வியாழன், 24 ஜூன், 2021

அதிசயம் மற்றும் அற்புதம்!

 *அதிசயம் மற்றும் அற்புதம்* ! 


கடலூர் *தேவநாயகம்* என்பவர் வள்ளலார் மீது அளவுகடந்த பற்றும் உண்மையான ஈடுபாடும். மதிப்பும். மரியாதையும். நம்பிக்கையும் கொண்டவர்.

*வடலூர் சென்று  வள்ளலார் சொற்பொழிவு கேட்டுவரும் பழக்கம் உள்ளவர்*. 


*மகன் வியாதியால் உயிர்போகும் நிலை*


தேவநாயகம் அவர்களின் புதல்வர் *ஐயாசாமி* என்பவர் வியாதியால் கஷ்டப்பட்டு *உயிர்நீங்கும்* நிலைக்கு வந்துவிட்டார். தேவநாயகம் அன்று இரவில் மிகவும் வருந்தி சொல்லமுடியாத துயரத்தில் மயங்கி மகன் அருகில் அமர்ந்து வேதனையுடன் அழுதுகொண்டே இருந்தார்.


*வள்ளலார் உருவில் ஆண்டவர் வருகை!*


அன்று வடலூரில் வள்ளலார் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்துள்ளார்.


*அன்று இரவு திடீர்என தேவநாயகம் வீட்டு கதவு தட்டப்படுகிறது*

 சத்தம் கேட்டு தேவநாயகம்

கதவைத்

திறக்கிறார் *வள்ளலார் வெளியில் நிற்கிறார்*.

ஆச்சரியத்துடன் அதிர்ச்சி அடைந்து

தன்னை மறந்து வாருங்கள் வாருங்கள் என்று உள்ளே அழைக்கிறார்.


*வள்ளலார் உள்ளே சென்று ஐயாசாமியைத் தொட்டு எழுப்பி உட்கார வைத்து உன்மகன் உடல் நலமும் உயிர்நலமும் நலமாக உள்ளது வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு உடனே சென்று விடுகிறார்*.


*தேவநாயகம் இது கனவா நனவா என நினைந்து ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் திகைத்துப்போய் சிலைபோல் அமரந்து கொண்டார்* *தன்மகன் ஐயாசாமி எழுந்து உட்கார்ந்து  அப்பா எனக்கு ஒன்றும் இல்லை நலமாக உள்ளேன் வருத்தப்படாதீர்கள் என்று அப்பாவைத் தேற்றினார்* 


உயிர்போகும் நிலையில் இருந்த தன்மகன் எழுந்து வந்து ஆறுதல் சொல்வதைக் கண்டு மகனை  அனைத்து ஆனந்த கண்ணீர்கொண்டு கதறி அழுதுள்ளார். 


*வள்ளலார் பெருங்கருணையை என்னவென்று சொல்வது எவ்வாறு போற்றி  புகழ்வது* 


*போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி*!


*வடலூர் செல்லுதல்*


மறுநாள் காலையில் தேவநாயகம் தன்மகன் ஐயாசாமியை வண்டியில் அழைத்துக் கொண்டு வடலூர் வந்து சேர்ந்தனர்.


தருமச்சாலையில் பிரசங்கம் செய்து கொண்டு இருந்த வள்ளலார் வெளியில் வந்து தேவநாயகத்தை தனியாக அழைத்து. *இரவு நடந்தது ஆண்டவன் செய்த திருவிளையாட்டே ஆதலால் அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி உள்ளே சென்று விட்டார்*


இரவு முழுவதும் வள்ளலார் அன்று தருமச்சாலையிலே பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார் என்ற செய்தியை அங்குள்ளவர்கள் மூலம் தேவநாயகம் தெரிந்து கொண்டார். 


ஆண்டவரின் பெருங்கருணையை வியந்து போற்றி மெய்மறந்து துதித்தனர். அதுசமயம் அங்கே வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியும் இருந்துள்ளார்.


வள்ளல் பெருமானின் அருள் அற்புதத்தை யும் அதிசயத்தையும் கண்ட அன்பர்கள்  பலரும் வடலூரிலே தங்கி இருந்துள்ளார்கள்.


*இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?* 


*இறைவன் மீது உண்மையான அன்பும் உயிர்கள் மீது உண்மையான இரக்க குணமும் உள்ளவர்களுக்கு எவ்விதப்பட்ட ஆபத்துக்களும் நெருங்காது*. முன் செய்த தீவினைப்பயனால் துன்பங்கள் வந்தாலும் ஏதாவது ஒருவகையில் ஏதாவது ஒரு உருவத்தில்  ஆண்டவர் வந்து நிவர்த்தி செய்விப்பார் என்கின்ற உண்மையான நம்பிக்கையுடன் வாழவேண்டும்.. 


தேவநாயகம் வள்ளலார் மீது வைத்திருந்த உண்மையான அன்பும் நம்பிக்கையும் அவர் மகனை  வள்ளலார் உருவத்தில் ஆண்டவர் வந்து காப்பாற்றி உள்ளார்.


*வள்ளலார் வேறு யாருமில்லை*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார்*.

*வள்ளலாரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* 


என்ற உண்மையை அறிவால் அறிந்து உணர்ந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்வோம்.


*வள்ளலார் பாடல்* !


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு


நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று


வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் 

உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.! 

மேலே கண்ட பாடலில் சொல்லியவாறு ஆண்டவரைத் தொடர்புகொண்டு என்றும் அழியாத குறையாத நன் நிதியான அருள் அமுதை பூரணமாகப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு