புதன், 30 ஜூன், 2021

சொல்லுவோம் கேட்கதிறம் உண்டோ!

 *சொல்லுவோம் கேட்கத்திறம் உண்டோ!*

வள்ளலார் மேட்டுகுப்பத்தில் அமரந்திருந்தபோது ஒருநாள் *வையாகரணி தார்க்கீகியாகிய* இரண்டு *வித்வான்கள் வள்ளலாரைச் சந்தித்து *திருவாசகத்தில் முதல் அகவலுக்கு உரைசொல்ல வேண்டும் என கேட்க* 

அதற்கு வள்ளலார் *சொல்லுவோம் கேட்கத்திறம் உண்டோ* என்று கூறினார்.யாவரும் சரி என்றார்கள்.மாலை நேரம்

வெளியில் வந்து அனைவரையும் அமரவைத்து சொற்பொழிவைத் தொடங்கினார்.

*பாடல்!*

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 

ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க !  

என்ற வரிகளுக்கு ஒவ்வொரு வரிக்கும் தகுந்த விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

முதல் ஒரு வரிக்கு விளக்கம் சொல்ல *இரண்டுமணி நேரம் ஆயிற்று.  முதலில் ஒருசாரார் தூங்கிவிட்டார்கள்.* 

இரண்டாவது வரிக்கு விளக்கம் சொல்ல *மூன்றுமணி நேரம் ஆகியது. விளக்கம் கேட்க வந்தவர்களும் மற்றமுள்ளவர்களும் தூங்கிவிட்டார்கள்*.  

மூன்றாவது வரிக்கு விளக்கம் சொல்லும்போது *நான்குமணி நேரமாகியது.அதற்குமேல் உணரமுடியாமல் தொழுவூர் வேலாயுதனாரும் தூங்கிவிட்டார்கள்*.

*மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்*!

அனைவரும் தூங்கிவிட்ட பின்னும் வள்ளலார் தனிமையில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

வேலாயுதனார் விழித்து எழுந்து பார்க்கிறார் அனைவரும் தூங்கிவிட்டார்கள்.தூங்கியது தெரியாமல் வள்ளலார் பேசிக்கொண்டே உள்ளார் என நினைத்து.  *அய்யா அனைவரும் தூங்கிவிட்டார்கள் என்றார்* வேலாயுதனார்.

*பிச்* என்று கோபமாக சொன்னார்  இதுசமயம் *மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் கேட்டுக்கொண்டு உள்ளார்கள்* அவர்களுக்காக பேசிக்கொண்டுள்ளேன் *அவர்கள் விழித்துக் கேட்டுக்கொண்டு உள்ளார்கள் என்று விளக்கினார்.*

*அதற்குமேல் அருள் சார்ந்த மேல்நிலை அனுபவங்களை வேலாயுதனாரும் உணர்ந்தகொள்ள முடியாதவர்* என்பதை  தெளிவுப்படுத்தி புரிய வைத்தார் வள்ளலார்.

ஆண்டவர் அருள் பெற்றவர்கள் எழுதிய அருள் வாசகத்திற்கு அருள்பெறும் தகுதி உடையவரகள் மட்டுமே அதன் விளக்கத்தை எளிதில் புரிந்து அறிந்து தெரிந்து மேல்நிலைக்கு செல்லமுடியும். என்பதை வள்ளலார்.

*சொல்லுவோம் கேட்கத் திறமுண்டோ* என்று சொல்லி புரியவைத்தார்.

வந்த வித்வான்கள் தூங்கி எழுந்து  மவுனமாகி வள்ளலாரை வணங்கி *நீங்கள் முழுமையான அருள்பெற்ற மகாஞானி* நாங்கள் சாதாரண வித்வான்கள். என்பதை உணர்ந்து போற்றி புகழ்ந்து வணங்கி விடைபெற்று சென்றார்கள். 

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

அருளாளர்கள் அருட்பாடல்களின் விளக்கம் உலக அறிவுக்கும் பொருந்தும் அருள் அறிவுக்கும் பொருந்தும்.

ஆனாலும் *அருள் அறிவால் அறிவதே உண்மை விளக்கமாகும்*.

*வள்ளலார்பாடல்*

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்கனுபவ மாகின்ற தென்னடி தாயே

செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்*திருவருள் உருவம்* என்றறியாயோ மகளே.!

அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்

கனுபவ மாகின்ற தென்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்*திருநட இன்பம்* என்றறியாயோ மகளே.!

என்னும் பாடல் வாயிலாக தெளிவுப்படுத்துகின்றார்.

*ஆன்ம அறிவைக் கொண்டு அருள்அறிவை தொடர்பு கொண்டால் அனுபவம் உண்டாகும்* பின்பு 

*அருள் அறிவைக் கொண்டு கடவுள் அறிவைத் தொடர்பு கொண்டால் கடவுளின் திருநடனமும் அதன் இன்பமும் அனுபவிக்கமுடியும்.*

*வள்ளலார் பாடல்*!

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே

*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* *வெறும்வார்த்தை என்வாய்*

*விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*

செல்லுகின்ற படியேநீ காண்பாய் இத்தினத்தே

தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்

ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடி நான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு