செவ்வாய், 1 ஜூன், 2021

வேதம் ஆகமம் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் !

 *வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்* ! 


சாதி சமயங்கள் மதங்கள் தோன்றியதே வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் போன்ற *மூட நம்பிக்கைகளால் தான்*.


மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் 5000 ஆண்டுகளாக *ஆன்மீக அருளாளர்கள்  என்ற போலி முகமூடிகளை போட்டுக் கொண்டு பொய்யே உரைத்துக் கொண்டு வந்துள்ளார்கள்* ..


உலகம் முழுவதும் பொய்யான *வேதங்கள்*.

*ஆகமங்கள்*.

*புராணங்கள்.இதிகாசங்கள் சாத்திரங்களை்* போன்ற  தத்துவங்களை தோற்றுவித்து  மக்களை நம்பவைத்து ஏமாற்றிக்கொண்டு வந்துள்ளார்கள். 


தங்கள் சொல்வதைத்தான் அனைவரும் கேட்கவேண்டும் என்ற அதிகாரத்தை அவர்களே படைத்து கொண்டார்கள்.


*உண்மையை மறைத்து தத்துவங்களை படைத்ததே பெரிய மாபெரும் குற்றமாகும்*. 


*தத்துவம் என்பது ஜடம் போன்ற கருவிகள்* *உண்மை என்பது ஒளி ஒலி போன்ற இயக்கங்கள்* 


*சமய மதங்கள் தோற்றுவித்த கடவுள்கள் யாவும் ஜடப்பொருள்களே*.

*வள்ளலார் தோற்றுவித்தது காண்பித்தது ஒளி ஒலி போன்ற இயற்கை உண்மை  கடவுளாகும்.* அதற்கு *பரநாதம் பரஒளி பரஇன்பம் என்பதாகும்* இவை *அருள்* சம்பந்தமானதாகும்.இவற்றை அறிந்துகொள்ள *ஞான அறிவு* வேண்டும். 


இயற்கை உண்மையை எடுத்துச்சொல்லி மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு. *அந்த பழைய குப்பைகளான  வேதம் ஆகமம்.புராணம் இதிகாசம் சாத்திரங்கள் மற்றும்  அவற்றால் கொண்டுவந்த வழிப்பாட்டு முறைகள் மற்றும் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் யாவையும்  அழித்து ஒழித்து இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் என்பதற்காக வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்*. 


*வள்ளலார் தானாக வரவில்லை  இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி இறைவனால் வருவிக்க உற்றவர்*


*வள்ளலார் பாடல்* !  


*அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்*


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


*உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே*.!


மேலே கண்ட பாடல்வாயிலாக தான் வந்த நோக்கத்தையும் இறைவனால் அனுப்பி தான் அருள் பெற்றதையும் தெளிவாக விளக்கமாக சொல்லுகிறார். 


*மேலும் வள்ளலார் பாடல்!*


*வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்*

*வேதாக மத்தின் விளைவறியீர்*- *சூதாகச்*

*சொன்னவலால்* *உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை*

*என்ன பயனோ இவை*.! 


உண்மையைச் சொல்லாமல் பொய்யை புனைந்துரைத்த செய்கைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.அவற்றை நம்பாதீர்கள் என்று பொய்யின் உண்மை விளக்கம் சொல்லி சாடுகின்றார் வள்ளலார்.


மேலும் வள்ளலார் *பாடல்* ! 


*சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்*

*சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ*


விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்


பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்


*அதுஇது என்னாமல் ஆடேடி பந்து*

*அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!* 


மேலே கண்ட பாடலில்  வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் யாவும் *சந்தை படிப்பு* போன்றது.அது நிலையானது அல்ல  அதனால் அவற்றை இடம் தெரியாமல் அகற்ற வேண்டும். 


*மேலும் சூதாகவே சொல்லி உள்ளார்கள்* !


*வேதநெறி ஆகமத்தின் நெறி *பவுராணங்கள்*

*விளம்புநெறி* *இதிகாசம்* *விதித்தநெறி முழுதும்*  


*ஓதுகின்ற சூதனைத்தும்* *உளவனைத்தும் காட்டி*

*உள்ளதனை உள்ளபடி* *உணரஉரைத் தனையே*


ஏதமற உணர்ந்தனன் வீண் போது கழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம் இலேன் என்னொடு நீ புணர்ந்தே


தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


மேலே கண்ட பாடலில் பழைய சமய மதவாதிகள் உரைத்த வேதம் ஆகமம் புராணங்கள் போன்ற இதிகாசங்களும் அவற்றில் விதித்த நெறிகள் மற்றும் கொள்கைகள் முழுவதும் சூதாகவே சொல்லி உள்ளன என்பதையும். அதில் உள்ள உளவனைத்தும் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்து கொண்டேன் என்கிறார்.


*வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்*


இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். 


ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு,


*இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*


.*தெய்வத்துக்குக்* கை கால் முதலியன* இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்*. 


*இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும்*  *உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு* *உளறியிருக்கிறார்கள்* *. 


*ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.* இதுவரைக்கும் *அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை* என்று சொல்லுகின்றார். 


*உலகில் அமைதி குலைந்த்து*


இந்த உலகில் இன்று சாதி சமயம் மதம் போன்ற சண்டைகள் போராட்டங்கள் விரோதங்கள் வேறுபாடுங்கள் மற்றும் *அதிகார ஆட்சிமுறைகள் மற்றும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் உண்டாவதற்கு காரணமே பழைய ஆன்மீகவாதிகளால் தோற்றுவித்த சாதி சமயம் மதம் போன்ற *பொய்யான கடவுள்களும்* *பொய்யான கொள்கைகளுமே காரண காரியமாகும்.* என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆகையினாலே உலகில் அமைதி குறைந்தது 


*சந்தைப்படிப்பை அகற்றி சொந்த படிப்பை கொண்டுவந்தார்  வள்ளலார்*


*அறிவுசார்ந்த ஒழுக்கம்சார்ந்த இரக்கம்சார்ந்த கருணைசார்ந்த அன்புசார்ந்த அருள் சார்ந்த நிலையான* *சொந்த படிப்புத்தான் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக கற்பிக்கப்படும் *சொந்த படிப்பாகும்* 

*.அந்த கல்விக்கு சாகாக்கல்வி* *என்றும் பெயர் வைத்துள்ளார். 


*மேலும் வள்ளலார் பாடல்*


முயன்றுலகில் பயன்அடையா *மூடமதம் அனைத்தும்*

முடுகிஅழிந் திடவும் ஒரு மோசமும் 

இல்லாதே


*இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும்*  *நிலை பெறவும்*

*எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்*


துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர்


*பயின்றறிய விரைந்துவம்மின்* *படியாத படிப்பைப்*

*படித்திடலாம்* *உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே*.! 


 இதுவரையில் பயனடையாத மூட மதங்கள்.சமயங்கள்.கொள்கைகள் அனைத்தையும் அகற்றியும் அழிந்திடும் காலம் வந்துவிட்டது.

ஆதலால்


இதுவரையில் படிக்காத உண்மையான புதிய படிப்பை இனிமேல் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே. ஆதலால் தூங்கி எழுந்தவர்போல் இறந்தவர்களும் எழுந்து பிறந்து  விரைந்து வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார் வள்ளல்பெருமான்.


உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமோ கீழ்சாதி மேல்சாதி என்ற பேதமோ பிரிவினையோ மனிதப் பிறப்பில் எப்போதும் எக்காலத்தும்  இல்லை என்பதை மக்கள் இனிமேல் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் வாழவேண்டும்.


*வள்ளலார் பாடல்!*


*சாதி சமயச் சழக்கெலாம் அற்றது*

*சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது*

*மேதினியிற் சாகாத வித்தையைக் கற்றது*

*மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே என்கிறார் !*


சாதி சமயம் மதம் அற்ற ஒரே மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற *தனிப்பெருங்கருணை* மார்க்கம் ஒன்று மட்டுமே என்பதை உணர்ந்து அறிந்து அதில் சேர்ந்து பயன் அடையுங்கள்.


மனிதநேயம் ஆன்மநேயம் மிகவும் முக்கியமானது.நாம் அனைவரும் சகோதர  உரிமை உடையவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !  


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு