு வழிகாட்டிய அற்புதம் !

 *வழி தப்பி  போனவர்களுக்கு  வழிகாட்டிய அற்புதம்* ! 

*வள்ளலாரைத் தேடி வடலூர்  வருபவர்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் அவற்றை நீக்கிக் கொண்டே இருந்தார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். இப்போதும் தீர்த்துக் கொண்டே இருப்பார் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கவேண்டும்* 

*வயதான கிழவிபோல் வந்தது*

பெங்களூரில் போஸ்டுமாஸ்டராக இருந்த *வேணுகோபால்பிள்ளை என்பவர்*. ஒருநாள் தாய் தம்பியர்களுடன் வடலூர் சென்று வள்ளலாரைச்  சந்தித்துவிட்டு பின் சிதம்பரம் போவதாக எண்ணி வண்டியில் சென்றுள்ளார்கள்.

பின்னலூருக்குச் செல்லும் போது வழிதவறிப் போய்விட்டார்கள்.

மாலைநேரம் ஒரு அணைக்கட்டு குறுக்கிட்டதால் பெரிதும் நிலைகலங்கினர்.

*அச்சமயம் ஒரு வயதான கிழவி தோன்றி* தன்னுடன் வரும்படி அழைத்துச்சென்று அணைக்கட்டை தாண்டி *இதோ அந்த கிராமம் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.*

*ஆச்சரியம் அந்த கிராமம் வடலூர் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தனர்*.

வள்ளலாரைச் சந்தித்தபோது வழியில் நடந்ததை சொன்னார்கள்.

*எல்லாம் ஆண்டவர்செயல் நல்லதே நடக்கும் என்றார்*. பின்பு அவர்களை  தங்கவைத்து காலையில் உணவு படைத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். 

*துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை*

*அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)

*சிறுவனைப் போல் வந்தது*

நாகூரிலிருந்து சுவாமிநாத செட்டியார் மற்றும் அன்பர்கள் சிலர் வடலூருக்கு வந்து தரிசித்துவிட்டு ஊருக்கு இரவில் திரும்பி உள்ளார்கள்.

அவர்கள் போகின்ற தடம் திருடர் பயம்உள்ள தடம் என்பதால்.

அதுசமயம் 16.பதினாறு வயதுடைய சிறுபிள்ளை போல் வண்டியின் பின்புறத்தே பாதுகாப்பாகச் சென்றுள்ளார். 

*வண்டியில் உள்ளோர் ஏன் பின் தொடர்ந்து வருகிறீர்கள் என கேட்க.தம்ஊர் மருதூர் எனச்சொல்லி மறைந்தனர்.*

வண்டிஉடன் பின்வந்தவர் மருதூரார் என்பவர் வேறுயாரும் இல்லை  *வள்ளலாரே* என்று அறிந்து.அதுமுதல் ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் வடலூர் வந்து ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு அவ்வன்பர்கள் அன்னதானம் செய்து வருகின்றனர்.

*வள்ளலார் எந்த சித்து விளையாட்டும் செய்யவில்லை*.

*வள்ளலாருக்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே செய்த அற்புதமாகும்.*

எங்கெங் கிருந்து உயிர் ஏதெது வேண்டினும்அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ் ஜோதி!

எங்குறு தீமையு மெனைத் தொடராவகைகங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே!  ( அகவல்)  

*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே* ! (வள்ளலார் பாடல்) 

*வடலூர் செல்வோம் நல்லவரம் பெறுவோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 28 ஜூன், 2021

பாம்பிற்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்மு !

 *பாம்பிற்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு!*


பாம்புக் கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி.

*வள்ளலார்  பெயரைக் கேட்டாலே* பாம்பு  பயப்படும் நிலை உண்டாயிற்று. 


ஒருநாள் சென்னைக்கு அருகில் உள்ள *வியாசர்பாடிக்கு* நண்பர்களுடன்  சென்று மாலை நேரத்தில் சொற்பொழிவு செய்துவிட்டு திரும்பும்போது.

*இரவில் பெரிய பாம்பு ஒன்று இவர்களை நோக்கி வரவே*. கூட இருந்தவர்கள் அனைவரும் பயந்து ஒவ்வொரு பக்கமாக ஓடினர்.


வள்ளல்பெருமான் எவ்வித பதட்டமும் இன்றி கருணையுடன் பாம்பை நோக்கினார். *பாம்பு வள்ளலார் காலைச் சுற்றிக்கொண்டு சிறிதுநேரம் வேண்டியது*.

 யாருடைய கண்களுக்கும் தெரியாமல் செல்லும்மாறு வள்ளலார் கூறினார்.

யாருக்கும் ஊறு செய்யாது விலகிச் சென்றது.  


*வாழை இலைமீது இருந்த பாம்பு*


கூடலூர் அப்பாசாமி செட்டியார் கிடங்கில் விசேடமாய் பேயன்வாழை உண்டு.பேயன் வாழை பிடிக்கும் என்பதால் அங்கு வள்ளலார் சென்றபோது இலையின் மீதுள்ள பாம்பு ஒன்று *வள்ளலார் உச்சியில் தீண்டவே சிறிது இரத்தம் வந்தது. வள்ளலார் விபூதி வைத்து அப்பினார்*.


அப்பாசாமி செட்டியார் மற்றும் அன்பர்கள் என்னவென்று வள்ளலாரைக் கேட்க *சர்ப்பம் ஒன்று தீண்டியது* அது மரணம் அடைய காலம் நெருங்கியதால்  சிறிது தீண்டியது என்றார். அங்கனமே   

போய்ப் பார்த்தபோது சர்ப்பம் இலைமீது மடிந்து வெளுத்து கிடந்தது. 


*வள்ளலார் மீது ஆணை சொன்னது*


 குறுஞ்சிபாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் செட்டியார் ஒருவர் வடலூர் வந்து வள்ளலாரைத் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.


ஒரு ஞாயிற்றுக்கிழமை  விடியற்காலை குளக்கரையில் கலாச்செடி அருகே காலைக் கடனுக்காக உட்கார ஒரு சர்ப்பம் செட்டியாரைத் தீண்ட படம் எடுத்தது. *உடனே இராமலிங்கத்தின் மேல் ஆணை* என்றார் அப்பால் அந்த பாம்பு இரை எடுக்க செல்லாமல் புற்று வாயிலில் வாயைத் திறந்தபடியே அங்கேயே அப்படியே இருந்தது.


எப்போதும்போல்  செவ்வாய்க்கிழமை வள்ளலார் சொற்பொழிவு செய்யும் நேரம் செட்டியார் வடலூர் வந்தார். 


வள்ளலார் உடனே *பிச்*  *ஐயோ* என்ன செய்துவிட்டீர்.

*மூன்று நாட்களாக ஓர் உயிர் பட்டினியோடு இருக்கிறது உடனே சென்று *ஆணையை விடுதலை செய்* என்று கட்டளையிட்டார்.

அவ்விதமே சென்று செய்ய பாம்பு புற்றில் நுழைந்து சென்றது.


*கனவில் வந்த வள்ளலார்.*!


கோட்டகம் என்னும் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தான் என்பவருடைய சொப்பனத்தில் ( கனவில்) வள்ளலார் தோன்றி நாளை *அரவம் தீண்டி மூன்று நாள் மயக்கம் உண்டாகும்.*

*மருந்து கொள்ள வேண்டாம் பின்பு குணமாகும் என்று தெரிவித்துள்ளார்*.


அங்கனமே வள்ளலார் சொல்லியவாறே நடந்துள்ளது.பின்பு குடும்பத்துடன் வடலூர் வந்து அன்னதானம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள்.


*வள்ளலார் பாடல்* ! 


பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன

தீம்பலா வாழை மாத் தென்னை சிறந்தன

ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்

தோம்பல் என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.! 


*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து வாழ்ந்த கருணைக்கடல் வள்ளல்பெருமான் ஒருவரே* *அவருக்கு நிகர் அவரே!*.


உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே !

 

*உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே*

*உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச் சிவமே*! ( அகவல்)


*வள்ளலாரைப்போல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் தயவு கருணையுடன் வாழ்ந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மிடம் தொடர்பு கொள்வார்* 


அதன்பிறகுதான் நம்முடைய *அன்பெனும் பிடியுள்* அகப்பட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

சனி, 26 ஜூன், 2021

வள்ளலாரைத்தேடி சித்தர் வருகை !

 *வள்ளலாரைத் தேடி சித்தர் வருகை !* 

*கதையல்ல கற்பனைஅல்ல உண்மை*

கூடலூர் பங்குனி உத்தரத்தில் கிண்ணித்தேர் உற்சவம் நடப்பது வழக்கம். அதுசமயம் 

தேரடிக்கு அருகில் நாலாவது வீட்டில் வசிக்கும் அப்பாசாமிச் செட்டியார் அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று *வள்ளல்பெருமான் அவர்கள் வீட்டின் உள்ளே அமர்ந்து இருந்தார்*

வள்ளலாரைப் பார்க்க அன்பர்கள் பலர் வெளியே திண்ணைமீது அமர்ந்து இருந்தனர்.

அதுசமயம் *வள்ளலார் போலவே சித்தர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்றார்*.

வெளியில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம்.வீட்டின் உள்ளே வள்ளலார் இருக்க *வள்ளலார் போலவே ஒருவர் உள்ளே போகிறார்*. யார் இவர்? என உரையாடிக் கொண்டு இருந்தனர். 

சிறிது நேரத்தில் வள்ளலார் உருவத்தில்  உள்ளே போனவர் வெளியே சென்றார். போனவர் யார்?  என்பதைத் தெரிந்து கொள்ள. புதுவை உறையூர் துரைசாமிப்பிள்ளைஅவர்கள் பின் தொடர்ந்தார்.

*அச்சித்தர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்தார்.*

பின் அன்பர்கள் உள்ளே சென்று பார்த்தனர். *வள்ளலார் அருகில் ஒருதட்டில் லட்டு வைத்து இருந்தது*.

சிறிது லட்டு எடுத்து வள்ளலார் வாயில் போட்டுக்கொண்டு அங்குள்ள அனைவருக்கும் லட்டு கொடுத்தார்.

*பிட்டு வாணிச்சி கொடுத்தது இப்படித்தான் இருந்த்தோ* என அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து. ருசித்துவிட்டு பதில்  சொல்லுங்கள் என்றார் வள்ளலார்.பதில் சொல்லத் தெரியாமல் மவுனமாக இருந்தார்கள்.

வந்தவர் காணோம் எனத் துரைசாமிபிள்ளை கூறினார். அதற்கு வள்ளலார் *அவர் இந்நேரம் காசியில் இருப்பார்* *என  சித்தர்களின் நிலைகளை அவர்களுக்கு  தெரிவித்தார்.* 

தெரிந்து கொள்வோம்!

*சித்தர்கள் மூன்று வகை*! 

*கர்மசித்தர்.*

*யோகசித்தர்.*

*ஞானசித்தர்* என மூன்று வகையான சித்தர்கள் உண்டு.

*சுத்ததேகம் உள்ளவர்கள் கர்மசித்தர்கள்*.

*பிரணவதேகம் உள்ளவர்கள் யோகசித்தர்கள்*.

*ஞானதேகம் உள்ளவர்கள் ஞானசித்தர் என்று சொல்லப்படும்*.

அருளின் அளவை வைத்து தேகங்கள் சித்துக்கள் சித்தர்கள் மாறுபடுவார்கள்.

கர்ம சித்தர்கள் தன்னைத்தேடிவரும் அன்பர்களுக்கு ஆசிசெய்தால்  பலிக்கும்.

*வள்ளலாரைப் பார்க்க சாசியில் இருந்து வந்த சித்தர் யோகசித்தர்*.

உருவம் மாற்றிக்

கொள்ளவும் எங்கு வேண்டுமானாலும் செல்லவும் யோக சித்தர்களுக்கு சித்துக்கள் கைகொடுக்கும்.

*ஞான சித்தர்களுக்கு இருந்த இடத்திலிருந்தே நினைத்த மாத்திரத்தில் யாவும் தடையில்லாமல் நடைபெறும் நிறைவேறும் ஆற்றல் பெற்றவராகும்*

*வள்ளலார் ஞான தேகம் பெற்ற ஞானசித்தர்*.

ஞான சித்தரைத்தேடி மற்ற எல்லா சித்தர்களும் வருவார்கள்.

*கர்மசித்தர்கள் யோகசித்தர்களுக்கும் மரணம்வரும்* .*மீண்டும் பிறப்பு உண்டு*.

*ஞான சித்தர்களுக்கு மரணம்இல்லை பிறப்பும்இல்லை*

*ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு

கோடியும்* விளங்கக் குலவுமெய்ப் பொருளே*! (அகவல்)

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்ஆவகை யெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி!

கருமசித்திகளின் கலைபல கோடியும்அரசுற வெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி!

யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்ஆகவென் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி!

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி! (அகவல்)

*வள்ளலார் 647 கோடி சித்துக்கள் கைவரப்பெற்றவர்.தேவையில்லாமல் எந்த சித்துக்களையும் விரயம் செய்ய மாட்டார்.அதுதான் வள்ளலார்* 

*ஞானசித்தர்களால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்பு கொள்ள முடியும்*.

*வள்ளலார் பாடல்!*

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார

நித்தவடிவும் நிறைந்தோங்கு -   *சித்தெனும்ஓர்*

*ஞான வடிவுமிங்கே*  நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.! 

நானே தவம்புரிந்தேன் *நம்பெருமான் நல்லருளால்*

நானே அருட்சித்தி நாடடைந்தேன் -  *நானே*

*அழியா வடிவம்* *அவைமூன்றும் பெற்றேன்*

இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.! 

*ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்பார் வள்ளலார்*

மேலே கண்ட பாடல்களின் மூலமாக தான்பெற்ற அனுபவத்தை வெளிப்படையாக பதிவு செய்கிறார்.

*நாம் எந்நிலையில் உள்ளோம்* என்பதை சிந்தித்து அதிதீவிர முயற்சியில் சென்றால்தான் பெறவேண்டியதை பெறமுடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வடலூர் தேர்வு செய்யக் காரணம்!

 *வடலூர் தேர்வு செய்யக் காரணம்* !


பொருமையாக படிக்கவும்.


வள்ளலார் கருங்குழியில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குறைகளை விண்ணப்பம் செய்ய அன்பர்கள் கூட்டம் கூட்டமாக  வள்ளலாரைச் சந்திக்க வரத்தொடங்கினர்.


அக்காலத்தில் பசி பட்டினி வறுமையில் மக்கள் தவித்துள்ளார்கள்.

*ஆயிரக்கணக்கான மக்களுக்கு* *அன்னமளித்து பசியைப்போக்க ஒரு பொதுஇடம்  தருமச்சாலையாக அமைக்க  திருவுளங்கொண்டார்*.  


அவ்வாறு கட்டப்படும் தருமச்சாலை. நான்கு புரத்திலும் உள்ள மக்கள் சிரமம் இல்லாமல் வந்து போகும் *மத்திய இடமாக* அமைய வேண்டும் என்று அன்பர்களிடம் கட்டளையிட்டார். பல பல அன்பர்கள் பல பல இடங்கள் குறித்து  தேர்வுசெய்து வள்ளலாரிடம் கூறியுள்ளனர்.


வள்ளல்பெருமானுக்கு அவர்கள் கூறிய இடங்கள் திருப்தி தரவில்லை.

ஒருகால் *வள்ளலார் தாமே சென்று வடலூர்ப் பெருவெளியில் நின்று இங்கே அமைத்தால் சிறப்பாக இருக்கும் என  அவ்விடத்தை சுற்றி சுற்றி வந்தார்*. 


வள்ளலாரின் உண்மை நிலை அறிந்து *வடலூர் மக்கள் 80 காணி நிலத்தை வள்ளலாருக்கு இலவசமாக பட்டா செய்து கொடுத்துள்ளார்கள்*.


*அவ்விடத்தை குறிக்க காரணம்*


சிதம்பரம்.

கூடலையாற்றூர்.

விருத்தாசலம்.

திருவதிகை.

திருஇரும்பைமாகாளம்.

திருப்பாதிப்புலியூர்.தியாகவல்லி.முதலிய ஸ்தலங்களுக்கு மத்திய இடமாகவும்.


தென்பெண்ணையாறு.கெடிலநதி.வெள்ளாறு.

மணிமுத்தாநதி முதலிய நதிகளால் சூழப்பட்டதாயும் உள்ள வடலூர்ப் பெருவெளி வழியாகச் செல்வோர்க்குப் பசிதீர்த்து அனுப்புதற்கு வசதியுள்ள இடமாகவும் அமைய வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பமாகும்.


*வள்ளலாரின் விருப்பம் போல் 23-5-1867 பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை அமைத்து  சிறப்பாக தொடக்கவிழா நடைபெற்று இன்றுவரை மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது என்பது யாவரும் அறிந்த்தே*. 


*அன்று வள்ளலார் ஏற்றிவைத்த  அடுப்பு இன்றுவரை அணையாமல் மக்கள் பசிப்பிணியைப் போக்கிவருகிறது*..


மேலும் வடலூரில் இருந்து பார்த்தால் சிதம்பரம் நான்கு கோபுரங்களும் தெரியும் என்பார்கள்.


மேலும் *நகர வாசனைவிட்டு தனியே ஓர்இடத்தில் இருந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் நிலையிலேயே திளைத்து மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் வடலூர் தேர்வின் முக்கிய விருப்பமும் ஆகும்*. 


மேலும் *வடலூர் பெருவெளி உலகத்தின் மையப்பகுதி எனவும் சொல்லப்படுகிறது எனவேதான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் இடமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான்* 


உலகமக்கள் யாவரும் வந்து அருள் பெறும் தகுதிவாய்ந்த இடமே வடலூர் பெருவெளியாகும்.


*எனவேதான் இயற்கையாகவே வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு தேர்வு செய்துள்ளது* வள்ளலார் கொள்கையை *உலகம் முழுவதும் கொண்டுசெல்ல*  பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.


*வள்ளலார் பாடல்!*


*உலகமெலாம் தொழ உற்றது* எனக்கு உண்மை ஒண்மை தந்தே

இலக எலாம் படைத்தது ஆருயிர் காத்தருள் என்றது என்றும்

கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம்  எனாநின்றது *உத்தர ஞான சிதம்பரமே*.! 


*வடலூர் பெருவெளிக்கு உத்தரஞான சிதம்பரம் என்றும் உத்தரஞான சித்திபுரம் என்றும் வள்ளலாரால் பெயர் சூட்டப் பெற்ற புண்ணிய பூமியாகும்.* 


நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்பார் வள்ளலார் *பாடல்* ! 


*உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி*

*இலகஅருள் செய்தான் இசைந்தே* - 


*திலகன்என*

*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்*  

*நம்பெருமான்*

*தானே எனக்குத் தனித்து*.*! 


*எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்செயலே*


*தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் வடலூர் பெருவெளியாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வெள்ளி, 25 ஜூன், 2021

வள்ளலார் உடம்பு வேறு வேறாக கிடந்த்து !

 *வள்ளலார் உடம்பு வேறு வேறாக கிடந்தது* ! 


ஒருநாள் உச்சிப்பொழுதில் வள்ளலார் வடலூர் சத்திய தருமச்சாலையில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். சென்ற வள்ளலார் ரொம்ப நேரமாகியும் வரவில்லையே என்று வேலூர் சண்முகம் அவர்கள் வள்ளலாரைத் தேடி சென்றுள்ளார்.


கருங்குழி செல்லும் காட்டுபாதை வழியாகச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு மரத்தடியில் *வள்ளலாரது அவயங்கள் வேறு வேறு துண்டுகளாக சிதறி கிடந்துள்ளது*


அவற்றைப் பார்த்து சண்முகம் பயந்து நடுங்கி மயங்கி விழுந்துள்ளார்.

உடனே வள்ளலார் எதிரில் தோன்றி *இனிமேல் இப்படித் தேடி பின் தொடர்ந்து வராதீர்* என்று கடினமாக  கட்டளையிட்டு வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு சாலைக்கு சென்றுள்ளார்.


*இது என்ன அற்புதம் அதிசயம்  நம்பவே முடியவில்லை  விந்தையாக உள்ளது என   ஒன்றும் புரியாமல் சண்முகமும் சாலைக்கு சென்று விட்டார்*. 


சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.


சாலையில் உள்ள அன்பர்களிடம் தான் கண்ட  காட்சிகளை சொல்ல அனைவரும் மெய் சிலிர்த்து பயந்து நடுங்கி போனார்கள்.


*வள்ளலார் செய்துகொண்ட  பயிற்சி*


மனிதன் உடம்பு  மரணம் அடையக்கூடாது என்பது வள்ளலார் கொள்கையில் மிகவும் முக்கியமானதாகும்.அதற்கு *மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயராகும்* 


*வள்ளலார் தன் உடம்பை  தனித்தனியாக பிரிப்பதும் சேர்ப்பதும் மறைப்பதும்.பின் ஒன்றும் இல்லாமல் செய்வதும்  எவ்வாறு என்பதை பயிற்சி எடுத்துகொண்டே இருந்துள்ளார்*


மேலும் பஞ்ச பூதங்களின் அணுக்களால் பின்னப்பட்ட அசுத்த பூதகாரிய தேகத்தை.சுத்த பூதகாரிய அணு தேகமாக மாற்றுவதே சுத்த தேகம் என்பதாகும்.


சுத்த பூதகாரிய உடம்பை பிரணவதேகமாக மாற்றுவதே அடுத்த மாற்றமாகும். *உடம்பை வேறு வேறாக பிரித்து மீண்டும் சேர்ப்பது.பிறர் கண்களுக்கு தோன்றுவது தோன்றாமலும் இருப்பதே பிரணவ தேகமாகும்*. அவ்வாறு அன்று பயிற்சி எடுத்துள்ளார்.( வேறு கட்டுரையில் விபரமாக தெரிவிப்போம்)


அருளைக்  கொண்டுதான் இவ்வாறு செய்யமுடியும் என்பதை நிரூப்பித்துள்ளார்.


*வள்ளலார் பாடல் !*


அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே 

ஆசைப் பட்டது அறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டியே 


*பிண்டத்து உயிர்கள் பொருந்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே* ! ( மெய்ப்பொருள் வியப்பு)


*தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி அன்பே* !(அகவல்) 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.பூத அணுக்களை அருள் ஒளி அணுக்களாக மாற்றி ஞானதேகம் ( ஒளிதேகம்) பெறுவதே சுத்த பிரணவ ஞானதேகம்  என்பதாகும். 


இதுவரையில் இருந்ததுபோல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் என்பார் வள்ளலார்.

அதாவது வெட்டிப்பேச்சு பேசி காலத்தை வீனாக்காமல். சுத்த சன்மார்க்கத்தை

பின்பற்றுபவர்கள் அருளைப் பெறுவதே முக்கிய லட்சியமாக கொள்ள வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வியாழன், 24 ஜூன், 2021

அதிசயம் மற்றும் அற்புதம்!

 *அதிசயம் மற்றும் அற்புதம்* ! 


கடலூர் *தேவநாயகம்* என்பவர் வள்ளலார் மீது அளவுகடந்த பற்றும் உண்மையான ஈடுபாடும். மதிப்பும். மரியாதையும். நம்பிக்கையும் கொண்டவர்.

*வடலூர் சென்று  வள்ளலார் சொற்பொழிவு கேட்டுவரும் பழக்கம் உள்ளவர்*. 


*மகன் வியாதியால் உயிர்போகும் நிலை*


தேவநாயகம் அவர்களின் புதல்வர் *ஐயாசாமி* என்பவர் வியாதியால் கஷ்டப்பட்டு *உயிர்நீங்கும்* நிலைக்கு வந்துவிட்டார். தேவநாயகம் அன்று இரவில் மிகவும் வருந்தி சொல்லமுடியாத துயரத்தில் மயங்கி மகன் அருகில் அமர்ந்து வேதனையுடன் அழுதுகொண்டே இருந்தார்.


*வள்ளலார் உருவில் ஆண்டவர் வருகை!*


அன்று வடலூரில் வள்ளலார் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்துள்ளார்.


*அன்று இரவு திடீர்என தேவநாயகம் வீட்டு கதவு தட்டப்படுகிறது*

 சத்தம் கேட்டு தேவநாயகம்

கதவைத்

திறக்கிறார் *வள்ளலார் வெளியில் நிற்கிறார்*.

ஆச்சரியத்துடன் அதிர்ச்சி அடைந்து

தன்னை மறந்து வாருங்கள் வாருங்கள் என்று உள்ளே அழைக்கிறார்.


*வள்ளலார் உள்ளே சென்று ஐயாசாமியைத் தொட்டு எழுப்பி உட்கார வைத்து உன்மகன் உடல் நலமும் உயிர்நலமும் நலமாக உள்ளது வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு உடனே சென்று விடுகிறார்*.


*தேவநாயகம் இது கனவா நனவா என நினைந்து ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் திகைத்துப்போய் சிலைபோல் அமரந்து கொண்டார்* *தன்மகன் ஐயாசாமி எழுந்து உட்கார்ந்து  அப்பா எனக்கு ஒன்றும் இல்லை நலமாக உள்ளேன் வருத்தப்படாதீர்கள் என்று அப்பாவைத் தேற்றினார்* 


உயிர்போகும் நிலையில் இருந்த தன்மகன் எழுந்து வந்து ஆறுதல் சொல்வதைக் கண்டு மகனை  அனைத்து ஆனந்த கண்ணீர்கொண்டு கதறி அழுதுள்ளார். 


*வள்ளலார் பெருங்கருணையை என்னவென்று சொல்வது எவ்வாறு போற்றி  புகழ்வது* 


*போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி*!


*வடலூர் செல்லுதல்*


மறுநாள் காலையில் தேவநாயகம் தன்மகன் ஐயாசாமியை வண்டியில் அழைத்துக் கொண்டு வடலூர் வந்து சேர்ந்தனர்.


தருமச்சாலையில் பிரசங்கம் செய்து கொண்டு இருந்த வள்ளலார் வெளியில் வந்து தேவநாயகத்தை தனியாக அழைத்து. *இரவு நடந்தது ஆண்டவன் செய்த திருவிளையாட்டே ஆதலால் அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி உள்ளே சென்று விட்டார்*


இரவு முழுவதும் வள்ளலார் அன்று தருமச்சாலையிலே பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார் என்ற செய்தியை அங்குள்ளவர்கள் மூலம் தேவநாயகம் தெரிந்து கொண்டார். 


ஆண்டவரின் பெருங்கருணையை வியந்து போற்றி மெய்மறந்து துதித்தனர். அதுசமயம் அங்கே வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியும் இருந்துள்ளார்.


வள்ளல் பெருமானின் அருள் அற்புதத்தை யும் அதிசயத்தையும் கண்ட அன்பர்கள்  பலரும் வடலூரிலே தங்கி இருந்துள்ளார்கள்.


*இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?* 


*இறைவன் மீது உண்மையான அன்பும் உயிர்கள் மீது உண்மையான இரக்க குணமும் உள்ளவர்களுக்கு எவ்விதப்பட்ட ஆபத்துக்களும் நெருங்காது*. முன் செய்த தீவினைப்பயனால் துன்பங்கள் வந்தாலும் ஏதாவது ஒருவகையில் ஏதாவது ஒரு உருவத்தில்  ஆண்டவர் வந்து நிவர்த்தி செய்விப்பார் என்கின்ற உண்மையான நம்பிக்கையுடன் வாழவேண்டும்.. 


தேவநாயகம் வள்ளலார் மீது வைத்திருந்த உண்மையான அன்பும் நம்பிக்கையும் அவர் மகனை  வள்ளலார் உருவத்தில் ஆண்டவர் வந்து காப்பாற்றி உள்ளார்.


*வள்ளலார் வேறு யாருமில்லை*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார்*.

*வள்ளலாரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* 


என்ற உண்மையை அறிவால் அறிந்து உணர்ந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்வோம்.


*வள்ளலார் பாடல்* !


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு


நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று


வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் 

உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.! 

மேலே கண்ட பாடலில் சொல்லியவாறு ஆண்டவரைத் தொடர்புகொண்டு என்றும் அழியாத குறையாத நன் நிதியான அருள் அமுதை பூரணமாகப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 23 ஜூன், 2021

கதைச்சொல்லி தெளிய வைத்த வள்ளலார்!

 *கதைச்சொல்லி தெளிய வைத்த வள்ளலார்!*


ஒருநாள் கூடலூர் அப்பாசாமிச்செட்டியார் வீட்டுத் திண்ணையில் வித்வான்கள் பலர் கூடியிருந்தனர்.

அதில் ஒரு வித்வான் 

*அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது* என்றார்.


வேறுஒரு வித்வான் கைவல்ய நூலில் வந்துள்ள *இந்த சீவனால்வரும்* என்னும் பாடலை எடுத்து ஓதிக்காட்டி வாதத்தை வைத்தார். ஒருமணி நேரம் காரசார விவாதம் நிகழ்ந்தும் தீர்மானம்  ஏற்படவில்லை.


இவர்கள் வாதங்களை கேட்டுக்கொண்டே வள்ளலார் வீட்டின் உள்இருந்தார்.

*வள்ளல் பெருமானைக் கேட்டு தெளிவுபெறலாம் என்று வித்வான்கள் உள்ளே சென்றார்கள்.* வித்வான்களை நோக்கி வள்ளலார். 

*ஏன்காணும் வாதம் வந்துவிட்டதோ*? என்றுகூறி உட்காரவைத்து.

*சாத்திரப் பிரமாணம்* சொன்னால் உங்களுக்குச் சந்தேகம் நிவர்த்தியாகாது.


எனவே ஒரு கதைச்சொல்லுகிறேன் கேளுங்கள் என்றார்.


தெருவில் *நிர்வாண சந்நியாசி* ஒருவர்போய் கொண்டு இருந்தார்.

அவருக்கு ஒருவர் ஒருசீப்பு வாழைப்பழம்  கொடுத்தான்.


வேறுஒருவன் பெண்கள் இருக்கும் தெருவில் நிர்வாணமாய்ப்போகிறான் என்று கோபித்துக் கல்லால் அடித்தான்.


வேறு ஒருவன் அவர்கள் இருவரையும். 

நிர்வாண சந்நியாசியும் அழைத்துக் கொண்டு நீதிபதியிடம் சென்றான். நீதிபதியிடம் அந்த இருவரையும் காட்டி *இந்த புண்ணியவான் பழம் கொடுத்தான்* *இந்த பாவி கல்லால் அடித்தான்* என்றான்.

இதற்கு நீங்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றான்.


*நீதிபதிமுன் விசாரணை நடந்தது*!


நீதிபதி நிர்வாணசாமியாரை நோக்கி உம்மை யார் அடித்தது என்று கேட்டார். *வாழைப்பழம் கொடுத்தவரை காட்டி இவன்தான் அடித்தான் என்று கூறினார்*.


நீதிபதி யார் வாழைப்பழம் கொடுத்தது என்று கேட்க  *கல்லால் அடித்தவனைக்காட்டி இவன்தான் வாழைப்பழம் கொடுத்தான் எனக்  கூறினார்*.


மீண்டும் நீதிபதி கல்லால் அடித்தவன் யார் என்று நிர்வாணச் சாமியாரைக் கேட்க  *இங்கு இட்டுக்கொண்டு வந்தவனைக் காட்டி இவன்தான் கல்லால் அடித்தான் என்றார்*.


வாக்குமூலம் எழுதத் தெரியாது மயங்கிய நீதிபதி *இவர் மேற்படியில் உள்ளவர்* என ஒருவாறு உணர்ந்து அடித்தவனுக்கு  புத்தி சொல்லி.  *ஏதும் தெரியாமல் யாரையும் அடிக்கவும் கூடாது துன்புறுத்தவும் கூடாது. யார் யார் என்ன ரூபத்தில் இருப்பார் என எவராலும் கணிக்கமுடியாது* என அறிவுரை வழங்கினார்.


*ஆகையால் இத்தகையோர் யாரோ ( முற்றும் துறந்தவர்) அவர்களுக்கு அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது* என்பது பொருந்தும்.


அதுவன்றி பழம் கொடுத்தவன் இவன் .கல்லால் அடித்தவன் இவன் என்று பேதங் கொண்டவர் யாரோ அவர்களுக்கு *இந்த சீவனால்வரும்* என்ற பாடல் பொருந்தும். 


என்பதை கதையின் மூலமாக வித்வான்வான்கள் கொண்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் நமது வள்ளல்பெருமான்.

பின்பு வித்வான்கள் *உண்மைதெளிந்து சமாதானம் ஆனார்கள்.* 


*இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்.?*

*இறைவனால் படைக்கப்பட்ட உலகில் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஆன்ம லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்* வேறுவழியில் பயன்படுத்தினால் அவரவர்கள் செய்த நன்மை தீமைகளுக்கு தகுந்தவாறு அவரவர்கள் வாழ்க்கை இன்பம் துன்பம் கலந்தவையாக அமையும். 

*தீதும் நன்றும் பிறர் தர வராது* என்பது பொருந்தும்.


*வள்ளலார் பாடல் !*


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தை மிக விழைந்த தாலோ.! 


எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி பேதம் இல்லாமல் உள்ளே ஒத்து உரிமையோடு பாவிக்க பழகிக் கொள்ள வேண்டும். அந்த நிலையில் வாழ்பவர்கள் எவரோ அவரையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி ஏற்றுக்கொள்வார். என்பதை மேலே கண்ட  பாடல் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சிமையம்

9865939896.

செவ்வாய், 22 ஜூன், 2021

தாசில்தார் அதிகார போதையை அடக்கிய வள்ளலார் !

 *தாசில்தார் அதிகார போதையை அடக்கிய வள்ளலார்* 


மஞ்சகுப்பம் தாலுக்கா தாசில்தாரராக பணிசெய்தவர் வெங்கடசுப்பு அய்யர். அவர் அரசு பணிக்காக  செல்லும் போது அவர் முன்பு  சக்கிலி வீரையன் என்பவர் *(சன்மார்க்கிகள் சாதி பெயர் சொல்லக்கூடாது தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக நடத்தி உள்ளார்ர்கள்)*  வளைந்த கொம்பு ஊதிக்கொண்டே முன்னாடி செல்வது வழக்கம். 


*வடலூரில் வள்ளலார் அறிவுசார்ந்த  ஆன்மீக சொற்பொழிவு செய்வது பிரபலமாக பேசப்பட்டு வந்த காலம்*. உயர்ந்தவர் தாழ்ந்தவர். ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் வள்ளலாரின் சொற்பொழிவு கேட்க வடலூரை நோக்கி மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.


 *தாசில்தார் வெங்கடசுப்பு அய்யர் அடிக்கடி வள்ளலாரின் சொற்பொழிவு கேட்க மஞ்சகுப்பத்தில் இருந்து  வடலூர் வருவது வழக்கம்.*


ஒருநாள் அவர் வண்டியில் வருகின்ற போது அவருக்கு முன்னாடி வளைந்த ஊதுகொம்பை ஊதிக்கொண்டே சக்கிலி வேகமாக வரவேண்டியதாயிற்று. *பசியின் வேதனை அந்த சக்கிலியால் தாங்க முடியவில்லை.*

*பசியால் உடம்பு முழுவதும் நடுங்கிக்கொண்டே வடலூர் வந்து சேர்ந்தான்*.


தாசில்தார் வண்டியைவிட்டு இறங்கி வள்ளலார் சொற்பொழிவு செய்யும் இடத்திற்கு எப்போதும்போல்  சென்றார். தாசில்தாரை அமரச்சொல்லும் வள்ளலார்

கொஞ்சநேரம்  கண்டும் காணாமல் இருந்தார்.


*தாசில்தார் என்ன காரணம் என்பது புரியாமல் பதட்டமாக இருந்தார்.*


பின்பு வள்ளலார் தாசில்தாரைப் பார்த்து சொல்லுகிறார்.


*இந்த வாழ்வு உமக்கு எத்தனை நாளைக்கு இருக்கும்* கொம்புக் காரனைப் போகவேண்டிய ஊருக்கு முன்னமே அனுப்பி அவ்வூருக்குச் சிறிது தூரத்தே ஊதினால் போதாதோ? என்று உயிர் இரக்கத்தோடு தாசில்தாரிடம் சொன்னார்.

தாசில்தார் நடுங்கி போய்விட்டார்.


சரி சரி கொம்புகாரன் பசியோடு இருக்கிறான் அவனுக்கு முதலில் பசியைப் போக்கிவிட்டு வாருங்கள் என்றார். தாசில்தார் பதில் சொல்ல முடியாமல் அவனை அழைத்துக் கொண்டு சென்று பசியைப் போக்கிவிட்டு வள்ளலார் முன் வந்து அமர்ந்தார். 

சொற்பொழிவு நிறைவு பெற்றது.


உயர்ந்த குலம் உயர்ந்த பதவி என்ற பெயரில் அதிகார ஆதிக்கம் ஏழை எளிய மக்களை எந்த அளவிற்கு துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதை கீழ்வரும் பாடலில் தெரிவிக்கின்றார்.


*வள்ளலார் பாடல்* !


*நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்*

கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்


*படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன்* சுத்தசன் மார்க்கம்

விடுநிலை உலக 

நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.!


என்னும் பாடலின் வாயிலாக  தன்னுடைய வேதனையை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.


*வள்ளலாரை பார்த்து தாசில்தார். அய்யா இனிமேல் இதுபோன்ற  தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்*.

*என்னை மன்னித்து விடுங்கள் என்றார்*. எல்லோரையும் சமமாக இரக்கத்தோடு பாவிக்க வேண்டும்  என்று அறிவுரை வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.


*அன்றில் இருந்து தாசில்தார் அதிகார போதையில் இருந்து மீண்டார்*


*வள்ளலார் பாடல்* ! 


உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே! ( அகவல்)


மேலும்...


எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்

*பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே*

ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் என நடுக்குற்றேன்

இட்ட இவ்வுலகில் *பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.*! 


இவ்வுலகில் பசியுடன் எவரும்  எவ்வுயிரும் இருக்க கூடாது என்பதே வள்ளலாரின் உயர்ந்த உயிர் இரக்க கொள்கையாகும்.

சாதி சமய மதம் பேதமற்ற ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காகவே  *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்துள்ளார்*. 


*பசி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக்கருவி.*

எனவே நம்முடைய ஒவ்வொருவரின் இல்லமும்  எண்ணமும் பசிப்பிணியைப் போக்குவதற்காகவே இருக்க வேண்டும். அவற்றிற்கு வள்ளலார் *ஜீவகாருண்யம் ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார்*.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்* என்பார் வள்ளலார்.


*ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற பக்தி வழிபாடு தியானம்.தவம்.யோகம் யாவும் பிரயோசனம் இல்லாத வெற்று மாயா ஜாலங்களேயாகும் என்பார்*.


எனவே *ஜீவகாருண்யம் இயற்கையாக  இருக்க வேண்டும்*. *அதுதான் இயற்கையான கடவுள் வழிபாடாகும்*.

*அதுவே இயற்கை உண்மை ஆண்டவரிடம் அருள் பெறும் தூய்மையான நேர்வழியாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

ஞாயிறு, 20 ஜூன், 2021

கருங்குழி தெருவில் உருண்டுவந்த அவதானியார் !

 *கருங்குழி தெருவில் உருண்டு வந்த அவதானியார்!*


வள்ளலார் கருங்குழியில் தங்கியிருந்த சமயம் *திருச்சிற்றம்பல ஞானியர்* என்பவர் வள்ளலாரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டினர். அதுசமயம் காவி உடை அணிந்த துறவிக்கு வெள்ளை வேட்டிகாரர்ராகிய வள்ளல்பெருமான் உபதேசம் செய்ய மறுத்துவிட்டார்.

இருப்பினும் அவரின் உண்மையான உள் அன்பை ஏற்றுக்கொண்டு ஒருபாடலைப்பாடி எழுதி அவர் கையில் கொடுத்து உபதேசித்தார்.


பின்பு மதுரை திருஞான சம்பந்தமூர்த்தி

சுவாமிகள் மடத்திற்கு சென்று தங்கிஇருந்தார்.


*சிறுவன் காணாமல் போனான்*


ஒருநாள் கருங்குழிக் கிராமத்தில் உள்ள சிறுவன் ஒருவன்  மனவருத்ததுடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே போய்விட்டான்.போன இடம் தெரியாமல்

விசாரிக்கையில். *மதுரை மடாலயத்தில்* இருப்பதாக கேள்விபட்டு அவன் தாய் தந்தையார் வள்ளல்பெருமானிடம் சொல்லி *அங்குள்ள சிற்றம்பலஞானியார் அவர்களுக்கு* கடிதம் எழுதி மகனை வரவழைக்கும்படி வேண்டினர். 


வள்ளல்பெருமான் மிகச் சாதாரண தமிழ்நடையில்  சுவாமிகளுக்கு கடிதம் எழுதி சிறுவனை அனுப்பி வைக்கும்படி தெரியப்படுத்துகிறார்.


அப்போது மதுரை மடாலயத்தில் இலக்கணம் இலக்கியம் தெரிந்த மேதாவி *கணக்கிலவதானியும் தேவிபட்டினம் முத்துசாமியும்* உரையாடிக்கொண்டு இருக்கும் போது. வள்ளலார் எழுதிய கடிதம் சிற்றம்பலஞானியார் கைக்கு வந்த்து.வள்ளலார் எழுதிய கடிதத்தை அங்குள்ளவர்கள் படித்து காட்ட சொல்லவும் படித்து காட்டுகின்றார்.


உடனே *கணக்கிலவதானி* என்பவர் சொல்கிறார். வள்ளலார் பெரிய மேதாவி  என்றீர்கள் அவர் எழுதிய கடிதத்தில் இலக்கணம் இலக்கியம் விசேடம் ஒன்றும் இல்லையே  என்றார்.

அவர் சொன்னதும் *ஞானியாருக்கு* கோபம் வந்துவிட்டது.


*வள்ளலார் வார்த்தையாடிக் கொண்டு இருக்கும்போது சிந்திய இலக்கணம் இலக்கியம் இந்த உலகில் பரவி இருக்கிறது என்றார்*


உடனே கணக்கிலவதானியார். அப்படியாயின் இலக்கணம் இலக்கியம் அருமை நிரம்பிய ஒருகடிதம் எழுதி வரவழையுங்கள் பார்க்கலாம் என்றார்.


உடனே இங்கு நடந்த விவகாரத்தை வள்ளலாருக்கு தெரியப்படுத்தி பதில் அனுப்புமாறு வேண்டினார். கடிதத்தை கண்ட வள்ளலார் *பிச்* என கடிதத்தை எறிந்தனர்.


உடன் அங்கு இருந்த *தொழுவூர் வேலாயுதனார்* அக்கடித்த்தை எடுத்து இலக்கணப் பத்திரிகை ஒன்று எழுதி அனுப்புமாறு வள்ளலாரை வேண்ட. முதல் மாணாக்கர்  வேண்டுகோளுக்கு இசைந்துள்ளார்.


இரண்டொரு வரிகள் எழுதித் தந்தருளிப் பத்திரிகையை முடித்து அனுப்பும்படி வேலாயுதனாருக்கு கட்டளையிட்டார்.

அவ்வாறே அவர் எழுதி அனுப்பிவிட்டார்.


அப்பத்திரிகையை ஞானியார் கண்ணுற்றபின் அவதானியார் கையில் கொடுத்தார்.

*பலமுறை படித்தும் பொருள் விளங்காமையால் சற்று நிதானித்து. *வேணுமென்றே ஒரு வித்வான் பூட்டுப்போட்டால் அந்த வித்வான்தான் அதைத் திறக்கவேண்டும்* என்று அவதானியார் கூறினார்.


உடனே ஞானியார் நீர் ஒரு பூட்டுபோட்டு பத்திரிகை எழுதி அனுப்புங்கள் என்றார். *அவதானியார் சுலமாய் பொருள் விளங்ககூடாதவாறு ஓர் அறிய கவியை வரைந்து அனுப்பினார்.*


அக்கவியை கண்ணுற்ற வள்ளலார். *அவதானியார் கருதிய உரையும். அதற்குமேல்  தத்துவ சம்பந்தமான ஓர் அறிய உரையும் வரைந்து அனுப்பினார்*.


அதனை அறிந்த *கணக்கிலவதானியார். உடனே வண்டியில் ஏறி கருங்குழிக்கு வந்தார்.* *வள்ளலார் வீற்றிருக்கும் தெருவின் கோடியில் வண்டியை விட்டு இறங்கி வீதியில் வெய்யிலில் உருண்டே வந்து வள்ளலார் திருமுன் மூர்ச்சியாய் விழுந்தார்*. 


வள்ளலார் உபசரித்தபின் அவதானியார் தெளிவடைந்து எழுந்து நமஸ்கரித்து *மன்னிக்கவேண்டும்*  தங்களை சாதாரண வித்வான் என மதித்தேன். *பரிபூரண ஞானியென உணர்ந்திலேன்* உங்கள் காட்சியும் தோற்றமும் கருணையும் கண்டு உணர்வற்றனாகி விட்டேன். என் செருக்கு அடக்கி ஆட்கொள்ளல் வேண்டும் என வேண்டினர்.

மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார் வள்ளலார். 


*வள்ளலார் பாடல்*! 


நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் *எஞ்ஞான்றும்*

*சாவாவரம்* எனைப்போல் சார்ந்தவரும் - 


தேவாநின்

பேரருளை என்போலப் பெற்றவரும் *எவ்வுலகில்*

*யார்உளர் நீ சற்றே அறை.!* 


 *பூரண அருள் பெற்று எனைப்போல் சாகாவரம் பெற்றவர்கள் எவ்வுலகிலும் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் காட்ட வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே கேட்கிறார் வள்ளலார்* 


*ஆண்டவர் பதில் சொல்லுகிறார்*.


ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே

அடைவதெலாம் அடைந்தனை நீ அஞ்சலைஎன் றருளி


*வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி*

வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே


துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே

சுகமயமே எல்லாஞ்செய் வல்ல தனிப் பதியே


உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்

ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.! 


என்னும் பாடல்வாயிலாக ஆண்டவர் தெரிவிக்கின்றார்.


நாம் காமம்.வெகுளி.

மயக்கம்.மோகம்.லோபம்.  அகங்காரம் யாவும் அடக்கி ஆனமநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம் .


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

சனி, 19 ஜூன், 2021

முத்தி பெற்றவரும் ! சித்தி பெற்றவரும் !

 *முத்தி பெற்றவரும் ! சித்தி பெற்றவரும்!*


தில்லை சிதம்பரத்தில் கிழக்குச் சந்நிதித் தெருவில் உள்ள சத்திரத்தில் *கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள்* தங்கள் சீடர்களுடன் வந்து தங்கி இருந்தார்.அவர் சிறந்த தத்துவ கலைகள் அறிந்த சிவபக்தர். பல திருக்கோயில்கள் திருப்பனிகள் செய்தவர். பல சித்துக்கள் கைவரப்பெற்றவர்.


அதேநாளில் சிதம்பரம் வடக்குச் சந்நிதித் தெருவில் உள்ள மடத்தில் *வள்ளல்பெருமான்* மற்றும் பல அன்பர்களுடன் வந்து தங்கி இருந்தார். 


சுந்தரசுவாமிகள் தங்கிஇருப்பதை அறிந்த வள்ளலார் *சந்திப்பதற்கு நேரம் கேட்டுவர சிலரை அனுப்பி வைத்தார்*.

அன்பர்கள் அங்கு சென்றவுடன் விபரத்தை அறிந்த சுந்தரசுவாமிகள் *இங்கா சமயம் பார்த்துவர  சொன்னது* என்று கூறி உடனே புறப்பட்டு அன்பர்கள் கூட்டத்துடன் சிவமந்திரம் சொல்லிக் கொண்டே வள்ளலார் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.


உடனே வள்ளலாரும் சுந்தரசுவாமிகளும் பெருமகிழ்ச்சியுடன் ஒருவரைஒருவர்  கைகூப்பி வணங்கி இருவரும்  அமர ஆயுத்தமானார்கள் 


*மூன்றுநாள் உரையாடல்*


வள்ளலார் சுந்தரசுவாமிகளைதன் எதிரே அமரும்படி பலமுறை சொல்லியும் சுவாமிகள்  வள்ளலார் திருமுன் நேரே பார்த்து  உட்காராமல் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார்.  


*ஞான விஷயமாக அன்பர்களுக்கு புரியும் வண்ணம் மூன்று நாட்கள் இருவரும் உரையாடினார்கள்*.


ஞானத்தின் வல்லமையும் அருள் சார்ந்த ரகசியங்கள் பற்றியும். இறை உண்மையும் மற்றும்

பிரபஞ்ச ரகசியங்களையும் சுவாமிகளுக்கு தெரியாத  விபரங்கள் யாவும் வள்ளலார் சொல்வதை கேட்டு சுவாமிகள் தோல்வி அடைந்தவர் போல் மனம் சோர்வடைந்து காணப்பட்டார். 


சுவாமிகள் சோர்வு அடைந்த முகத்தை கண்ட வள்ளலார் சுவாமிகளை உரையாடச்சொல்லி தான் தோல்வி அடைந்தது போல் காட்டி அவர் மனதை மகிழ்ச்சி அடையச்செய்வித்தார்.


அப்போது அங்கிருந்த வேலூர் நாகப்பன் என்பவர் மகாதேவமாலையில் உள்ள பாடல்களை பாடினார். 

*சுந்தரசுவாமிகள் இது யார் பாட்டு என கேட்க.வள்ளலார் பாடியது என்று அவர் சொன்னார்.* உடனே சுவாமிகள் இப்படி எல்லாம் பாடி என்னை அலைகழிக்க வைத்துள்ளீர்கள் என்று பெருமிதம் கொண்டு இன்னும் என்னை சோதிக்க வேண்டாம் என்றார்..


*சுவாமிகளை நோக்கி வள்ளலார் இங்கு எவ்வளவு நேரம் உரையாடினோமோ அவ்வளவும்  அனுபவித்தில் வந்தால் விசேடம் என்றார்.*


சுவாமிகள் வள்ளலாரிடம் நீங்கள் பெரிய ஞானம் உள்ளவர் எனத்தெரியும்.

இவ்வளவு பெரிய *ஞானசித்தர்* என்பதை இன்று நேரில் கண்டேன்.

உங்களை சந்தித்தது நான் செய்தபுண்ணியம் எனக்கு கிடைத்த பெரியபாக்கியம் எனக் கூறினார்.


*விபூதி பிரசாதம் கேட்ட சுந்தரசுவாமிகள்!*

வள்ளலாரிடம் சுந்தரசுவாமிகள் உங்கள் கரங்களால் விபூதி வழங்கவேண்டும் எனக்கேட்டார். முத்தி பெறும் தகுதி உடையவர் என்பதால் சுவாமி அவர்களுக்கு விபூதி தர மறுத்துவிட்டார்.


ஆயினும் சுந்தரசுவாமிகள் தன்னிடம் இருந்த வாழைமட்டையில் உள்ள விபூதியை எடுத்து வள்ளலார் நெற்றில் இட்டு்.அவற்றை மீண்டும் எடுத்து தன்னிடம் உள்ள விபூதியில் கலந்து தானும் இட்டுக்கொண்டு அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்தார்.


பின்பு இருதரப்பினரும் அன்புகலந்த புன்னகையுடன் வந்தனம் கூறி பிரியா விடைபெற்றார்கள்.


*பின்பு நடந்த விபரம்*


சுந்தரசுவாமிகளை வழிஅனுப்ப கீழவீதிச் சந்நிதிக்கு சென்ற அன்பர்கள்.  சுவாமிகளிடம் நீங்கள் வள்ளலார் முன்பு நேரே உட்காராமல் தள்ளி உட்கார்ந்த காரணம் என்ன என கேட்டார்கள்.

அதற்கு சுவாமிகள். *வள்ளலார் முன்பு உட்காருவோர் சக்தியை அப்போதே இழுத்துக்கொள்ளும் ஆற்றல்மிக்க  ஞானசித்தர் என்று விடை அளித்துவிட்டு சென்றுவிட்டார்*  


*கண்ணீர் விட்ட வள்ளலார்!*


சுந்தரசுவாமிகள் சென்றதும் தம் அன்பர்களிடம். கருணையே வடிவமான வள்ளலார். நல்ல ஒழுக்கமுள்ளவர் உண்மையானவர். பற்று அற்றவர் சுந்தரசுவாமிகள்.முத்திபெறும் வாய்ப்பு இருந்தும் மேற்கொண்டு சித்தி பெறமுடியாமல்

(மரணத்தை வெல்ல முடியாமல்)  இன்னும் சில ஆண்டுகளில் மரணம் அடைந்துவிடுவார் என்று சொல்லி கண்களில் நீர்விட்டு அழுதுள்ளார். 


வள்ளலார் சொல்லியவாறே 1878 ஆம் ஆண்டு அக்டோபர் 21 தேதி ஜீவசமாதி ஆனார்.

அவர் சமாதி புதுக்கோட்டையில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள அரிமளம் என்ற இடத்தில் உள்ளன. 


*வடலூருக்கு அடுத்த 5 கி.மீ தொலைவில் உள்ள மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகையில் 30-1-1874 ஆம் நாள் இரவு 12 மணிக்கு வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தார்* ( சுத்த பிரணவ ஞான சித்தி பெற்றார்) மரணம் அடையாமல்  ஒளிதேகம் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்.


*முத்தி என்பது சாதனம் ! சித்தி என்பது சாத்தியம்*!


முத்தியென்பது நிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்ற என்அருட்பெருஞ் ஜோதி!


சித்தியென்பது நிலைசேர்ந்த அநுபவம்

அத்திறல் என்ற என்அருட்பெருஞ் ஜோதி! 


என்னும் அகவல் வரிகளின் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்துகிறார்.


*நாமும் வள்ளலார் வழியில் வாழ்ந்து முத்தேக சித்திபெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வெள்ளி, 18 ஜூன், 2021

நேரலை ஒலி ஒளி பரப்பு செய்தவர் வள்ளலார்.!

 *நேரலை ஒலி ஒளி பரப்பு செய்தவர் வள்ளலார்*


*எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !


வள்ளலார் வடலூரில் இருந்து  ஆனிமாதம் பவுர்ணமி அன்று ஆனிதிருமஞ்சனவிழாவிற்கு  வருடாவருடம் சிதம்பரம் கோயிலுக்கு அன்பர்களுடன் செல்வது வழக்கம்.


வடலூரில் சத்திய தருமச்சாலை ஆரம்பித்த பிறகு ஒருமுறை அன்பர்களுடன் சிதம்பரம் ஆனி திருமஞ்சன விழாவிற்கு அன்பர்களை அழைத்து சென்றுள்ளார்.

அதற்கு அடுத்த வருடமும்  சிதம்பரம் விழாவிற்கு வள்ளலார் அழைத்து செல்வார் என்ற எண்ணத்துடன் அன்பர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். 


ஒருசில அன்பர்கள் தருமச்சாலையில் உள்ள அன்பர்களிடம் சொல்லிவிட்டு முன்கூட்டியே சிதம்பரம் சென்று விட்டார்கள். மீதம் உள்ளவர்கள் வள்ளலார் வருவார் அவருடன் செல்லலாம் என காத்திருந்தனர் வள்ளலார் செல்லவில்லை.


சிதம்பரம் விழாநேரம் நெருங்கியும் வள்ளலார் எதுவும் சொல்லாமல் தருமச்சாலையிலே இருந்தார். 

அங்குள்ள அன்பர்களின் ஞாபகம் எல்லாம் சிதம்பரம் விழாவை காண முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அதையே நினைத்து கொண்டு இருந்துள்ளார்கள்.*அன்பர்களின் எண்ணத்தை அறிந்து கொண்ட வள்ளலார்*

சிதம்பரத்தில்  சாமிதரிசனம் காட்டும் நேரம் வந்த்தாகிவிட்டது.


*உடனே தருமச்சாலையின் சுவரில் ஒரு வெள்ளைத் துணியை திரையாக கட்டச் சொன்னார்கள் தருமச்சாலையில் உள்ளவர்கள் அனைவரையும் திரையின் முன்னே அமரச்சொன்னார்கள்*.


அனைவரும் திரையின் முன்னே அமரந்தார்கள்.

*சிதம்பரத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சன விழாக் காட்சிகளை இங்குள்ளவர்கள் திரையில் கண்டு களித்தார்கள்*.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செயல் வெளியில் எவரும் சொல்ல வேண்டாம் என கட்டளை இட்டார். *வள்ளலார் பேச்சை நம் மக்கள் அன்றும் கேட்கவில்லை இன்றும் கேட்கவில்லை.*


பின் அந்நிகழ்ச்சியை  நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அந்த அருள் அற்புதத்தை சொல்லி சொல்லி  ஆச்சரியமும் ஆனந்த கண்ணீரும் மல்க பேசி பேசி *அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஆனந்தமும்  அடைந்தார்கள்*.

 எப்படியோ அந்நிகழ்ச்சி  தமிழகம் எங்கும் விரைவாக பரவியது.


*அதன் பின்னர் வள்ளலார் சிதம்பரம் செல்வதை நிறுத்திக் கொண்டார்*.


*வள்ளலார் தேகம் சுத்த பிரணவ ஞானதேகம் பெற்ற அருள் ஒளி உடம்பு*


( *அவர் தன் உண்மையான அருள் உடம்பை வெளியே காட்டிக் கொள்வதில்லை.மேட்டுக்குப்பத்தில் திருஅறைக்குள் சென்று சித்தி பெறுகின்றவரை சாதாரண மனிதர் போலவே காட்சி  கொடுத்துக் கொண்டு இருப்பார்*.)


அப்போது வீடியோ ஆடியோ எடுக்கும் விஞ்ஞான அறிவியல் கருவிகள் எதுவும் இல்லை. மின்சாரம் இல்லாத காலம்.  வள்ளல்பெருமானால் சிதம்பரம் நிகழ்ச்சியை  நேரலையில் ஒளி ஒலிபரப்பு காட்சிகளை எவ்வாறு காட்ட நேர்ந்தது மக்கள் சிந்திக்க வேண்டும். 


*வள்ளலார் உடம்பு பஞ்சபூத தேகம் அல்ல. ஞானதேகம் என்னும் அருள் தேகம் அதாவது அருள் நிறைந்த ஒளிதேகம் என்பது அங்குள்ளவர்கள் எவருக்கும் தெரியாது*.


அருள் தேகம் உள்ளவர்களுக்கு *ஆன்ம ஒளிதேக அணுக்கதிர் வீச்சுக்கள் ஒவ்வொன்றும் அருள் கண்கள் உடையதாகும்.* அவர்களின் அருள் கண்கள் அண்டகோடிகள் எல்லாம் ஊடுருவி செல்லும் ஆற்றல் கொண்டதாகும். *நினைத்த மாத்திரத்தில் எதுவும் நடக்கும்*.

அதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் தடுக்க முடியாதது. 


*சிதம்பரம் விழா நிகழ்ச்சிகளை அப்படியே தன் உடம்பில் வாங்கி தருமச்சாலையில் கட்டியுள்ள திரையில் செலுத்தி அன்பர்களை பார்க்க வைத்துள்ளார்* 


*இவைகள் மாயா ஜால  காட்சிகள் அல்ல அணு அறிவியல் சார்ந்தது*


*வள்ளலார் பாடல்* ! 


*கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே*

அதிசயம்  இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி!*


அண்டமும் அதன் மேலண்டமு மவற்றுள

பண்டமுங் காட்டிய பரம்பர மணியே!


அண்ட கோ டிகளெலாம் அரைக்கணத் தேகிக்

கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே!


*அருள் பெறில் துரும்புமோர் ஐந்தொழில் புரியும்*

*தெருளிது எனவே செப்பிய சிவமே!*


அருளுறில் எல்லாம் மாகும் ஈதுண்மை

அருளுற முயல்க வென்றருளிய சிவமே! 


என்ற உண்மைகளை அருட்பெருஞ்ஜோதிஅகவல் வரிகளில் பதிவுசெய்கிறார்.


மேலும் 


*அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே*

*அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே*


*பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே*

*பேசிப்பேசி வியக்கின் றேன் இப்பிறவி தன்னையே*.! 


மேலும்

இதுபோல் நூற்றுக் கணக்கான பாடல்களில் அருள் பெற்ற உடம்பின் அதிசயங்கள் பற்றிய ஆற்றலைப் பற்றி பதிவு செய்துள்ளார். 


வடலூரில் வள்ளலார் ஒலி ஒளி காட்சிகளை நேரலையில் காட்டியதுபோல் நாமும் அருள் பெற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தலாம்.

கண்டுகளிக்கலாம்


*பற்றிய பற்று அனைத்தினையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே*. 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896

வியாழன், 17 ஜூன், 2021

நோயும் பேயும் விரட்டியது !

 *நோயும் பேயும் விரட்டியது !* 


*வள்ளல்பெருமான் செய்த அற்புதங்களில்  புதுமையானது*


வேட்டவலம் ஜமீன்தார் *அப்பாசாமி பண்டாரியார்* அவர்களுக்கு இரண்டு மனைவிகள்.

முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத்தால் இரண்டாவதாக மணம் முடித்துக்கொண்டார். 


ஒரு மனைவிக்கு பிரம்மராட்சசி என்ற பேயும். ஒருமனைவிக்கு மகோதரம் என்ற தீராத வயிற்றுவலியும் வந்து விட்டது. 

இரண்டு மனைவிகள் இருந்தும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்து இருந்தும் ஜமீன்தாரர் என்ற பெருமை இருந்தும் வாழ்க்கையில். நிம்மதி இல்லை மகிழ்ச்சி இல்லை.  துன்பங்கள் நிறைந்து வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருந்தார்.


பிரம்ம ராட்சசி பேய் பிடித்த மனைவியின் பேய் ஓட்டுவதற்காக நிறைய பூசாரிகளை வரவைத்து *மேளம் தாளம் பம்பை உடுக்கை கொம்பு* போன்ற தோல் கருவிகளைக் கொண்டு சத்தங்களை எழுப்பி பேய் ஓட்டிப் பார்த்தார்கள்.

மேலும் *சிறுதெய்வங்கள் பெயரால் ஆடு மாடு பன்றி கோழி போன்ற உயிர் இனங்களை பலி (காவு)கொடுத்தும் பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்து வேண்டியும் பேய் அகன்றபாடில்லை*.


அடுத்து *தீராத வயிற்றுவலியால் துன்பப்படும் மனைவிக்கு சிறந்த  மருத்துவர்களை கொண்டு *மருந்து கொடுத்தும்* .

*மந்திரவாதிகளால் தந்திர  மந்திரங்கள் சொல்லியும்* வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

மேலும் பலபேர் பலவிதமாக சொல்லக் கேட்டும்  எல்லா முயற்சியும் செய்து பார்த்தும் *ஜமீன்தாரின் குடும்பத்தின்  துன்பம் நீங்கவில்லை*. 


*வள்ளலார் வருகை* 


வள்ளலார் மகிமையை பிறரால் அறிந்த ஜமீன்தார் வள்ளல்

பெருமானை அழைத்து வரும்படி தகுதியானவரை வடலூருக்கு அனுப்பினார்.

*கருணையே வடிவமான வள்ளலார். வேண்டுகோளுக்கு இணங்க *வேட்டவலம் ஜமீன் மாளிகைக்கு* வருகை புரிந்தார்.


*வள்ளலார் பாடல்*


மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்


*கண்ணுறப் பார்த்தும்* *செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்*


எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்


*நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.*!  

 

உயிர் இரக்கத்தின் வடிவமாக வாழ்ந்து  கொண்டு வரும் வள்ளலார் வேட்டவலம் செல்கிறார்.


*ஜமீன்தாருக்கு சந்தேகம்*


வள்ளலார் வருகை அறிந்த ஜமீன்தார் ஒரே மாதிரியான *இரண்டு நாற்காலிகளை* வைத்து அவ்விரண்டில் *தான் மனத்தில் நினைத்த நாற்காலியில்* உட்கார்ந்தால் மகான் என தீர்மானிக்கலாம்  என எண்ணினார்.


*வள்ளலார் வந்து எந்த நாற்காலியிலும் அமரவில்லை*.


*பேய் மாடியில் இருந்து கீழே விழுதல்*


வள்ளலார் ஜமீன்மாளிகை நோக்கி வருவதை கண்டதும்  மாடியில் பேய்பிடித்திருந்த மனைவி. *இங்கே வராதே !  இங்கே வராதே ! என்ற சத்தம் போட்டது. வள்ளலார ஜமீன் மாளிகையை நெருங்கியதும் மாடியில் இருந்து வள்ளலார் கால் முன் கீழே விழுந்தார்.அங்கிருந்தவர்கள் பயந்து அவரை தூக்கி காப்பாற்ற முயன்றார்கள். வள்ளலார் *பிச்* *என்று சொல்லி யாரும் நெறுங்காதீர்கள் என்றார்*. 


பேய் பிடித்த மனைவி மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உடம்பில் எந்தவிதமான  காயமும் அடியும் படாமல் *பேய் அகன்று விட்டது*. ஜமீன்தார் அருகில் மனைவிக்குண்டான  அச்சம். மடம். நாணம். வெட்கம் போன்ற அடக்கத்துடன் சென்று நின்றுகொண்டு வள்ளலாரை நோக்கி இருவரும் இருகரம் கூப்பி வணங்கினார்கள்.


*வயிற்று வலி அகன்றது*


அடுத்து தீராத வயிற்று வலியால் அவதிப்படும் மனைவி. வீட்டின் உள்ளே கட்டிலில் படுத்திருப்பதை கண்ட வள்ளலார் அருகில் சென்று *வாயைத் திறக்க சொல்லி ஏதோ ஒன்று கொடுத்து வாயில்போட்டு தண்ணீர் குடிக்கச் சொன்னார்*. சிறிது நேரத்தில் *தீராத வயிற்றுவலி போன இடம் தெரியாமல் அகன்று விட்டது*. இந்த மனைவியும் சாதாரணமாக எழுந்து ஜமீன்தார் அருகில் சென்று வள்ளல்பெருமானை நோக்கி  ஜமீன்தாரும் இரண்டு மனைவிகளும் ஆக மூவரும் கைகூப்பி வணங்கினார்கள்.


*இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும்* என்று  சொல்லிவிட்டு வெளியில் வந்து  *ஜமீன்தார் மனதில் நினைத்திருந்த நாற்காலில் அமர்ந்தார்*.


ஜமீனுக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் புரியாமல் நடுங்கினார்.

*இவர்தான் உண்மையான மகான்*. *எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்க வந்த தெய்வம்* என மூவரும் மனதில் நினைத்தவாறு வணங்கி  வேண்டினார்கள். 


வள்ளல்பெருமான் எண்ணத்திற்கு இணங்க எதாவது செய்ய வேண்டும் என் எண்ணினார்கள்.


*சுவாமி* நாங்கள் என்ன செய்ய வேண்டும்  கட்டளை இடுங்கள் உடனே செய்கிறோம் என வேண்டினர்.

அதற்கு வள்ளலார் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.

*உங்கள் கட்டுபாட்டில் உள்ள சிறு தெய்வங்களுக்கு* *உயிர்பலி செய்யாமல் தடுத்தால் போதும்* என்று சொல்லிவிட்டு விடைபெற்று சென்றுவிட்டார்.


*வள்ளலார் பாடல்!*


துண்ணெனக் கொடியோர் *பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்*


கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்


மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்


எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.!


மேலே கண்ட பாடல் வள்ளலாரின் உயிர் இரக்கம் பற்றி வெளிப்படுத்துகிறது.  


*வள்ளலார் வாக்கை சிரமேற்கொண்டு தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்வதை ஜமீன்தார் நிறுத்திவிட்டார்*


அடிக்கடி மனைவிகளுடன் வடலூர் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள்.

*ஏழைகளின் பசிப்பிணியை போக்க*

*சத்திய தருமச்சாலைக்கு வேண்டிய அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வண்டி வண்டியாக வழங்கி வந்துள்ளார்கள்*.


நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் வேட்டவலம் ஜமீன் அரண்மனைக்கு சென்று இருந்தேன். *அவர் பேத்தியின் மகள் லலிதா ஜமீன்*  அவர்கள் அங்கு இருந்தார்கள் அவர்களிடம் வெகுநேரம் உரையாடினேன்.


அவர் மாடிக்கு என்னை அழைத்து சென்று அங்குள்ள பழைய இரும்பு பெட்டியை திறந்து காட்டினார் அதில் *ஆறு திருமுறை அடங்கிய திருஅருட்பா நூல் மங்கிய ( கருப்பு கலருடன்) பேப்பருடன்  இருந்தது*. அவற்றை என்னிடம் கொடுத்து நீங்களே ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார்.

மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு வந்தேன். 


வள்ளலார் சித்தி பெற்ற பின்பும் வடலூருக்கும் வேட்டவலம் ஜமீனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

புதன், 16 ஜூன், 2021

வேசியர் தெருவில் நிர்வாண சந்நியாசி !

 *வேசியர் தெருவில் நிர்வாண சந்நியாசி* ! 


*சென்னையில் வள்ளலார் வாழ்ந்த  இடம் ஏழுகிணறு வீராசாமிபிள்ளை தெரு 38ஆம் எண்வீடு.* அந்த வீட்டிற்கு அருகில் வடக்கு சந்நிதி வீதி *அது தாசிவீதி(வேசி)* .தெற்கு *நெல்லிக்காய்ப் பண்டாரச்சந்து தெரு.*


வள்ளலார் தினமும் திருவொற்றியூர் கோயிலுக்கு  பண்டாரத்தெரு வழியாக செல்வது வழக்கம். *வடக்கு சந்நிதிதெரு வேசியர் தெரு  என்பதால் அந்த வழியாக செல்வதில்லை*.


*நிர்வாண சந்நியாசி*


திருவொற்றியூர் செல்லும் சந்நிதிதெருவில் குடித்தனம் யில்லாத ஒரு வீட்டின் திண்ணையில் *தோபா சுவாமிகள்* என்பவர் ஆடை அணியாமல் நிர்வாணத்துடன் அமர்ந்து இருப்பதால் நிர்வாண சந்நியாசி என்று மக்களால் சொல்லப்படுவார். 


அந்த வேசியர் சந்நிதி தெருவில் போவோர் வருவோர்களை மனிதர்களாக நினைக்காமல் அவர்களின் குணத்திற்கு தகுந்தவாறு. 


*மாடுபோகிறது*

*கழுதைபோகிறது*.

*நாய்போகிறது*.

*நரிபோகிறது*.

*குரங்குபோகிறது* என்று மிருகங்கள் பெயரைவைத்து சொல்லிக்கொண்டே இருப்பது அவருடைய வழக்கம். 


மக்கள் அவரை *பைத்தியம்* என நினைத்து அவர்பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.


அவர் பைத்தியம் அல்ல *சந்நியாசியின் எண்ணம்* மனிதர்கள் முன் ஆடை அவசியம் தேவை.அவர் கண்களுக்கு எவரும் மனிதர்களாக தோன்றவில்லை.மிருகங்களாகவே தோன்றினார்கள் ஆதலால் அந்த மனித மிருகங்களின் முன்னாடி ஆடை அணிந்துகொள்ள தேவை இல்லை என்பதால் நிர்வாணமாகவே  இருந்துள்ளார். 


*உத்தம மனிதர். வள்ளலார்*  


எப்போதும் நெல்லிக்காய் பண்டாரத்தெரு வழியாக செல்லும் வள்ளலார் அத்தெருவில் ஏதோ ஒரு இறப்பு நடந்துள்ளதால்.

வழக்கத்திற்கு மாறாக சந்நிதி தெரு வழியாக 

திருவொற்றியூர் செல்ல சென்றார்.


அன்று அந்த தெருவில் புதியதாக வந்த வள்ளலாரைக் கண்ட நிர்வாணத் துறவியார்   *இதோ ஒர் உத்தம மனிதர்*  வருகிறார் என்று கூறியவாறே கைகளால் மெய்யைப் (உருப்புகளை) பொத்திக்கொண்டார்.அங்குள்ள தூண் மறைவில் ஒதுங்கினார். 


*உத்தம மனிதர் வள்ளலார்* அவரைப்பார்த்து  அருகில் சென்று அழைத்து தான் மேல் போர்த்தியுள்ள துணியைக் கொடுத்து அணிந்துகொள்ள சொல்கிறார். ஒருசில நிமிடங்கள் அவருக்கு அறிவுரை வழங்கினார். நீங்கள் இருக்கும் இடம் இதுவல்ல. தனிமையில் சென்று இறை சிந்தனையுடன் உங்கள் காலத்தை நல் வழியில் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியவுடன் தோபாசுவாமிகள் வள்ளலாரிடம் தலை  வணங்கி ஆசிபெற்று அங்கிருந்து  சென்றுவிட்டார்.


தோபாசுவாமிகள் வேலூர் சென்று சைதாப்பேட்டையில் ஆசிரமம் அமைத்து நீண்ட நாள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளார்.

இன்னும் அவர் சமாதியில் மக்கள் வழிபட்டுக்கொண்டு வருகிறார்கள்.


இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்? *உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பை இறைவன் தந்துள்ளார்*

எனவே நாம் தாழ்ந்த நிலைக்கு செல்லாமல் உயர்ந்த ஒழுக்க நிலையில் வாழ்ந்து உயர்ந்த அருள் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழவே  வேண்டும்  


ஒழுக்கம் நிறைந்து உத்தம மனிதனாக வாழ்ந்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். *மக்கள் ஏற்றுக் கொண்டால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்*.


*வள்ளலார் இளம்வயதில் பாடியபாடல்* ! 


*ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற*

*உத்தமர்தம் உறவுவேண்டும்*

*உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்*

*உறவு கலவாமை வேண்டும்*


*பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்* *பொய்மை*

*பேசாது இருக்க்வேண்டும்*

*பெருநெறி பிடித்தொழுக வேண்டும்* 

*மதமானபேய்*

*பிடியா திருக்கவேண்டும்*


*மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்* *உனை*

*மறவாது* *இருக்கவேண்டும்*

*மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்* 


*நோயற்ற*

*வாழ்வில்நான்* *வாழவேண்டும்* 


என்று பாடியுள்ளார்  .


*அருட்பெருஞ்ஜோதி அகவல் இறுதியில்*


உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! 


*சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை* 


போற்றி நின் பேரருள் போற்று நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி! 


என்னும் வரிகளில் அருட்பெருஞ்ஜோதி அகவலை நிறைவு செய்கிறார். 


மனிதன் சுயநலம் இல்லாமல் பொதுநலத்துடன் வாழ்ந்து வள்ளலார் போல் *உத்தம மனிதனாக* வாழ்வாங்கு  வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

திங்கள், 14 ஜூன், 2021

நான்கு வயது சிறுவனை ஏழு மொழியில் பேச வைத்தவர் !

 *4 நான்கு வயது சிறுவனை ஏழு மொழியில் பேச வைத்தது!* 


வள்ளலார் காலத்தில் பாண்டிச்சேரியில் தந்தி அலுவலக மேலாளராக பணிபுரிந்தவர்  *பிநாகபாணி*  என்பவர் சுமார் ஏழு எட்டு மொழிகளில் பேசும் திறமை வாய்ந்தவர். 


அவர் *வடலூரில்  வள்ளலாருடன்  இருந்தவர்களை. தருமச்சாலையில் சும்மா  தெண்டச் சோறு சாப்பிட்டுவிட்டு  திரியும்  சோம்பேரிகள் என்றும்.வெட்டி பயல்கள் என்றும் இகழ்ந்து பேசியுள்ளார்* 


அவர் ஒருநாள் வள்ளலாரை சந்திக்க வடலூர் வந்தார்.


வள்ளலாருக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்ற  எண்ணம் கொண்டு. வள்ளலாரிடம் தமக்குத்  தெரிந்த மொழிகளில் பேசி ஆச்சிரியப்படுத்தி அசத்திவிட வேண்டும் என்ற கர்வமான எண்ணத்தில் வந்துள்ளார்.


பிநாகபாணி அவர்கள் வரும்போது வள்ளலார் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார். அவர் வருவதற்கு முன்னரே வள்ளலார். *ஒருவர் புத்தி சொல்ல வருகிறார்* என்று மக்களிடம் சொல்லியுள்ளார்.

பிநாகபாணி வந்து அரைமணி நேரம் நின்று கொண்டு இருந்தார்.


வள்ளலாரின் முதன்மை அன்பர் வேலாயுதம் அவர்கள் மகன் *திரு நாகேஸ்வரன்* நான்கு வயது சிறுவன் வள்ளலார் அருகில் அமர்ந்து சொற்பொழிவு கேட்டுக் கொண்டு இருந்தான்.


வள்ளலார் அவன் தலையில் கைவைத்து விட்டு பிநாகபாணியை எதிரே  நிறுத்தி உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்றார்.ஐந்து ஆறு மொழிகள் தெரியும் என்று குறைத்தே சொன்னார்.


வள்ளலார் *எந்த மொழியில்* வேண்டுமானாலும் இந்த பிள்ளையிடம் கேளுங்கள் பதில் சொல்வான் என்றார். பிநாகபாணி மூர்ச்சையாகி ஊமையாய் நின்றார்.


வள்ளலார் சிறிது நேரம் கழித்து ஏன் மவுனமாகி விட்டீர்கள்.எந்த மொழியில் வேண்டுமானாலும் *கேளும் கேளும்* என்றார். வாய் திறவாமல் மவுனமாகவே இருந்தார். *பிச்* என்று வள்ளலார் சொன்னவுடன் பேச ஆரம்பித்தார்.


பிநாகபாணி சிறிது நேரம் கழித்து *என்னை மன்னிக்க வேண்டும்* *நீங்கள் பூரண அருளாளர்.முற்றும் அறிந்தவர் என்பது தெரியாமல்* .நான் பல மொழி தெரியும் என்ற  அகங்காரத்தில் தடுமாறிவிட்டேன்.தவறாக நினைத்து விட்டேன் என்று வள்ளலார் காலில் விழவந்தார். யார் காலிலும் விழவேண்டும் என்று சொல்லிவிட்டு மனிதனாக திருந்தி வாழுங்கள் என வாழ்த்தி அனுப்பி வைத்தார்.


பிநாகபாணி திருந்தியவராய்  வந்தனம் சொல்லிவிட்டு சென்றார். 


*இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?*


பல கற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டாம்.

அலைகதிர் ஞாயிறை சிறு கைக்குடையும் காக்கும். 


சில கற்றார் கண்ணும் உலவாம் பல கற்றாற்கு அச்சானி அன்னதோர் சொல். 

என்ற வரிகள் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனது தமிழ் ஆசிரியர் சொல்லிய ஞாபகம் வந்தது. 


*பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்.*

*பிறர் மீது கோபியாதிருத்தல்*.

*தன்னை மதியாதிருத்தல்* என்னும் வார்த்தை வரிகள் கரண ஒழுக்கத்தில் கடைபிடிக்க வேண்டும் என வள்ளலார் சொல்லி உள்ளார்.


மனிதனாக வாழ்வதற்கு வள்ளலார் சொல்லியுள்ள *இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கத்தை* முழுமையாக கடைபிடித்தாலே போதுமானதாகும்.. 


*வள்ளலார் பாடல் !*


குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே


சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது


தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே


இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.! 


என்னும் பாடல் வரிகளில் உள்ளவாறு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896

ஞாயிறு, 13 ஜூன், 2021

உலக அதிசயம் ! உலக ரகசியம்!

 *உலக அதிசயம் ! உலக ரகசியம்!*


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் காட்டும் மேடைக்கு (முன்பு) வெளியே  சிற்சபை பொற்சபை என்று வலதுபுறமும் இடதுபுறமும் ஒருசிறிய கோபுரம் போல் அமைத்து கதவு வைத்து பூட்டு போட்டு இருப்பார்கள்.

தினமும் கதவு திறந்து ஞானசபை பூசகர் சிற்சபை பொற்சபை தீபாராதனை காட்டிவிட்டு ஜோதிதரிசனம் காட்டுவது வழக்கம்.


அந்த *சிற்சபை பொற்சபைக்குள் துருபிடிக்காத   இரண்டு இரும்பு பெட்டிகள் இருக்கிறது.* *அதன் உள்ளே என்ன இருக்கிறது என்ற விபரம் இதுவரையிலும் ஒருவருக்கும் தெரியாது*  


அந்த பெட்டியில் மூடியோ சாவிபோடும் துவாரமோ கிடையாது *நான்கு சதுரமாய் மோல்டா கனமான பெட்டி இருக்கும்* அவற்றை திறந்து பார்க்கும் வாய்ப்புக்கள் தைரியம் எவருக்கும் கிடையாது.

இதுவரையில் எவரும் உடைத்து பார்க்கவும் இல்லை. ஏன்? என்றால் அதனுள் என்ன இருக்குமோ என்ற பயம்தான் காரணம்.


*மேட்டுகுப்பம் சித்திவளாகத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற அறையில் இருந்த பெட்டிகள்தான் அந்த இரண்டு பெட்டிகளும்.* 


*இரண்டு பெட்டிகளும் சத்திய ஞானசபைக்கு எப்படி வநத்து* ?


வள்ளலார் சித்தி அடைந்தபின் வள்ளலார் உடன் இருந்த அன்பர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்று அவரவர் பணிகளை கவனிக்க சென்றுவிட்டனர்.


வள்ளலார் உடன் இருந்தவர்களில் சபாதி சிவாச்சாரியாரும் ஒருவர். அவர் மட்டும் வடலூர் விட்டு வெளியே செல்லவில்லை.உள்ளூர் மக்கள் ஆதரவுடன் ஞானசபையை தன்வசமாக வைத்துக் கொண்டு வழிபாடு செய்ய துவங்கிவிட்டார். வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமாக வழிபாட்டு முறைகளை தனக்கு சாதகமாக சிலவற்றை  மாற்றிக் கொண்டார்.( அவற்றைப்பற்றி வேறு கட்டுரையில் தெரிந்து கொள்வோம் ) 


*சபாபதி குருக்கள்  செய்த சூழ்ச்சி!*


மேட்டுகுப்பம் வள்ளலார் சித்திபெற்ற சித்தி வளாகத்தின் அறை சாவி அவ்வூர் மணியக்காரரிடம் பாதுகாப்பாக இருந்தது. சபாபதி குருக்கள் மணியக்காரரிடம் அன்பாக பேசி அறை சாவியை பெற்றுக்கொண்டார்.வள்ளலார் உடன் இருந்தவர் என்பதால் நம்பிக்கையுடன் சாவியை கொடுத்து விட்டார்.


ஒருநாள் யாருக்கும் தெரியாமல் வள்ளலார் சித்திபெற்ற திருவறையை திறந்து அங்கு இருந்த இரண்டு பெட்டிகளிலும்.

வள்ளலார் என்ன வைத்துள்ளார் என்பதை அறிந்து   கொள்ளவும் கைபற்றவும் உடைக்க முயன்று பெரிய இரும்பு சுத்தியால் தட்டி உள்ளார்.உடைக்க முடியவில்லை சத்தம்தான் வெளியில் வந்த்து.


*மணையக்காரர் வீடு அருகில்*.


அருகில் வசித்துவரும் மணியக்காரர் காதில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டு சித்திவளாகத்திற்கு வந்துள்ளார் .

மணையக்காரர் வருவதை அறிந்து கொண்ட சபாபதி குருக்கள் உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.


அய்யா வாங்க வாங்க நல்ல நேரத்தில் வந்தீர்கள்.இந்த இரண்டு பெட்டியையும் வடலூரில் சத்திய ஞானசபையில் உள்ள சிற்சபை பொற்சபைக்குள் வைத்து மக்கள் வழிபாட்டிற்கு வைத்துவிடலாம் என்றார்.

குருக்கள் சொல்வது நல்லதுதானே என எண்ணி இரண்டு பெட்டிகளையும் மணையக்காரர் வண்டிகாரனிடம் சொல்லி தங்கள் மாட்டு வண்டியிலே ஏற்றி வடலூர் கொண்டுவந்து சத்திய ஞானசபையில் சேர்த்துள்ளார். 


இப்போதும் சிற்சபை பொற்சபையில்  வைத்து வழிபாடு செய்துவருவது அந்த இரண்டு பெட்டிகளேயாகும்.


*இந்த விபரம் 40 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுகுப்பம் மணியக்காரர் பேரன் மகன் வாயிலாக எங்களிடம் சொல்லக் கேட்ட உண்மை செய்தியாகும்* அவரும் மரணம் அடைந்துவிட்டார்.


*இரகசியம் அதிசயம்!* 


*இன்றுவரை அந்த பெட்டிகளின் உள்ளே வள்ளலார் என்ன வைத்துள்ளார் என்பது ஒருவருக்கும் தெரியாது* *உடைக்கவும் முடியாமல் திறக்கவும் முடியாமல் அப்பெட்டிகள் உள்ளன*. *இதுவே உலக அதிசயமாகும். உலக ரகசியமாகும்.* 


வள்ளலார் போல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள்பெற்று மரணத்தை வென்ற அருளாளர்கள் வந்தால்தான் அந்த இருபெட்டிக்குள் என்ன இருக்கின்றது என்பது தெரியவரும்.


*அவ்வாறு அருள் பெறும் தகுதி உங்களில் ஒருவராகவும் இருக்கலாம்.* *நானாகவும் இருக்கலாம்* 


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யாரைத் தேர்வு செய்வார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்


அதுவரையில் காத்திருப்போம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !.


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வியாழன், 10 ஜூன், 2021

சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல் !

 *சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல்* ! 


தருமமிகு சென்னையில் 35 ஆண்டுகள் வள்ளலார் வாழ்ந்துள்ளார். 


வள்ளலார் காலத்தில்  காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த *மகா பெரியவர்  சங்கராச்சாரியார்* அவர்களுக்கு ஒரு சந்தேகம் (ஐயம்) வந்துவிட்டது. அவர் சமஸ்கிருதம் மொழியில் முழுவதிலும் பாண்டித்தியம் பெற்றவர். பல மொழிகளை நன்கு படித்தவர்  உணர்ந்தவர் எல்லாம் தெரிந்தவர்.


சமஸ்கிருதம் என்னும் வேதநூலில்  ஒருசில பகுதிகளில் உள்ள வாக்கியங்களுக்கு அதன் உண்மையான  அர்த்தம் அவருக்கு புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை. அவற்றில் உள்ள சந்தேகத்தை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்பது புரியாமல் தவித்துக் கொண்டு இருந்துள்ளார்.


அப்போது காஞ்சிபுரம் *மகாவித்வான் சபாபதி முதலியார்* அவர்கள் சங்கராச்சாரியார் அவர்களை ஏதேச்சியாக சந்திக்க சென்றுள்ளார்.

அவர் பெரியவருக்கு நன்கு தெரிந்தவர் பழக்கமானவர். 


அவரிடம் பெரியவா் சமஸ்கிருதத்தில் ஒரு சந்தேகம் வந்துள்ளது அவற்றிற்கு சரியான விளக்கம் வேண்டும் யாரிடம் கேட்டால் சரியான விளக்கம் கிடைக்கும்.

உமக்கு தெரிந்த சமஸ்கிருதம் நன்கு படித்த பண்டிதர் யாராவது தெரியுமா என கேட்டுள்ளார்.


ஆசிரியர் சபாபதி அவர்கள் சற்று நேரம் சிந்தித்துவிட்டு எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் இருக்கிறார் அவர் பெயர் ராமலிங்கம் சென்னையில் உள்ளார் என தெரிவித்துவிட்டு.

மேலும் ஒரு முக்கியமான விஷயம் !. அவர் பள்ளிக்கு போகாதவர் பாடம் கற்காதவர்.

ஆனாலும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் ராமலிங்கத்திற்கு நன்றாகத் தெரியும் என்றார்.


உடனே பெரியவர் லேசாக சிரித்தார்.பிறகு சொல்கிறார் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரங்கள் யாவும் தமிழிலும்  சமஸ்கிருதத்தில் படித்த எனக்கே விளக்கம் தெரியவில்லை.

பள்ளிக்கு செல்லாதவன் பாடம் படிக்காதவன் சமஸ்கிருதம் தெரியாதவன்.

மேலும் அவன் ஒரு சிறுவன் அவனுக்கு எவ்வாறு இதன் உண்மையும்  விளக்கமும் தெரியும் என கேட்டுள்ளார். 


*சபாபதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வித்வான் சபாபதி அவர்கள்* !


*காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் யார்* ? என்றால் இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களுக்கு சென்னையில் கல்வி போதித்தவர் புராணங்கள் யாவும் பாடம் சொல்லிக்கொடுத்தவர்.

அவரை புராண சொற்பொழிவு செய்யும் அளவிற்கு உயர்த்தியவர் *காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் அவர்கள்*. 


தம்பி இராமலிங்கத்திற்கு பள்ளிபருவம் எய்தியதும் தமையனார் சபாபதி அவர்கள் தாம் படித்த ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியாரிடம்   கற்வி கற்க அனுப்பி வைத்தார். 


இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும்.

பக்குவ நிலையையும்.

கந்தகோட்டம் மற்றும் திருவொற்றியூர் சென்று பக்தி பாடல்களை இலக்கணம் இலக்கியம் குறையாமலும்.

சொற்குற்றம் பொருட்குற்றம் இல்லாமலும் *கவிபாடும் திறமையைக் கண்டு அதிர்ந்து போனவர்தான் காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் அவர்கள்*.


அந்த வித்வான்  இவ்விளைஞர் ராமலிங்கம் கல்லாது உணரவும்.சொல்லாது உணரவும்.வல்லவர் என்பதை அறிந்து  கற்பிப்பதைக் கைவிட்டுவிட்டார்.


இந்த விபரம் காஞ்சிபுரம் மகாபெரியவர்  சங்கராச்சாரியார் அவர்களுக்கு தெரியாது. மகா வித்வான் சபாபதி முதலியாரும்  சொல்லவில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்.


*சந்திக்க ஏற்பாடு செய்தல்!*


சங்கராச்சாரியார் அவர்கள் விருப்பபடி சிறுவன் 

*இராமலிங்கரையும் மகாபெரியவரையும் சந்தித்து உரையாடல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது*.


வேத நூலான சமஸ்கிருத நூலில் உள்ள சந்தேகத்திற்கு இடமான பக்கங்களை இராமலிங்கரிடம் காட்டி விளக்கம் கேட்டார் மகாபெரியவர்.


*கொஞ்சநேரம் அந்த நூலை உற்று பார்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள வாக்கியங்களுக்கு உண்டான  விளக்கத்தையும் சொல்லிவிட்டு அதற்கும் மேலான உயர்ந்த விளக்கத்தையும் சொன்னார்*. ராமலிங்கர் சொல்லிய விளக்கத்தை கேட்டு

*மகா பெரியவர் மிகவும் ஆனந்தம் அடைந்து மெய் சிலிர்த்து மகிழ்ச்சி அடைந்தார்*.


இராமலிங்கம் சொல்லிய விளக்கத்தை கேட்ட பின்பு 

மகாபெரியவர் அவர்களுக்கு *சமஸ்கிருத நூலின் மேல் அளவில்லா மதிப்பும்.மரியாதையும்.பற்றும் விருப்பமும் ஆர்வமும் அதிகமாயிற்று.* அதில் உள்ள உயர்ந்த கருத்தாழம் உள்ள உயர்ந்த விளக்கத்தையும் கேட்டபின்பு இன்னும் அதிகமான பற்று *சமஸ்கிருத மொழிமீது* வந்து விட்டது.


பின்பு இராமலிங்கர் அவர்களிடம் ஒரு விடையை எதிர் பார்க்கிறார் பெரியவர் அவைதான் மிகவும் முக்கியமானது.


*அவை யாதெனில்*?.


*சமஸ்கிருத மொழி ஒன்றே உலகத்திற்கே தாய்மொழி என்று ஏற்றுக் கொள்ளலாமா ? என கேட்கிறார்.*


அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் காலம் தாழ்த்தாமல் *ஆம்* என்று ஏற்றுக் கொள்கிறார்.


*பின்பு மகாபெரியவர் சங்கராச்சாரியார் அவர்களிடம் இராமலிங்கம் ஒரு கேள்வி கேட்கிறார்*. அவை யாதெனில்.?


*தாய் என்று ஒன்று இருந்தால் தந்தை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? என கேட்கிறார்*.


மகா பெரியவர் *ஆம்*.என்று கூறிவிட்டு  *தாய் ஒன்று இருந்தால் தந்தை ஒன்று இருப்பதுதான் இயற்கையின் நியதி* அதுவே உயிர்களின் உற்பத்திக்கு காரண காரியமாகும் என பதில் அளிக்கிறார்.


அடுத்து இராமலிங்கர் சொல்கிறார். *உலகிற்கு  சமஸ்கிருதம் தாய்மொழி என்றால்*.

*உலகிற்கே தமிழ் தந்தை மொழி என்று சொல்லிவிட்டு  எழுந்து விடைபெற்று சென்று விடுகிறார்* *இராமலிங்கர்*


அருகில் இருந்த மகாவித்வான் சபாபதி முதலியார் மற்றும் கற்றறிந்த பெரியோர்கள் யாவரும் அதிசயிக்கும் வண்ணம் *தமிழ் மொழியின் பெருமையை தந்தைமொழி* என்று சொல்லி  மகாபெரியவர் வாயை இராமலிங்கம்  அடைத்து விட்டார் என்பதை நினைந்து சிந்தித்து  எல்லோரும் சற்று நேரம்  அமைதியாயினர்.


 *இவை யாவும்  நடந்த வண்ணம் உரைத்தல். சந்தேகம் தெளிதல் என்னும் தலைப்பின் செய்தியாகும்.*


*இராமலிங்கம் என்னும் வள்ளலார் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.*


எனவே 

*தமிழ்நாட்டிற்கு  தாயாகி தந்தையாகி தாங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும்*.


*இந்திய நாட்டிற்கும் உலகிற்கும் தமிழ் தந்தை மொழியாகும்* 


இந்தியாவின் *ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக தமிழ்மொழி ஜொலிக்கும் காலம் வந்தே தீரும்*


இறைவனால் படைக்கப்பட்ட தமிழ்மொழி தந்தை மொழி என்பதில் பெருமிதம் கொள்வோம். மற்ற மொழிகள் யாவும் மாயையால் ( சாத்தான்) மனிதர்களால் படைக்கப்பட்ட மொழிகளாகும். 


*கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழியாகும்*.


யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதானது எங்கும் காணோம் என்று போற்றப்படும் மொழியே தமிழ் மொழியாகும்.


*தமிழைப் படிப்போம் *தமிழைப் போற்றுவோம்*

*தமிழை வளர்ப்போம்* *தமிழால் மக்களை இணைப்போம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

புதன், 9 ஜூன், 2021

வடலூர் ஜோதி தரிசனம் காணும் உண்மை !

 *வடலூர் ஜோதி தரிசனம் காணும் உண்மை* !


எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ! 


*எல்லாவற்றுக்கும் வல்லமை பொருந்திய தனித்  தலைவன் ஒருவன் உண்டு.அவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே நம் எண்ணம் எல்லாம் நிறைவேறும் என்பது சத்தியமாகும்* என்பது வள்ளலார் வாக்கு. 


அந்த சத்தியவான் யார்? அவரைக் காண்பது எங்கனம். வள்ளலார் வாக்குமூலம்.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம்* !  


*25-11-1872, ஆம் ஆண்டு ! வள்ளலார் வெளியிட்டது* 


உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

*அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்*.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.


செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,

கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,

அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.


என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன். 

*என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும்*


நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய *ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்* பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் .


இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,


இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,

இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,


எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும். எல்லாப் பதங்களையும்,


எல்லாச் சத்திகளையும்,

எல்லாச் சத்தர்களையும்,

எல்லாக் கலைகளையும்,

எல்லாப் பொருள்களையும்


எல்லாத் தத்துவங்களையும்.

எல்லாத் தத்துவிகளையும். 


எல்லா உயிர்களையும்.

எல்லாச் செயல்களையும்.

எல்லா இச்சைகளையும்.

எல்லா ஞானங்களையும். எல்லாப் பயன்களையும்,


எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்

*தமது திருவருட் சத்தியால்* 


*தோற்றுவித்தல்*,

*வாழ்வித்தல்,*

*குற்றம் நீக்குவித்தல்* ,

*பக்குவம் வருவித்தல்*,

*விளக்கஞ் செய்வித்தல்,*


முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,


சர்வ காருண்யர் என்றும்,

சர்வ வல்லபர் என்றும்,

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை *அருட்பெருஞ் ஜோதியர்* என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற *உண்மைக் கடவுள் ஒருவரே* அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்* அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.


அவ்வாறு விளங்குகின்ற *ஒருவரே யாகிய கடவுளை* இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் (மனிதர்கள் ) அறிந்து,அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத *சத்திய சுகப்பூரணப்  பெருவாழ்வைப் பெற்று* வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,

பல்வேறு மதங்களிலும்,


பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,

*நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.*


இனி இச்சீவர்கள் ( மக்கள் ) விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் *உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்* முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய்.

எல்லாச் சமயங்களுக்கும்,

எல்லா மதங்களுக்கும்,

எல்லா மார்க்கங்களுக்கும், **உண்மைப் பொது நெறியாகி விளங்கும்*  *சுத்த சன்மார்கத்தைப் பெற்று* பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,


மேற்குறித்த *உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை* *இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடு கின்றோம் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, *அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்*.


ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர் களாகில்  கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி, *இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்* முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள். 


மேலே கண்ட *சத்திய ஞானசபையின்  உண்மை விளக்கம்   விளம்பரம்* என்னும் தலைப்பில் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* ஆணைப்படி பத்திரிகையை வெளிப்படுத்தி உள்ளார் வள்ளலார்.


நாம் வடலூர் சென்று சென்று  *ஜோதி தரிசனம்* காண்பது  எதற்காக என்பதை சுத்த சன்மார்க்கிகளும் பொது மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். 


உருவம் அற்ற ஒளிவழிபாடே ஜோதி வழிபாடாகும்.


*வடலூர் சத்திய ஞானசபையின் ஜோதி தரிசனம் என்பது சமயம் மதம் சார்ந்த  பக்தி மார்க்க சார்ந்த  தைப்பூசம் வழிபாடு போல் அல்ல. ஞானம் என்னும் பூரண அருள் பெற்று மரணத்தை வெல்லும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் இயற்கை உண்மையை வெளிப்படுத்தும் இயற்கை விளக்கத்தை காணும் அருள் பெறும் ஜோதி வழிபாடாகும்*.


உலகில் அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர் மட்டுமே ! எனவேதான் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளலார்.

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானசபையில் அமர்ந்து அருள் வழங்கும் இடமே வடலூர் சத்திய ஞானசபையாகும்.* 


ஆதலால் அடிக்கடி வடலூர் வந்து தரிசிக்கப் பெருவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர்பெற்று எழுதல். மூப்பினர் இளமைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் என்னும் சத்திய வாக்கை வெளிப்படுத்துகின்றார். 


வள்ளலார்பாடல் ! 


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!


என்னும் பாடல் வாயிலாகவும் அறியலாம். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

திங்கள், 7 ஜூன், 2021

தமிழ்மொழி மெய்மொழி !

 *தமிழ்மொழி மெய்மொழி*!


*தமிழ் மொழிக்கு மெய்மொழி என்று பெயர் வைக்கிறார் வள்ளலார்* 


தமிழ்மொழி மட்டும் மெய்மொழி என்றால் மற்ற மொழிகளின் தன்மை என்ன என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.


*எங்கனம் என்றால் ?*


*தமிழ்மொழியில் மட்டுமே இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  வெளிப்படையாக பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.அதனால் தமிழ்மொழிக்கு திருவருண் மெய்மொழி என்றும் பெயராகும்* 


கல்வி பயிலாத வள்ளலார் ! 


*எப்பள்ளியிலும் படிக்காமல் எந்த ஆசிரியரிடத்தும் கற்காமல்.கற்க வேண்டுவனவற்றை இயற்கை உண்மைக் கடவுடான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்திலே கற்றவர் வள்ளலார்*. 


வள்ளலார் பாடல் !   


*கற்றேன் சிற் றம்பலக் கல்வியைக்* *கற்றுக் கருணைநெறி*

*உற்றேன்* 


எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் 


உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.! 


என்றும் 


ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி! 


என்னும் பல பாடல்கள் வாயிலாக தெளிவுபடுத்துகின்றார்.


சுமார் 6000 ஆறாயிரம் தமிழ் பாடல்கள் கொண்ட திருஅருட்பா என்னும் அருள்  நூலை எழுதியுள்ளார். 


மேலும் உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்ற தொடங்கிய அக்காலத்தில்

*மனுநீதிச்சோழன்* வரலாற்றை *மனுமுறைகண்டவாசகம்* என்றும்.அற்றார் அழிபசிதீர்த்தல். உயிர் இரக்கத்தையும்.கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வலியுறுத்தி  *ஜீவகாருண்ய ஒழுக்கம்*

என்னும் இரண்டு உரைநடை நூல்களை *பாமரர்களுக்கும் புரியும் வகையில் விரிவாகவும் தெளிவாகவும் எளிய தமிழில்  எழுதியுள்ளார்.*


மேலும் *மெய்மொழி பொருள் விளக்கத்தையும் எழுதியுள்ளார்* 


மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய.

இந்திரிய.கரண.ஜீவ.

ஆன்மாவின் உண்மை ஒழுக்க நெறிகளையும். ஆன்மீக கருத்துக்களையும் இயற்கை உண்மை கடவுள் நிலைப்பற்றியும்.அருள் பெறும் வழிப்பற்றியும்.


சாகாக்கல்வி கற்று மரணம் அடையாமல்  *பேரின்ப சித்திப் பெருவாழ்வு* வாழும் வாழ்க்கை முறைகளையும்  மேலும் பலவகையான சீர்திருத்த உண்மைக்  கொள்கைகளையும். மனித உலக வாழ்க்கை முறைகளையும் அருள் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ள சுமார் 600 பக்கங்கள் கொண்ட உரைநடைப் பகுதி நூலையும் எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார்.


*தமிழுக்கு முதல் இடம் தந்தவர் வள்ளலார்* !


*வள்ளலார் வந்தபின்னே தான் மூடநம்பிக்கை அற்ற உண்மையான பகுத்தறிவு  ஆன்மீகம் உலகில் தோன்றின* அதனால் பல சமய மதங்களின் எதிர்ப்புக்களும் உண்டாயின. அருட்பா மறுட்பா வாதங்களும் உண்டாயிற்று. வள்ளலார் நீதி மன்றங்களுக்கும் சென்று வென்று வெற்றி வாகையும் சூடியுள்ளார்.


*உலகின் உயர்ந்த மொழி !*


*தமிழ்நாட்டில் பிறக்க வைத்து. தமிழ் மொழியில் பயிற்றுவித்து. தமிழ் மொழியில் பாடவைத்து. தமிழ் மொழியில் எழுதவைத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறார் வள்ளலார்*


வள்ளலார் சொல்வதை பாருங்கள் ! 


*இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் போது போக்கையும் உண்டுபண்ணுகின்ற *ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வெட்டாது*, *பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.* என்றும் பெருமையுடன் வெளிப்படுத்துகின்றார். அதே வேலையில் இறைவன் *சிற்சபையில் நடிக்கின்றார் செந்தமிழில் வளர்கின்றார்* என்கிறார் 


மேலும் ஏதும் ஒன்ற்றியாப் பேதையாம் பருவத்தே எனை ஆட்கொண்டு எனை உவந்தே *ஓதும் *இன்மொழியால்* *பாடவே பணித்த ஒருவனே*! இறைவன் தமிழ் மொழியில்  பாடவைத்து உலகிற்கு இறை உண்மையை வெளிப்படுத்துகிறார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கின்றார் வள்ளலார். 


*தமிழ் மொழிக்கு  மெய்மொழி* என்ற  உண்மையை தகுந்த ஆதாரத்தோடு வெளிப்படையாக  வெளிப்படுத்துகின்றார்.


எனவே மனிதர்கள்  எந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து இருந்தாலும் தமிழ் கற்றவர்கள் புண்ணியவான்களே ! தமிழ் கற்றவர்களே இறைவனை தொடர்பு கொள்ளவும். அருளைப் பெறவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.என்பதையும் வெளிப்படையாக சொல்லி உள்ளார். 


உலகில் எக்காலத்தும்  அழியாத ஒரே மொழி *திருவருண் மெய்மொழி* என்னும் தமிழ்மொழியே என்பதை மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும்.


தமிழ்மொழி மட்டுமே இறைவனால் படைக்கப்பட்ட மெய் மொழியாகும். *ஆதியும் அந்தமும் இல்லாததோர் அம்பலத்தே தோன்றிய மொழி தமிழ் மொழியாகும்.*

ஆதலால் தெய்வமொழி என்பதாகும்.


மற்ற மொழிகள்  யாவும் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் போன்றவைகளால் கற்பிக்கும் யாவும் மாயாசக்தியின் துணைகொண்டு படைக்கப்பட்ட மனிதர் மொழியாகும். 


*தமிழ்மொழி ஒன்றே* *ஆட்சி மொழிக்கு* *தகுதியான* 

*செம்மொழி யாகும்* 


உலகின் மூத்தமொழி.நித்தியமொழி தமிழ் மொழியாகும்.

*உயிரைப்பற்றி பேசுவதால் உயிர் எழுத்து என்றும்* . *உடம்பைபற்றி பேசுவதால் மெய் எழுத்து என்றும்*. *உயிர் உடம்பு இரண்டையும் சேர்த்து பேசுவதால் உயிர் மெய் எழுத்து என்றும்.* *இறைவனைப்பற்றி பேசுவதால் ஆயுத எழுத்து என்றும் சொல்லப் படுகின்றது.*


*வல்லினம் மெல்லினம் இடையினம்* என்றும். *தன்மை முன்னிலை படர்க்கை போன்ற விளக்கத்தை தமிழ்மொழியில் மட்டுமே காணமுடியும்*  


இறைவன். ஆன்மா. உயிர் உடம்பு.மாயை மாமாயை பெருமாயைப் பற்றியும்.பஞ்ச பூதங்கள் பற்றியும். கதைகள் கற்பனைகள் மூடநம்பிக்கை இல்லாமல் வெளிப்படையாக அறிவியல் விஞ்ஞான ரீதியில்  சொல்லப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும். (விரிக்கில் பெருகும்)


தமிழை கற்போம் தமிழை போற்றுவோம் தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்வோம். 


இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழ் உலகமொழியாக மாற்றம் அடையும் காலம் வந்தே தீரும் இது இறைவன் ( இயற்கை) ஆணையாகும் 


*வாழ்க தமிழ்* 

*வளர்க தமிழ் மொழி*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வெள்ளி, 4 ஜூன், 2021

ஆடாதீர் சற்றும் அசையாதீர் !

 ஆடாதீர் சற்றும் அசையாதீர்! 


வள்ளலார் பாடல் !


பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்


இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே


அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்


நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.!


மேலே கண்ட பாடலின் விளக்கம் புரிகிறதா ? அன்பர்களே...


பித்துலகர் மெச்ச பிதற்றி நின்ற பேதையனேன்.

என்கிறார் ..


இந்த மக்கள் உண்மை அறியாமல் .பொய்யை மெய்யாக நினைத்துக்கொண்டு.

அறியாமையால் பைத்தியக்காரத் தனமாக வாழ்த்து கொண்டு உள்ளார்கள்..அவர்கள் மெச்சும்படி பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளேன்.அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு என்பின் தொடர்வார்கள் என்ற பேராசையில் எவ்வளவோ உண்மைகளை வரிசைப்படுத்தி சொன்னேன் ..


ஒருவரும் கேட்கவில்லை. உண்மை உணரவில்லை..

மூடமாகவே இருக்கிறார்கள்...


சாதி.சமய.மதம் போன்ற பொய்யான கொள்கையைவிட்டு வெளியே வரமுடியவில்லை...


என்னுடைய அன்பு தயவு கருணை கொண்ட இச்சையெல்லாம் அறிந்துகொண்ட எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..என் விருப்பபடி அருளை வாரிவழங்கி என்னைத் தன்னுடைய செல்லபிள்ளையாக.நல்ல பிள்ளையாக  ஏற்றுக்கொண்டார்..


அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன்..


எனக்கு இப்போது இந்த உலகத்தில்  அச்சம்.பயம் துன்பம்.மரணம் எனபது எதுவுமே இல்லை..அருள் அமுதம் உண்டு மரணத்தை வென்றுவிட்டேன்..பேரானந்தம் பெற்று வாழ்கிறேன்


என்பேச்சைக் கேட்டு இனிமேலாவது தங்களை காப்பாற்றிக் கொள்வார்களா ? 


அருளைப் பெறும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தை அழித்துக் கொண்டே  உள்ளார்களே என நினைந்து மிகவும் வேதனைப்படுகிறேன் என்கிறார் வள்ளலார். ! 


இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த தேகம் போனால் மீண்டும் இந்த தேகம் கிடைக்கும் என்பது உறுதி அல்ல... இவர்களின் நிலைமையை நினைத்தால் பாவமாகவும்.வேதனையாகவும்.வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கின்றது...


நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேன் ! ..


இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுடன் இணைந்து கொண்டார்.என்

உடம்பில் கலந்து கொண்டார்..


என்னுடைய பேரானாந்ததிற்கு அளவே இல்லை ..அன்பு.அருள் ஆனந்தம் என்ற மகிழ்ச்சியில் பொங்கி வழிகின்றேன்  என்கிறார் வள்ளலார்...


கேட்பாரில்லை! 


வள்ளலார் காலத்தில் .வள்ளலார் உடன் இருந்தவர்களும்.அவர் பேச்சைக்கேட்டு அவர் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றவில்லை. அருள் பெற்று மரணத்தை வெல்லும் உண்மையை அறிந்து கொள்ளவில்லை..

இப்போது உள்ளவர்களும் உண்மையை அறிந்து தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்..


சன்மார்க்க என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு உள்ளவர்களும். ஒன்று கிடக்க ஒன்றை உளரிக்கொண்டு உள்ளார்கள்.

புதியதாக சன்மார்க்கத்திற்கு வரும் மக்களையும் .சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பதே தெரியாமல் தானும் குழம்பி வருபவர்களையும் குழப்பி விடுகின்றார்கள்..


எனவே இப்போது இந்த தருணம் புதியதாக வருபவர்கள் அறிவு தேடல் அதிகமாக உள்ளவர்களே வருகிறார்கள் ..

அவர்களுக்குச் சொல்ல விரும்பவது..


நீங்கள் யார் பேச்சையும் கேட்காதீர்கள்.


வள்ளலார் எழுதிய திருஅருட்பா முழுவதும் படியுங்கள் ..உரைநடைப்பகுதி முழுவதும் படியுங்கள்.. வள்ளலார் எந்த எந்த காலகட்டத்தில் சூழ்நிலைக்கு தக்கவாறு. என்ன என்னவாறு சொல்லி உள்ளார்..அவர் எவற்றை எல்லாம் பின்பற்றச் சொன்னார்.எவற்றை எல்லாம்  விடச்சொன்னார்.

என்பதை நீங்களே படித்து தேர்வு செய்து பின்பற்றுங்கள்..


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீதுமட்டும் இடைவிடாது நம்பிக்கை கொண்டு ..

மூடநம்பிக்கை யை அகற்றிவிட்டு தேடுங்கள்.

உண்மையான விடை தெளிவாக கிடைக்கும்.தேடலில் வெற்றி பெறுவீர்கள்..


அதன்பின் ஆண்டவர் உங்களுக்கு நேர்வழியைக் காட்டி அழைத்து செல்வார்...


நிச்சயம் அருள் உங்களைத் தேடிவரும்.

உங்களுக்கும். வள்ளலார் போல் பேரானந்த நித்திரை நிச்சயம் கிடைக்கும்.


சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக  .எந்த சன்மார்க்கிகளின் பேச்சை கேட்டு நான் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றவில்லை.... வள்ளலார் சொல்லியதை மட்டும் கேட்டேன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொண்டேன்..

தெளிவாக பின்பற்றி வாழ்க்கையை அமைத்து கொண்டேன்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளேன்...


எண்ணம் சொல் செயல்.ஒழுக்கம் நான்கும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்


வள்ளலார் பாடல் !


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை


நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்


சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்


கென்மார்க்க மும்ஒன்றா மே.!


மேலே கண்ட பாடல் நமக்காகவே வள்ளலார் பதிவு செய்துள்ளார்...


ஆடாதீர் சற்றும் அசையாதீர் பொய் உலக வாழ்க்கைகளை. வார்த்தைகளை நம்பாதீர் என்று மிக அழுத்தமாக சொல்லியுள்ளார்.


வள்ளலாரின் வார்த்தை.

மனித வார்த்தை அல்ல..எல்லாம் அருள் வார்த்தை .

உண்மைத்தவிர பொய்க்கு இடமே இல்லை.சிந்தியுங்கள் செயல்படுங்கள்...

எல்லாம் நன்மைக்கே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

9865939896.

செவ்வாய், 1 ஜூன், 2021

வேதம் ஆகமம் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் !

 *வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்* ! 


சாதி சமயங்கள் மதங்கள் தோன்றியதே வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் போன்ற *மூட நம்பிக்கைகளால் தான்*.


மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் 5000 ஆண்டுகளாக *ஆன்மீக அருளாளர்கள்  என்ற போலி முகமூடிகளை போட்டுக் கொண்டு பொய்யே உரைத்துக் கொண்டு வந்துள்ளார்கள்* ..


உலகம் முழுவதும் பொய்யான *வேதங்கள்*.

*ஆகமங்கள்*.

*புராணங்கள்.இதிகாசங்கள் சாத்திரங்களை்* போன்ற  தத்துவங்களை தோற்றுவித்து  மக்களை நம்பவைத்து ஏமாற்றிக்கொண்டு வந்துள்ளார்கள். 


தங்கள் சொல்வதைத்தான் அனைவரும் கேட்கவேண்டும் என்ற அதிகாரத்தை அவர்களே படைத்து கொண்டார்கள்.


*உண்மையை மறைத்து தத்துவங்களை படைத்ததே பெரிய மாபெரும் குற்றமாகும்*. 


*தத்துவம் என்பது ஜடம் போன்ற கருவிகள்* *உண்மை என்பது ஒளி ஒலி போன்ற இயக்கங்கள்* 


*சமய மதங்கள் தோற்றுவித்த கடவுள்கள் யாவும் ஜடப்பொருள்களே*.

*வள்ளலார் தோற்றுவித்தது காண்பித்தது ஒளி ஒலி போன்ற இயற்கை உண்மை  கடவுளாகும்.* அதற்கு *பரநாதம் பரஒளி பரஇன்பம் என்பதாகும்* இவை *அருள்* சம்பந்தமானதாகும்.இவற்றை அறிந்துகொள்ள *ஞான அறிவு* வேண்டும். 


இயற்கை உண்மையை எடுத்துச்சொல்லி மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு. *அந்த பழைய குப்பைகளான  வேதம் ஆகமம்.புராணம் இதிகாசம் சாத்திரங்கள் மற்றும்  அவற்றால் கொண்டுவந்த வழிப்பாட்டு முறைகள் மற்றும் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் யாவையும்  அழித்து ஒழித்து இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் என்பதற்காக வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்*. 


*வள்ளலார் தானாக வரவில்லை  இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி இறைவனால் வருவிக்க உற்றவர்*


*வள்ளலார் பாடல்* !  


*அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்*


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


*உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே*.!


மேலே கண்ட பாடல்வாயிலாக தான் வந்த நோக்கத்தையும் இறைவனால் அனுப்பி தான் அருள் பெற்றதையும் தெளிவாக விளக்கமாக சொல்லுகிறார். 


*மேலும் வள்ளலார் பாடல்!*


*வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்*

*வேதாக மத்தின் விளைவறியீர்*- *சூதாகச்*

*சொன்னவலால்* *உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை*

*என்ன பயனோ இவை*.! 


உண்மையைச் சொல்லாமல் பொய்யை புனைந்துரைத்த செய்கைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.அவற்றை நம்பாதீர்கள் என்று பொய்யின் உண்மை விளக்கம் சொல்லி சாடுகின்றார் வள்ளலார்.


மேலும் வள்ளலார் *பாடல்* ! 


*சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்*

*சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ*


விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்


பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்


*அதுஇது என்னாமல் ஆடேடி பந்து*

*அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!* 


மேலே கண்ட பாடலில்  வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் யாவும் *சந்தை படிப்பு* போன்றது.அது நிலையானது அல்ல  அதனால் அவற்றை இடம் தெரியாமல் அகற்ற வேண்டும். 


*மேலும் சூதாகவே சொல்லி உள்ளார்கள்* !


*வேதநெறி ஆகமத்தின் நெறி *பவுராணங்கள்*

*விளம்புநெறி* *இதிகாசம்* *விதித்தநெறி முழுதும்*  


*ஓதுகின்ற சூதனைத்தும்* *உளவனைத்தும் காட்டி*

*உள்ளதனை உள்ளபடி* *உணரஉரைத் தனையே*


ஏதமற உணர்ந்தனன் வீண் போது கழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம் இலேன் என்னொடு நீ புணர்ந்தே


தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


மேலே கண்ட பாடலில் பழைய சமய மதவாதிகள் உரைத்த வேதம் ஆகமம் புராணங்கள் போன்ற இதிகாசங்களும் அவற்றில் விதித்த நெறிகள் மற்றும் கொள்கைகள் முழுவதும் சூதாகவே சொல்லி உள்ளன என்பதையும். அதில் உள்ள உளவனைத்தும் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்து கொண்டேன் என்கிறார்.


*வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்*


இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். 


ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு,


*இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*


.*தெய்வத்துக்குக்* கை கால் முதலியன* இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்*. 


*இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும்*  *உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு* *உளறியிருக்கிறார்கள்* *. 


*ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.* இதுவரைக்கும் *அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை* என்று சொல்லுகின்றார். 


*உலகில் அமைதி குலைந்த்து*


இந்த உலகில் இன்று சாதி சமயம் மதம் போன்ற சண்டைகள் போராட்டங்கள் விரோதங்கள் வேறுபாடுங்கள் மற்றும் *அதிகார ஆட்சிமுறைகள் மற்றும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் உண்டாவதற்கு காரணமே பழைய ஆன்மீகவாதிகளால் தோற்றுவித்த சாதி சமயம் மதம் போன்ற *பொய்யான கடவுள்களும்* *பொய்யான கொள்கைகளுமே காரண காரியமாகும்.* என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆகையினாலே உலகில் அமைதி குறைந்தது 


*சந்தைப்படிப்பை அகற்றி சொந்த படிப்பை கொண்டுவந்தார்  வள்ளலார்*


*அறிவுசார்ந்த ஒழுக்கம்சார்ந்த இரக்கம்சார்ந்த கருணைசார்ந்த அன்புசார்ந்த அருள் சார்ந்த நிலையான* *சொந்த படிப்புத்தான் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக கற்பிக்கப்படும் *சொந்த படிப்பாகும்* 

*.அந்த கல்விக்கு சாகாக்கல்வி* *என்றும் பெயர் வைத்துள்ளார். 


*மேலும் வள்ளலார் பாடல்*


முயன்றுலகில் பயன்அடையா *மூடமதம் அனைத்தும்*

முடுகிஅழிந் திடவும் ஒரு மோசமும் 

இல்லாதே


*இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும்*  *நிலை பெறவும்*

*எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்*


துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்


*பயின்றறிய விரைந்துவம்மின்* *படியாத படிப்பைப்*

*படித்திடலாம்* *உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே*.! 


 இதுவரையில் பயனடையாத மூட மதங்கள்.சமயங்கள்.கொள்கைகள் அனைத்தையும் அகற்றியும் அழிந்திடும் காலம் வந்துவிட்டது.

ஆதலால்


இதுவரையில் படிக்காத உண்மையான புதிய படிப்பை இனிமேல் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே. ஆதலால் தூங்கி எழுந்தவர்போல் இறந்தவர்களும் எழுந்து பிறந்து  விரைந்து வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார் வள்ளல்பெருமான்.


உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமோ கீழ்சாதி மேல்சாதி என்ற பேதமோ பிரிவினையோ மனிதப் பிறப்பில் எப்போதும் எக்காலத்தும்  இல்லை என்பதை மக்கள் இனிமேல் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் வாழவேண்டும்.


*வள்ளலார் பாடல்!*


*சாதி சமயச் சழக்கெலாம் அற்றது*

*சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது*

*மேதினியிற் சாகாத வித்தையைக் கற்றது*

*மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே என்கிறார் !*


சாதி சமயம் மதம் அற்ற ஒரே மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற *தனிப்பெருங்கருணை* மார்க்கம் ஒன்று மட்டுமே என்பதை உணர்ந்து அறிந்து அதில் சேர்ந்து பயன் அடையுங்கள்.


மனிதநேயம் ஆன்மநேயம் மிகவும் முக்கியமானது.நாம் அனைவரும் சகோதர  உரிமை உடையவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !  


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896