வெள்ளி, 18 ஜூன், 2021

நேரலை ஒலி ஒளி பரப்பு செய்தவர் வள்ளலார்.!

 *நேரலை ஒலி ஒளி பரப்பு செய்தவர் வள்ளலார்*


*எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து* !


வள்ளலார் வடலூரில் இருந்து  ஆனிமாதம் பவுர்ணமி அன்று ஆனிதிருமஞ்சனவிழாவிற்கு  வருடாவருடம் சிதம்பரம் கோயிலுக்கு அன்பர்களுடன் செல்வது வழக்கம்.


வடலூரில் சத்திய தருமச்சாலை ஆரம்பித்த பிறகு ஒருமுறை அன்பர்களுடன் சிதம்பரம் ஆனி திருமஞ்சன விழாவிற்கு அன்பர்களை அழைத்து சென்றுள்ளார்.

அதற்கு அடுத்த வருடமும்  சிதம்பரம் விழாவிற்கு வள்ளலார் அழைத்து செல்வார் என்ற எண்ணத்துடன் அன்பர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். 


ஒருசில அன்பர்கள் தருமச்சாலையில் உள்ள அன்பர்களிடம் சொல்லிவிட்டு முன்கூட்டியே சிதம்பரம் சென்று விட்டார்கள். மீதம் உள்ளவர்கள் வள்ளலார் வருவார் அவருடன் செல்லலாம் என காத்திருந்தனர் வள்ளலார் செல்லவில்லை.


சிதம்பரம் விழாநேரம் நெருங்கியும் வள்ளலார் எதுவும் சொல்லாமல் தருமச்சாலையிலே இருந்தார். 

அங்குள்ள அன்பர்களின் ஞாபகம் எல்லாம் சிதம்பரம் விழாவை காண முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அதையே நினைத்து கொண்டு இருந்துள்ளார்கள்.*அன்பர்களின் எண்ணத்தை அறிந்து கொண்ட வள்ளலார்*

சிதம்பரத்தில்  சாமிதரிசனம் காட்டும் நேரம் வந்த்தாகிவிட்டது.


*உடனே தருமச்சாலையின் சுவரில் ஒரு வெள்ளைத் துணியை திரையாக கட்டச் சொன்னார்கள் தருமச்சாலையில் உள்ளவர்கள் அனைவரையும் திரையின் முன்னே அமரச்சொன்னார்கள்*.


அனைவரும் திரையின் முன்னே அமரந்தார்கள்.

*சிதம்பரத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சன விழாக் காட்சிகளை இங்குள்ளவர்கள் திரையில் கண்டு களித்தார்கள்*.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செயல் வெளியில் எவரும் சொல்ல வேண்டாம் என கட்டளை இட்டார். *வள்ளலார் பேச்சை நம் மக்கள் அன்றும் கேட்கவில்லை இன்றும் கேட்கவில்லை.*


பின் அந்நிகழ்ச்சியை  நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அந்த அருள் அற்புதத்தை சொல்லி சொல்லி  ஆச்சரியமும் ஆனந்த கண்ணீரும் மல்க பேசி பேசி *அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஆனந்தமும்  அடைந்தார்கள்*.

 எப்படியோ அந்நிகழ்ச்சி  தமிழகம் எங்கும் விரைவாக பரவியது.


*அதன் பின்னர் வள்ளலார் சிதம்பரம் செல்வதை நிறுத்திக் கொண்டார்*.


*வள்ளலார் தேகம் சுத்த பிரணவ ஞானதேகம் பெற்ற அருள் ஒளி உடம்பு*


( *அவர் தன் உண்மையான அருள் உடம்பை வெளியே காட்டிக் கொள்வதில்லை.மேட்டுக்குப்பத்தில் திருஅறைக்குள் சென்று சித்தி பெறுகின்றவரை சாதாரண மனிதர் போலவே காட்சி  கொடுத்துக் கொண்டு இருப்பார்*.)


அப்போது வீடியோ ஆடியோ எடுக்கும் விஞ்ஞான அறிவியல் கருவிகள் எதுவும் இல்லை. மின்சாரம் இல்லாத காலம்.  வள்ளல்பெருமானால் சிதம்பரம் நிகழ்ச்சியை  நேரலையில் ஒளி ஒலிபரப்பு காட்சிகளை எவ்வாறு காட்ட நேர்ந்தது மக்கள் சிந்திக்க வேண்டும். 


*வள்ளலார் உடம்பு பஞ்சபூத தேகம் அல்ல. ஞானதேகம் என்னும் அருள் தேகம் அதாவது அருள் நிறைந்த ஒளிதேகம் என்பது அங்குள்ளவர்கள் எவருக்கும் தெரியாது*.


அருள் தேகம் உள்ளவர்களுக்கு *ஆன்ம ஒளிதேக அணுக்கதிர் வீச்சுக்கள் ஒவ்வொன்றும் அருள் கண்கள் உடையதாகும்.* அவர்களின் அருள் கண்கள் அண்டகோடிகள் எல்லாம் ஊடுருவி செல்லும் ஆற்றல் கொண்டதாகும். *நினைத்த மாத்திரத்தில் எதுவும் நடக்கும்*.

அதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் தடுக்க முடியாதது. 


*சிதம்பரம் விழா நிகழ்ச்சிகளை அப்படியே தன் உடம்பில் வாங்கி தருமச்சாலையில் கட்டியுள்ள திரையில் செலுத்தி அன்பர்களை பார்க்க வைத்துள்ளார்* 


*இவைகள் மாயா ஜால  காட்சிகள் அல்ல அணு அறிவியல் சார்ந்தது*


*வள்ளலார் பாடல்* ! 


*கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே*

அதிசயம்  இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி!*


அண்டமும் அதன் மேலண்டமு மவற்றுள

பண்டமுங் காட்டிய பரம்பர மணியே!


அண்ட கோ டிகளெலாம் அரைக்கணத் தேகிக்

கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே!


*அருள் பெறில் துரும்புமோர் ஐந்தொழில் புரியும்*

*தெருளிது எனவே செப்பிய சிவமே!*


அருளுறில் எல்லாம் மாகும் ஈதுண்மை

அருளுற முயல்க வென்றருளிய சிவமே! 


என்ற உண்மைகளை அருட்பெருஞ்ஜோதிஅகவல் வரிகளில் பதிவுசெய்கிறார்.


மேலும் 


*அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே*

*அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே*


*பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே*

*பேசிப்பேசி வியக்கின் றேன் இப்பிறவி தன்னையே*.! 


மேலும்

இதுபோல் நூற்றுக் கணக்கான பாடல்களில் அருள் பெற்ற உடம்பின் அதிசயங்கள் பற்றிய ஆற்றலைப் பற்றி பதிவு செய்துள்ளார். 


வடலூரில் வள்ளலார் ஒலி ஒளி காட்சிகளை நேரலையில் காட்டியதுபோல் நாமும் அருள் பெற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தலாம்.

கண்டுகளிக்கலாம்


*பற்றிய பற்று அனைத்தினையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே*. 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு