சனி, 26 நவம்பர், 2016

அதி தீவிர பக்குவம் உள்ளவர் !

[25/11, 1:58 p.m.] Kathirvel: அதிதீவிர பக்குவி

சீவன் என்கிற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய் விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் எடுத்துவிட வேண்டியது. அதாவது 16 தினத்திற்கு ஒருதரம் தேகசம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்தி விட வேண்டும். ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்ததரத்தையுடையவனுக்கேயன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல.

108. நம்மை நஷ்டஞ் செய்யும் நான்கு

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன: ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் - ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கிலும் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தாலதையடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.

ஜாக்கிரதை

ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் - இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், இவற்றில் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். இதனளவில் ஒரு மனிதன் தன்னை ஸர்வ ஜாக்கிரதையுடன் காக்கவேண்டும். இல்லையாயின் அதி சீக்கிரத்தில் மரண மடைவான்; சந்தேகமில்லை. இல்வாழ்வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது.
[25/11, 2:21 p.m.] Kathirvel: தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்

இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன: ஆகாரம், மைதுனம். ஆகாரத்தா லொன்பது பங்கு நஷ்டமும், மைதுனத்தாலொரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது. எப்படியெனில்: பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் ஆகாரம் உண்டு. இது இயற்கை. சிசு, வாலிபம், விருத்தாப்பியம் - இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது. கவுமாரம், யௌவனம் - இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும், நோயாலும் துக்கத்தாலும் தரித்திரத்தாலும் பசியாலும் பயத்தாலும் வேறு அநந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைப்படும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு. பொருந்தல் ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகாரவிஷயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி, சுத்த சத்துவ ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.

மேலே கண்ட செய்தியில் மரணம் வருவதற்கு இரண்டு காரணத்தை வள்ளலார் சொல்லுகிறார .ஒன்று உணவு ,அந்த உணவினால் உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்து ,

அந்த சுக்கிலத்தை தியானத்தால் தவத்தால் நிறுத்தி விடலாம் என்பது அறியாமை , எரிவதை நிறுத்தினால் கொதிப்பது அடங்கி விடும் என்பது குழந்தைக்கு கூட தெரியும் .

உணவை நிறுத்தினால் சுக்கிலம் நின்று விடும் .

இதற்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .

இடைவிடாது இறைவனிடம் தொடர்பு உடையவர்களுக்கு ,அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கிறார் வள்ளலார் ,

அதனால்தான் மனதை சிற்சபையின் கண் இடைவிடாது செலுத்துங்கள் என்கிறார் .

அப்படி செலுத்தும் போது ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் ,அருள் உணவு கிடைத்தால் பொருள் உணவு தானாகவே நின்று விடும் .

செய்ய வேண்டியதை செய்யாமல் செய்ய வேண்டாததை செய்வதால்  எந்தப் பயனும் இல்லை ,

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு