புதன், 23 ஜூன், 2021

கதைச்சொல்லி தெளிய வைத்த வள்ளலார்!

 *கதைச்சொல்லி தெளிய வைத்த வள்ளலார்!*


ஒருநாள் கூடலூர் அப்பாசாமிச்செட்டியார் வீட்டுத் திண்ணையில் வித்வான்கள் பலர் கூடியிருந்தனர்.

அதில் ஒரு வித்வான் 

*அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது* என்றார்.


வேறுஒரு வித்வான் கைவல்ய நூலில் வந்துள்ள *இந்த சீவனால்வரும்* என்னும் பாடலை எடுத்து ஓதிக்காட்டி வாதத்தை வைத்தார். ஒருமணி நேரம் காரசார விவாதம் நிகழ்ந்தும் தீர்மானம்  ஏற்படவில்லை.


இவர்கள் வாதங்களை கேட்டுக்கொண்டே வள்ளலார் வீட்டின் உள்இருந்தார்.

*வள்ளல் பெருமானைக் கேட்டு தெளிவுபெறலாம் என்று வித்வான்கள் உள்ளே சென்றார்கள்.* வித்வான்களை நோக்கி வள்ளலார். 

*ஏன்காணும் வாதம் வந்துவிட்டதோ*? என்றுகூறி உட்காரவைத்து.

*சாத்திரப் பிரமாணம்* சொன்னால் உங்களுக்குச் சந்தேகம் நிவர்த்தியாகாது.


எனவே ஒரு கதைச்சொல்லுகிறேன் கேளுங்கள் என்றார்.


தெருவில் *நிர்வாண சந்நியாசி* ஒருவர்போய் கொண்டு இருந்தார்.

அவருக்கு ஒருவர் ஒருசீப்பு வாழைப்பழம்  கொடுத்தான்.


வேறுஒருவன் பெண்கள் இருக்கும் தெருவில் நிர்வாணமாய்ப்போகிறான் என்று கோபித்துக் கல்லால் அடித்தான்.


வேறு ஒருவன் அவர்கள் இருவரையும். 

நிர்வாண சந்நியாசியும் அழைத்துக் கொண்டு நீதிபதியிடம் சென்றான். நீதிபதியிடம் அந்த இருவரையும் காட்டி *இந்த புண்ணியவான் பழம் கொடுத்தான்* *இந்த பாவி கல்லால் அடித்தான்* என்றான்.

இதற்கு நீங்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றான்.


*நீதிபதிமுன் விசாரணை நடந்தது*!


நீதிபதி நிர்வாணசாமியாரை நோக்கி உம்மை யார் அடித்தது என்று கேட்டார். *வாழைப்பழம் கொடுத்தவரை காட்டி இவன்தான் அடித்தான் என்று கூறினார்*.


நீதிபதி யார் வாழைப்பழம் கொடுத்தது என்று கேட்க  *கல்லால் அடித்தவனைக்காட்டி இவன்தான் வாழைப்பழம் கொடுத்தான் எனக்  கூறினார்*.


மீண்டும் நீதிபதி கல்லால் அடித்தவன் யார் என்று நிர்வாணச் சாமியாரைக் கேட்க  *இங்கு இட்டுக்கொண்டு வந்தவனைக் காட்டி இவன்தான் கல்லால் அடித்தான் என்றார்*.


வாக்குமூலம் எழுதத் தெரியாது மயங்கிய நீதிபதி *இவர் மேற்படியில் உள்ளவர்* என ஒருவாறு உணர்ந்து அடித்தவனுக்கு  புத்தி சொல்லி.  *ஏதும் தெரியாமல் யாரையும் அடிக்கவும் கூடாது துன்புறுத்தவும் கூடாது. யார் யார் என்ன ரூபத்தில் இருப்பார் என எவராலும் கணிக்கமுடியாது* என அறிவுரை வழங்கினார்.


*ஆகையால் இத்தகையோர் யாரோ ( முற்றும் துறந்தவர்) அவர்களுக்கு அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது* என்பது பொருந்தும்.


அதுவன்றி பழம் கொடுத்தவன் இவன் .கல்லால் அடித்தவன் இவன் என்று பேதங் கொண்டவர் யாரோ அவர்களுக்கு *இந்த சீவனால்வரும்* என்ற பாடல் பொருந்தும். 


என்பதை கதையின் மூலமாக வித்வான்வான்கள் கொண்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் நமது வள்ளல்பெருமான்.

பின்பு வித்வான்கள் *உண்மைதெளிந்து சமாதானம் ஆனார்கள்.* 


*இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்.?*

*இறைவனால் படைக்கப்பட்ட உலகில் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஆன்ம லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்* வேறுவழியில் பயன்படுத்தினால் அவரவர்கள் செய்த நன்மை தீமைகளுக்கு தகுந்தவாறு அவரவர்கள் வாழ்க்கை இன்பம் துன்பம் கலந்தவையாக அமையும். 

*தீதும் நன்றும் பிறர் தர வராது* என்பது பொருந்தும்.


*வள்ளலார் பாடல் !*


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தை மிக விழைந்த தாலோ.! 


எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி பேதம் இல்லாமல் உள்ளே ஒத்து உரிமையோடு பாவிக்க பழகிக் கொள்ள வேண்டும். அந்த நிலையில் வாழ்பவர்கள் எவரோ அவரையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி ஏற்றுக்கொள்வார். என்பதை மேலே கண்ட  பாடல் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சிமையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு