திங்கள், 7 நவம்பர், 2016

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் எட்டு பாடல் !

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் எட்டு  !

அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தின் எட்டுப் பாடல்களுக்கும் சுருக்கமாக விடை காண்போம்.

1,வது பாடலின் விளக்கம் முதல் பாடலில் ''அருட்பெரும் ''என்ற சொற் தொடர்  பன்னிரண்டு முறை வருகிறது .இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மையைப் பன்னிரண்டு வகையாக விரித்து விளக்கிக் காட்டுகின்றார் வள்ளலார் .

2,வது பாடலில் அருட்பெருஞ்ஜோதியின் அருள் அரசு,உலகில் உள்ள  கோடிக்கான உயிர்களிலும்,உலகங்களிலும்,அவற்றில் இருக்கும் பொருள்களிலும் அகமும் புறமும் நிறைந்து ஆட்சி புரிந்து வருகின்றது .

அவ்வாறு அருட்பெருஞ்சோதி அருள் அரசு நடைபெருவத்தின் நோக்கம் எல்லா உயிர்களும் சத்து,சித்து ஆனந்தம் என்னும் அனுபவம் பெற்றுக் கொள்வதற்காக பொதுவாக செயல்பட்டுக் கொண்டு உள்ளவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .

3,வது பாடல் ...மனிதர்களின் கண்,காது .மூக்கு,வாய்,மெய் ,என்னும் பொறி புலன்களிளாலும் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்  முதலிய கரணங்களாலும், இறைவனைக் காண முடிய வில்லையே என்று எண்ணி ஏங்கி இருக்கிறார்கள் முந்தைய அருளாளர்கள் .அவர்களுக்கு மிக நெருங்கி இருக்கும் ஒரே பொருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்று அவர்களுக்கு புரிய வைக்கின்றார் வள்ளல்பெருமான்.

அப்படி நெருங்கி இருக்கும் இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன் நித்தியமானவன் மிக நுட்பமானவன் அருள் ஒளி வடிவம் உள்ளவன் ,அந்த இறைவன் தன் அருளால் தன்னை சிறிது சிறிதாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றான்,தனது நுட்பமான அருள் நிலையை உணர்வு மூலமாக அறிந்து கொள்ளும்படி அருட்பெருஞ்ஜோதியாய் நின்று அனைத்தையும் ஆண்டுகொண்டு வருகின்றது . .

4,வது பாடல் ;--தனது உயர்ந்த அறிவினால் இறைவனை அடைந்து அனுபவித்து விடலாம் என்று எண்ணி முயன்றவர்கள் எல்லோரும் அவ்வாறு அடைய முடியாமல் வாய் திறக்க முடியாமல் மவுனிகளாய் ஆகி விட்டார்கள்.அறிவுடையவர்களை மவுனிகளாக ஆக்கிய இறைவன் இப்போது அருட்பெருஞ்ஜோதியாகி நம்மை ஆண்டு கொண்டு வருகின்றார்.நாம் எந்த வழியில் சென்றால் முழுமை பெறலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

5,வது பால ;-- இறைவன் ஆறு அந்தங்களுக்கும் முழுமையாக விளங்காதவன் ,,அவைகளையும் கடந்து நிற்பவன் அவ்வாறு விளங்கும் இறைவன் ,அவன் அருள் கொண்டு நோக்கும் போது அவன் சமரச சுத்த சன்மார்க்க சத்துப் பொருளாக புத்தமுதம் தருகின்ற ஜோதியாக பரி பூரணமாக விளங்கிக் கொண்டு உள்ளார் ..

6,வது பாடல.;-- இறைவன் ஒன்றாகவும்,பலவாகவும் காணுகின்ற இருவித தோற்றம் உடையவன் இறைவன்,..அப்படிப்பட்ட இறைவன் உடன் கூடியும் ,கூடாமலும் இருந்த முன் இருந்த ஞானிகளின்  அவர் அவர் தரத்திற்கு ஏற்பப் போற்றப் பட்டு ஓங்கி நிற்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..

7,வது பாடல் ;-- முன் இருந்த ஞானிகள் பலவகை சாதனைப் பயிற்சிகளில் படிபடியாக மேலே ஏறி உள்ளனர் .ஆனால் அவர்கள் சிவ ஜோதி அனுபவம் பெறுகின்ற போது சிவ ஜோதிக்  காட்சியும் ,அதனைக் காணும் அவர்கள் உணர்வும் ஒன்றில் ஒன்று இணைந்து வெளியே நின்று  கலந்து கரைந்து போயினர் .,உள்ளே செல்ல முடியவில்லை.இறைவனுடன் கலக்க முடியவில்லை  என்கின்றார் வள்ளல்பெருமான்.

இதனால் அவர்கள் சிவஜோதிக காட்சியும் ,அதனைக் காணும் உணர்வும் தன் தனித் தன்மையை இழந்து விடுகின்றார்கள் .இதை உணர்ந்த ஞானிகளுக்கு அவரவர் நிலையில் போற்றும்படி இருப்பவர் எவரோ அவரே அருட்பெரும்ஜோதி ஆண்ட்வராகும்.

8,வது பாடல் ;-- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! எங்கும் அருள் ஜோதி மயமாய் விளங்குகின்ற  திருச் சிற்றம்பலத்தில் என்னை ஈடு படுத்தினீர்கள் .எனக்குப் புதிய நல்ல அமுதத்தை ஊட்டி அருளிநீர்கள் ,அந்த அமுதத்தைத் தந்து அதை அனுபவிக்கும் நிலையையும் எனக்கு அளித்தீர்கள்.,உள்ளங் கையில் நெல்லிக் கனி பளீர் என்று விளங்குவது போல் .என் உள்ளேயும் விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் .என்கின்றார் வள்ளலார் ...

அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தில் உள்ள எட்டுப் பாடல்களின் கருத்துக்களை ஓர் அளவு உணர்ந்து கொள்ள வேண்டும்.அட்டகத்தின் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.அவ்வாறு படித்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ந்து கொள்ளலாம்.அந்த உணர்வுடன் வாழ்ந்து பேரின்பத்துடன் வாழலாம் .

எட்டோடு இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துணைக் கொள்கின்றீர் பித்து உஅலகீரெ !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

விரிவான விளக்கம் வேண்டும் என்றால் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கம் முழுமையாக பகிர்ந்து கொள்ளலாம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு