சனி, 26 நவம்பர், 2016

இன்பம் இரண்டு வைகப்படும் !

இன்பம் இரண்டு வகை !

 உலகில் ஆண் பெண் இணைந்து அனுபவிப்பது ஒரு இன்பம் , அந்த இன்பத்தின் சுகத்தை அனுபவித்து  உணரத்தான் முடியுமேத் தவிர விவரிக்க முடியாது ,

ஆனால் அந்த இன்பம் அந்த சுகம் நிரந்தரமாக இருப்பதில்லை .இதற்கு பொருள் சுகம் என்றும் சிற்றின்பம் என்றும் பெயர் .

அதற்கு மேல் ஒரு சுகம் ,ஒரு இன்பம் உள்ளது அதற்கு அருள் சுகம் என்றும் அருள் இன்பம் என்றும் பெயர் , அந்த இன்பம் நிரந்தரமானது .இடைவிடாதது , தெவிட்டாது கிடைக்கும் இன்பமாகும் , இதற்கு பேரின்ப பெரும் சுகம்  என்பதாகும் .

அந்த இன்பத்தைத் தருபவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் .

 அந்த இன்பத்தை அனுபவிக்க எத்தனை யோ அருளாளர்கள் முயன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் வள்ளலார் .

இதைத்தான் அகவலில் தெளிவாக பதிவு செய்து உள்ளார்

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை ! என்கிறார் .

மேலும் தான் அனுபவித்த இன்பத்தை  அனுபவமாலை என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ள பாடல் !

கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு மேனியிலே கலந்த மணம் அதுதான்

இற்பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரியநிறை இறை வடிவத் துளத்தே

பொற் பூவும் நறுமணமும் கண்டு அறியார் உலகர்
புண்ணியனார் திருவடிவில் நண்ணியவார் அதுவே

நற்பூதி அணிந்த திரு வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே !

என்னும் பாடல் வரிகள் மூலமாக தான் அனுபவித்த இன்பத்தை சகத்தை  வெளிப்படையாக சொல்லுகின்றார் .

ஆண் பெண் அனுபவித்த இன்பத்தையே வெளியில்  சொல்ல முடியாது .

ஆனால் வள்ளலார்  தான் அனுபவித்த இன்பத்தை சுகத்தை  அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற பெருங்கருணையோடு வெளிப்படையாக வெளிப் படுத்துகின்றார் .

நாமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காதலித்து என்றும் அழியாத பேரின்ப சுகத்தை அனுபவித்து மரணத்தில் இருந்து விடுபடுவோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு