வெள்ளி, 25 ஜூன், 2021

வள்ளலார் உடம்பு வேறு வேறாக கிடந்த்து !

 *வள்ளலார் உடம்பு வேறு வேறாக கிடந்தது* ! 


ஒருநாள் உச்சிப்பொழுதில் வள்ளலார் வடலூர் சத்திய தருமச்சாலையில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். சென்ற வள்ளலார் ரொம்ப நேரமாகியும் வரவில்லையே என்று வேலூர் சண்முகம் அவர்கள் வள்ளலாரைத் தேடி சென்றுள்ளார்.


கருங்குழி செல்லும் காட்டுபாதை வழியாகச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு மரத்தடியில் *வள்ளலாரது அவயங்கள் வேறு வேறு துண்டுகளாக சிதறி கிடந்துள்ளது*


அவற்றைப் பார்த்து சண்முகம் பயந்து நடுங்கி மயங்கி விழுந்துள்ளார்.

உடனே வள்ளலார் எதிரில் தோன்றி *இனிமேல் இப்படித் தேடி பின் தொடர்ந்து வராதீர்* என்று கடினமாக  கட்டளையிட்டு வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு சாலைக்கு சென்றுள்ளார்.


*இது என்ன அற்புதம் அதிசயம்  நம்பவே முடியவில்லை  விந்தையாக உள்ளது என   ஒன்றும் புரியாமல் சண்முகமும் சாலைக்கு சென்று விட்டார்*. 


சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.


சாலையில் உள்ள அன்பர்களிடம் தான் கண்ட  காட்சிகளை சொல்ல அனைவரும் மெய் சிலிர்த்து பயந்து நடுங்கி போனார்கள்.


*வள்ளலார் செய்துகொண்ட  பயிற்சி*


மனிதன் உடம்பு  மரணம் அடையக்கூடாது என்பது வள்ளலார் கொள்கையில் மிகவும் முக்கியமானதாகும்.அதற்கு *மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயராகும்* 


*வள்ளலார் தன் உடம்பை  தனித்தனியாக பிரிப்பதும் சேர்ப்பதும் மறைப்பதும்.பின் ஒன்றும் இல்லாமல் செய்வதும்  எவ்வாறு என்பதை பயிற்சி எடுத்துகொண்டே இருந்துள்ளார்*


மேலும் பஞ்ச பூதங்களின் அணுக்களால் பின்னப்பட்ட அசுத்த பூதகாரிய தேகத்தை.சுத்த பூதகாரிய அணு தேகமாக மாற்றுவதே சுத்த தேகம் என்பதாகும்.


சுத்த பூதகாரிய உடம்பை பிரணவதேகமாக மாற்றுவதே அடுத்த மாற்றமாகும். *உடம்பை வேறு வேறாக பிரித்து மீண்டும் சேர்ப்பது.பிறர் கண்களுக்கு தோன்றுவது தோன்றாமலும் இருப்பதே பிரணவ தேகமாகும்*. அவ்வாறு அன்று பயிற்சி எடுத்துள்ளார்.( வேறு கட்டுரையில் விபரமாக தெரிவிப்போம்)


அருளைக்  கொண்டுதான் இவ்வாறு செய்யமுடியும் என்பதை நிரூப்பித்துள்ளார்.


*வள்ளலார் பாடல் !*


அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே 

ஆசைப் பட்டது அறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டியே 


*பிண்டத்து உயிர்கள் பொருந்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே* ! ( மெய்ப்பொருள் வியப்பு)


*தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி அன்பே* !(அகவல்) 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.பூத அணுக்களை அருள் ஒளி அணுக்களாக மாற்றி ஞானதேகம் ( ஒளிதேகம்) பெறுவதே சுத்த பிரணவ ஞானதேகம்  என்பதாகும். 


இதுவரையில் இருந்ததுபோல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் என்பார் வள்ளலார்.

அதாவது வெட்டிப்பேச்சு பேசி காலத்தை வீனாக்காமல். சுத்த சன்மார்க்கத்தை

பின்பற்றுபவர்கள் அருளைப் பெறுவதே முக்கிய லட்சியமாக கொள்ள வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு