புதன், 16 ஜூன், 2021

வேசியர் தெருவில் நிர்வாண சந்நியாசி !

 *வேசியர் தெருவில் நிர்வாண சந்நியாசி* ! 


*சென்னையில் வள்ளலார் வாழ்ந்த  இடம் ஏழுகிணறு வீராசாமிபிள்ளை தெரு 38ஆம் எண்வீடு.* அந்த வீட்டிற்கு அருகில் வடக்கு சந்நிதி வீதி *அது தாசிவீதி(வேசி)* .தெற்கு *நெல்லிக்காய்ப் பண்டாரச்சந்து தெரு.*


வள்ளலார் தினமும் திருவொற்றியூர் கோயிலுக்கு  பண்டாரத்தெரு வழியாக செல்வது வழக்கம். *வடக்கு சந்நிதிதெரு வேசியர் தெரு  என்பதால் அந்த வழியாக செல்வதில்லை*.


*நிர்வாண சந்நியாசி*


திருவொற்றியூர் செல்லும் சந்நிதிதெருவில் குடித்தனம் யில்லாத ஒரு வீட்டின் திண்ணையில் *தோபா சுவாமிகள்* என்பவர் ஆடை அணியாமல் நிர்வாணத்துடன் அமர்ந்து இருப்பதால் நிர்வாண சந்நியாசி என்று மக்களால் சொல்லப்படுவார். 


அந்த வேசியர் சந்நிதி தெருவில் போவோர் வருவோர்களை மனிதர்களாக நினைக்காமல் அவர்களின் குணத்திற்கு தகுந்தவாறு. 


*மாடுபோகிறது*

*கழுதைபோகிறது*.

*நாய்போகிறது*.

*நரிபோகிறது*.

*குரங்குபோகிறது* என்று மிருகங்கள் பெயரைவைத்து சொல்லிக்கொண்டே இருப்பது அவருடைய வழக்கம். 


மக்கள் அவரை *பைத்தியம்* என நினைத்து அவர்பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.


அவர் பைத்தியம் அல்ல *சந்நியாசியின் எண்ணம்* மனிதர்கள் முன் ஆடை அவசியம் தேவை.அவர் கண்களுக்கு எவரும் மனிதர்களாக தோன்றவில்லை.மிருகங்களாகவே தோன்றினார்கள் ஆதலால் அந்த மனித மிருகங்களின் முன்னாடி ஆடை அணிந்துகொள்ள தேவை இல்லை என்பதால் நிர்வாணமாகவே  இருந்துள்ளார். 


*உத்தம மனிதர். வள்ளலார்*  


எப்போதும் நெல்லிக்காய் பண்டாரத்தெரு வழியாக செல்லும் வள்ளலார் அத்தெருவில் ஏதோ ஒரு இறப்பு நடந்துள்ளதால்.

வழக்கத்திற்கு மாறாக சந்நிதி தெரு வழியாக 

திருவொற்றியூர் செல்ல சென்றார்.


அன்று அந்த தெருவில் புதியதாக வந்த வள்ளலாரைக் கண்ட நிர்வாணத் துறவியார்   *இதோ ஒர் உத்தம மனிதர்*  வருகிறார் என்று கூறியவாறே கைகளால் மெய்யைப் (உருப்புகளை) பொத்திக்கொண்டார்.அங்குள்ள தூண் மறைவில் ஒதுங்கினார். 


*உத்தம மனிதர் வள்ளலார்* அவரைப்பார்த்து  அருகில் சென்று அழைத்து தான் மேல் போர்த்தியுள்ள துணியைக் கொடுத்து அணிந்துகொள்ள சொல்கிறார். ஒருசில நிமிடங்கள் அவருக்கு அறிவுரை வழங்கினார். நீங்கள் இருக்கும் இடம் இதுவல்ல. தனிமையில் சென்று இறை சிந்தனையுடன் உங்கள் காலத்தை நல் வழியில் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியவுடன் தோபாசுவாமிகள் வள்ளலாரிடம் தலை  வணங்கி ஆசிபெற்று அங்கிருந்து  சென்றுவிட்டார்.


தோபாசுவாமிகள் வேலூர் சென்று சைதாப்பேட்டையில் ஆசிரமம் அமைத்து நீண்ட நாள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளார்.

இன்னும் அவர் சமாதியில் மக்கள் வழிபட்டுக்கொண்டு வருகிறார்கள்.


இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்? *உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பை இறைவன் தந்துள்ளார்*

எனவே நாம் தாழ்ந்த நிலைக்கு செல்லாமல் உயர்ந்த ஒழுக்க நிலையில் வாழ்ந்து உயர்ந்த அருள் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழவே  வேண்டும்  


ஒழுக்கம் நிறைந்து உத்தம மனிதனாக வாழ்ந்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். *மக்கள் ஏற்றுக் கொண்டால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்*.


*வள்ளலார் இளம்வயதில் பாடியபாடல்* ! 


*ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற*

*உத்தமர்தம் உறவுவேண்டும்*

*உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்*

*உறவு கலவாமை வேண்டும்*


*பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்* *பொய்மை*

*பேசாது இருக்க்வேண்டும்*

*பெருநெறி பிடித்தொழுக வேண்டும்* 

*மதமானபேய்*

*பிடியா திருக்கவேண்டும்*


*மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்* *உனை*

*மறவாது* *இருக்கவேண்டும்*

*மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்* 


*நோயற்ற*

*வாழ்வில்நான்* *வாழவேண்டும்* 


என்று பாடியுள்ளார்  .


*அருட்பெருஞ்ஜோதி அகவல் இறுதியில்*


உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! 


*சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை* 


போற்றி நின் பேரருள் போற்று நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி! 


என்னும் வரிகளில் அருட்பெருஞ்ஜோதி அகவலை நிறைவு செய்கிறார். 


மனிதன் சுயநலம் இல்லாமல் பொதுநலத்துடன் வாழ்ந்து வள்ளலார் போல் *உத்தம மனிதனாக* வாழ்வாங்கு  வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு