சனி, 26 ஜூன், 2021

வடலூர் தேர்வு செய்யக் காரணம்!

 *வடலூர் தேர்வு செய்யக் காரணம்* !


பொருமையாக படிக்கவும்.


வள்ளலார் கருங்குழியில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குறைகளை விண்ணப்பம் செய்ய அன்பர்கள் கூட்டம் கூட்டமாக  வள்ளலாரைச் சந்திக்க வரத்தொடங்கினர்.


அக்காலத்தில் பசி பட்டினி வறுமையில் மக்கள் தவித்துள்ளார்கள்.

*ஆயிரக்கணக்கான மக்களுக்கு* *அன்னமளித்து பசியைப்போக்க ஒரு பொதுஇடம்  தருமச்சாலையாக அமைக்க  திருவுளங்கொண்டார்*.  


அவ்வாறு கட்டப்படும் தருமச்சாலை. நான்கு புரத்திலும் உள்ள மக்கள் சிரமம் இல்லாமல் வந்து போகும் *மத்திய இடமாக* அமைய வேண்டும் என்று அன்பர்களிடம் கட்டளையிட்டார். பல பல அன்பர்கள் பல பல இடங்கள் குறித்து  தேர்வுசெய்து வள்ளலாரிடம் கூறியுள்ளனர்.


வள்ளல்பெருமானுக்கு அவர்கள் கூறிய இடங்கள் திருப்தி தரவில்லை.

ஒருகால் *வள்ளலார் தாமே சென்று வடலூர்ப் பெருவெளியில் நின்று இங்கே அமைத்தால் சிறப்பாக இருக்கும் என  அவ்விடத்தை சுற்றி சுற்றி வந்தார்*. 


வள்ளலாரின் உண்மை நிலை அறிந்து *வடலூர் மக்கள் 80 காணி நிலத்தை வள்ளலாருக்கு இலவசமாக பட்டா செய்து கொடுத்துள்ளார்கள்*.


*அவ்விடத்தை குறிக்க காரணம்*


சிதம்பரம்.

கூடலையாற்றூர்.

விருத்தாசலம்.

திருவதிகை.

திருஇரும்பைமாகாளம்.

திருப்பாதிப்புலியூர்.தியாகவல்லி.முதலிய ஸ்தலங்களுக்கு மத்திய இடமாகவும்.


தென்பெண்ணையாறு.கெடிலநதி.வெள்ளாறு.

மணிமுத்தாநதி முதலிய நதிகளால் சூழப்பட்டதாயும் உள்ள வடலூர்ப் பெருவெளி வழியாகச் செல்வோர்க்குப் பசிதீர்த்து அனுப்புதற்கு வசதியுள்ள இடமாகவும் அமைய வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பமாகும்.


*வள்ளலாரின் விருப்பம் போல் 23-5-1867 பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை அமைத்து  சிறப்பாக தொடக்கவிழா நடைபெற்று இன்றுவரை மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது என்பது யாவரும் அறிந்த்தே*. 


*அன்று வள்ளலார் ஏற்றிவைத்த  அடுப்பு இன்றுவரை அணையாமல் மக்கள் பசிப்பிணியைப் போக்கிவருகிறது*..


மேலும் வடலூரில் இருந்து பார்த்தால் சிதம்பரம் நான்கு கோபுரங்களும் தெரியும் என்பார்கள்.


மேலும் *நகர வாசனைவிட்டு தனியே ஓர்இடத்தில் இருந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் நிலையிலேயே திளைத்து மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் வடலூர் தேர்வின் முக்கிய விருப்பமும் ஆகும்*. 


மேலும் *வடலூர் பெருவெளி உலகத்தின் மையப்பகுதி எனவும் சொல்லப்படுகிறது எனவேதான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் இடமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான்* 


உலகமக்கள் யாவரும் வந்து அருள் பெறும் தகுதிவாய்ந்த இடமே வடலூர் பெருவெளியாகும்.


*எனவேதான் இயற்கையாகவே வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு தேர்வு செய்துள்ளது* வள்ளலார் கொள்கையை *உலகம் முழுவதும் கொண்டுசெல்ல*  பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.


*வள்ளலார் பாடல்!*


*உலகமெலாம் தொழ உற்றது* எனக்கு உண்மை ஒண்மை தந்தே

இலக எலாம் படைத்தது ஆருயிர் காத்தருள் என்றது என்றும்

கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம்  எனாநின்றது *உத்தர ஞான சிதம்பரமே*.! 


*வடலூர் பெருவெளிக்கு உத்தரஞான சிதம்பரம் என்றும் உத்தரஞான சித்திபுரம் என்றும் வள்ளலாரால் பெயர் சூட்டப் பெற்ற புண்ணிய பூமியாகும்.* 


நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்பார் வள்ளலார் *பாடல்* ! 


*உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி*

*இலகஅருள் செய்தான் இசைந்தே* - 


*திலகன்என*

*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்*  

*நம்பெருமான்*

*தானே எனக்குத் தனித்து*.*! 


*எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்செயலே*


*தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் வடலூர் பெருவெளியாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு