செவ்வாய், 22 நவம்பர், 2016

நாம் செய்ய வேண்டியது என்ன ?

நாம் செய்ய வேண்டியது என்ன ?

  உண்மையான ஜீவ காருண்யம் மட்டுமே செய்யுங்கள் .அடுத்து எல்லாம் செயல்  கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து .

எல்லாம் வல்லவன் யார் ? என்பது ஜீவ காருண்யத்தால் மட்டுமே தெளிவாகும் ,அது எப்படி ? என்று விணா வரலாம் .

அதற்கான விடையை வள்ளலார் தெளிவாக  சொல்லுகின்றார் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாகவே விளங்கும் .

ஜீவ காருண்யம் செய்யாத  போது அன்பும் அறிவும் தானாகவே மறையும் .

அறிவு விளக்கம் தான் உண்மையை வெளிப்படுத்தும் கருவி

சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் எளிமையாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் .

 ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் .அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் _அறிவு உண்டானால் அருள் உண்டாகும் , அருள் உண்டானால்  அருட்பெரும்ஜோதி யார் ? என்பது தெரியும் .அருட்பெரும்ஜோதி  உடன் தொடர்பு கொண்டால் மட்டுமே கிடைக்க வேண்டியது கிடைக்கும் .

இதைத்தான் வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார் .

அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம் ,அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்

பொருட்சாரும் மறைகள் எல்லாம்  போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் ,

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எமக்கு அருளும் தெய்வம் .

தெருட்பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம் ,சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

எனவே அருளைப் பெற உண்மையானக் கடவுள் யார் ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

அந்தக் கடவுள் இடம் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்

அந்தக் கடவுள் இடம் இருந்து மட்டுமே அருளைப் பெற வேண்டும் .

மேலே கண்ட அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மை வழியாகும்

எல்லா வற்றுக்கும் ஆணிவேர் ஜீவ காருண்யம் மட்டுமே என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் ,

அறிவு விளக்கம் இல்லாதவர்கள் ஜீவ காருண்யம் செய்து அறிவு விளக்கம் அடையலாம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு