திங்கள், 7 ஜூன், 2021

தமிழ்மொழி மெய்மொழி !

 *தமிழ்மொழி மெய்மொழி*!


*தமிழ் மொழிக்கு மெய்மொழி என்று பெயர் வைக்கிறார் வள்ளலார்* 


தமிழ்மொழி மட்டும் மெய்மொழி என்றால் மற்ற மொழிகளின் தன்மை என்ன என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.


*எங்கனம் என்றால் ?*


*தமிழ்மொழியில் மட்டுமே இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  வெளிப்படையாக பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.அதனால் தமிழ்மொழிக்கு திருவருண் மெய்மொழி என்றும் பெயராகும்* 


கல்வி பயிலாத வள்ளலார் ! 


*எப்பள்ளியிலும் படிக்காமல் எந்த ஆசிரியரிடத்தும் கற்காமல்.கற்க வேண்டுவனவற்றை இயற்கை உண்மைக் கடவுடான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்திலே கற்றவர் வள்ளலார்*. 


வள்ளலார் பாடல் !   


*கற்றேன் சிற் றம்பலக் கல்வியைக்* *கற்றுக் கருணைநெறி*

*உற்றேன்* 


எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் 


உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.! 


என்றும் 


ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி! 


என்னும் பல பாடல்கள் வாயிலாக தெளிவுபடுத்துகின்றார்.


சுமார் 6000 ஆறாயிரம் தமிழ் பாடல்கள் கொண்ட திருஅருட்பா என்னும் அருள்  நூலை எழுதியுள்ளார். 


மேலும் உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்ற தொடங்கிய அக்காலத்தில்

*மனுநீதிச்சோழன்* வரலாற்றை *மனுமுறைகண்டவாசகம்* என்றும்.அற்றார் அழிபசிதீர்த்தல். உயிர் இரக்கத்தையும்.கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வலியுறுத்தி  *ஜீவகாருண்ய ஒழுக்கம்*

என்னும் இரண்டு உரைநடை நூல்களை *பாமரர்களுக்கும் புரியும் வகையில் விரிவாகவும் தெளிவாகவும் எளிய தமிழில்  எழுதியுள்ளார்.*


மேலும் *மெய்மொழி பொருள் விளக்கத்தையும் எழுதியுள்ளார்* 


மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய.

இந்திரிய.கரண.ஜீவ.

ஆன்மாவின் உண்மை ஒழுக்க நெறிகளையும். ஆன்மீக கருத்துக்களையும் இயற்கை உண்மை கடவுள் நிலைப்பற்றியும்.அருள் பெறும் வழிப்பற்றியும்.


சாகாக்கல்வி கற்று மரணம் அடையாமல்  *பேரின்ப சித்திப் பெருவாழ்வு* வாழும் வாழ்க்கை முறைகளையும்  மேலும் பலவகையான சீர்திருத்த உண்மைக்  கொள்கைகளையும். மனித உலக வாழ்க்கை முறைகளையும் அருள் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ள சுமார் 600 பக்கங்கள் கொண்ட உரைநடைப் பகுதி நூலையும் எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார்.


*தமிழுக்கு முதல் இடம் தந்தவர் வள்ளலார்* !


*வள்ளலார் வந்தபின்னே தான் மூடநம்பிக்கை அற்ற உண்மையான பகுத்தறிவு  ஆன்மீகம் உலகில் தோன்றின* அதனால் பல சமய மதங்களின் எதிர்ப்புக்களும் உண்டாயின. அருட்பா மறுட்பா வாதங்களும் உண்டாயிற்று. வள்ளலார் நீதி மன்றங்களுக்கும் சென்று வென்று வெற்றி வாகையும் சூடியுள்ளார்.


*உலகின் உயர்ந்த மொழி !*


*தமிழ்நாட்டில் பிறக்க வைத்து. தமிழ் மொழியில் பயிற்றுவித்து. தமிழ் மொழியில் பாடவைத்து. தமிழ் மொழியில் எழுதவைத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறார் வள்ளலார்*


வள்ளலார் சொல்வதை பாருங்கள் ! 


*இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் போது போக்கையும் உண்டுபண்ணுகின்ற *ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வெட்டாது*, *பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.* என்றும் பெருமையுடன் வெளிப்படுத்துகின்றார். அதே வேலையில் இறைவன் *சிற்சபையில் நடிக்கின்றார் செந்தமிழில் வளர்கின்றார்* என்கிறார் 


மேலும் ஏதும் ஒன்ற்றியாப் பேதையாம் பருவத்தே எனை ஆட்கொண்டு எனை உவந்தே *ஓதும் *இன்மொழியால்* *பாடவே பணித்த ஒருவனே*! இறைவன் தமிழ் மொழியில்  பாடவைத்து உலகிற்கு இறை உண்மையை வெளிப்படுத்துகிறார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கின்றார் வள்ளலார். 


*தமிழ் மொழிக்கு  மெய்மொழி* என்ற  உண்மையை தகுந்த ஆதாரத்தோடு வெளிப்படையாக  வெளிப்படுத்துகின்றார்.


எனவே மனிதர்கள்  எந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து இருந்தாலும் தமிழ் கற்றவர்கள் புண்ணியவான்களே ! தமிழ் கற்றவர்களே இறைவனை தொடர்பு கொள்ளவும். அருளைப் பெறவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.என்பதையும் வெளிப்படையாக சொல்லி உள்ளார். 


உலகில் எக்காலத்தும்  அழியாத ஒரே மொழி *திருவருண் மெய்மொழி* என்னும் தமிழ்மொழியே என்பதை மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும்.


தமிழ்மொழி மட்டுமே இறைவனால் படைக்கப்பட்ட மெய் மொழியாகும். *ஆதியும் அந்தமும் இல்லாததோர் அம்பலத்தே தோன்றிய மொழி தமிழ் மொழியாகும்.*

ஆதலால் தெய்வமொழி என்பதாகும்.


மற்ற மொழிகள்  யாவும் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் போன்றவைகளால் கற்பிக்கும் யாவும் மாயாசக்தியின் துணைகொண்டு படைக்கப்பட்ட மனிதர் மொழியாகும். 


*தமிழ்மொழி ஒன்றே* *ஆட்சி மொழிக்கு* *தகுதியான* 

*செம்மொழி யாகும்* 


உலகின் மூத்தமொழி.நித்தியமொழி தமிழ் மொழியாகும்.

*உயிரைப்பற்றி பேசுவதால் உயிர் எழுத்து என்றும்* . *உடம்பைபற்றி பேசுவதால் மெய் எழுத்து என்றும்*. *உயிர் உடம்பு இரண்டையும் சேர்த்து பேசுவதால் உயிர் மெய் எழுத்து என்றும்.* *இறைவனைப்பற்றி பேசுவதால் ஆயுத எழுத்து என்றும் சொல்லப் படுகின்றது.*


*வல்லினம் மெல்லினம் இடையினம்* என்றும். *தன்மை முன்னிலை படர்க்கை போன்ற விளக்கத்தை தமிழ்மொழியில் மட்டுமே காணமுடியும்*  


இறைவன். ஆன்மா. உயிர் உடம்பு.மாயை மாமாயை பெருமாயைப் பற்றியும்.பஞ்ச பூதங்கள் பற்றியும். கதைகள் கற்பனைகள் மூடநம்பிக்கை இல்லாமல் வெளிப்படையாக அறிவியல் விஞ்ஞான ரீதியில்  சொல்லப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும். (விரிக்கில் பெருகும்)


தமிழை கற்போம் தமிழை போற்றுவோம் தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்வோம். 


இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழ் உலகமொழியாக மாற்றம் அடையும் காலம் வந்தே தீரும் இது இறைவன் ( இயற்கை) ஆணையாகும் 


*வாழ்க தமிழ்* 

*வளர்க தமிழ் மொழி*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு