செவ்வாய், 4 ஜூலை, 2017

தவம் என்றால் என்ன ?

தவம் என்றால் என்ன ?

ஒழுக்கத்தோடு வாழ்வதுதான் தவம்

அதுதான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

ஜீவன் என்றால் உயிர்...உயிரை காப்பாற்றுவது எதுவோ அதற்குப் பெயர்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

சோறு போடுவது மட்டும் ஒழுக்கம் அல்ல!
 அதற்கு மேல் நிறைய உள்ளது...

உலக வாழ்க்கையில் வெறுப்பு கொண்டு மக்களுக்காக எந்த நல்ல காரியங்களும்.உபகாரங்களும் செய்யாமல் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு

தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டு என்ன நினைத்து தவம் செய்கிறார்கள் எனபது தெரியவில்லை.

ஒவ்வொருவரும் எதாவது ஒரு மந்திர வார்த்தையை மனதிலோ் வெளியிலோ சொல்லிக் கொண்டும்.மணிகளை உருட்டிக் கொண்டும் தனியே அமர்ந்து விடுகின்றார்கள்.அதற்கு பெயர் தவம் என்கிறார்கள்.

அதனால் மனம் அமைதி பெருவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

எதுவும் பேசாமல் வாயை அடக்கிக் கொண்டு இருந்தாலே மனம் அமைதிபெறும் அதுதான் உண்மை.

அதே நேரத்தில் சாத்வீக உணவு அரை வயிறு உட் கொண்டாலே தூக்கம்.மைத்துனம்.பயம்  குறைந்து மனம் அமைதி பெறும். வெளியில் சென்று அலைமோதும் மனத்தை ஒருவாறு கொஞ்சம் நேரம் அமைதிப் படுத்தலாம் முழுமையாக அமைதி படுத்த முடியாது.

 மனதை அமைதிப் படுத்த வேண்டுமானால் .

உடம்பின் தலைவர் ஆன்மா என்னும் உள் ஒளியாகும்.அந்த உள் ஒளி மறைபொருளாக உள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளது.அது அறியாமை என்னும்(மாயா) ஏழு திரைகளால் மறைக்கப்பட்டு உள்ளது.

மனம் என்னும் கருவியை ஆன்மாவுடன்  தொடர்பு கொள்ள வைப்பதே தியானம் என்பதாகும்....

கேட்டுப் பெறுவது தவம்.
கேட்காமல் பெறுவது தியானம் ...

கேட்டுப்பெறுவதால் கிடைப்பது மனம் நெகிழ்ச்சி மனம் உருக்கம்.

கேட்காமல் பெறுவது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்.

ஆன்ம நெகிழ்ச்சியும் ஆன்ம உருக்கமும் சத்விசாரம் என்னும் தியானத்தாலும்.பரோபகாரம் என்னும் ஜீவகாருண்யத்தாலும் மட்டுமே உண்டாகும்.

ஆன்ம நெகிழ்ச்சி.ஆன்ம உருக்கம் உண்டானால் அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விடும்.அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் மனம் அறிவுப் பக்கம் திரும்பி விடும்.

மனம் ....அகம் என்னும் ஆன்மாவின் உள்ளே உள்ள அறிவுப் பக்கம் திரும்பி விட்டால்.

புறம் உள்ள கரணங்களும்.புறப்புறம் உள்ள இந்திரியங்களும் அறிவு சொல்படி கேட்டு இயங்க ஆரம்பித்துவிடும்.

அறிவு உண்மைக்கு மட்டுமே.. ஜீவனையும்.கரணங்களையும் .இந்திரியங்களையும் பயன் படுத்திக் கொள்ளும்

உண்மையான ஜீவகாருண்யம் என்னும் தயவால்.அன்பால்.கருணையால் அறிவு விளக்கம் உண்டாகும்.அறிவு விளக்கத்தால் அருள் விளக்கம் உண்டாகும்

அருள் பூரணத்தால் மரணத்தை வெல்ல முடியும்.

வள்ளலார் பாடல் !

அறிவில் அறிவை அறியும் பொதுவில்ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழிசெல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி!

என்றும்

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !.....என்றும்

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

என்று அறிவைப் பற்றியும்.அருளைப் பற்றியும் தெளிவாக விளக்கி உள்ளார்..

அறிவு அருள் கருணை இருக்கும் இடத்தில் கடவுள் செயல்படுகின்றார்..

கருணை இல்லாமல் வேறு எந்த வித தியானம்.தவம் யோகம் போன்ற செய்கைகளினால்  இறை அருளைப் பெற முடியாது என்பது திண்ணம்.உண்மை.

எனவேதான் ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற தியானம்.தவம்.யோகம் போன்ற காரியங்கள் எதுவாக இருந்தாலும் எப்படி செய்தாலும் .. எல்லாம் வெற்று மாயா ஜாலங்களே என்கின்றார் வள்ளலார்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்ஜோதி!

கருணை உள்ள உள்ளத்திலே கடவுள் வாழ்கின்றார் என்பதாகும்.

இறைவனை இடைவிடாது நினைப்பதுவே தியானம் .தவம்.யோகம் என்பதாகும்.

ஆன்மாவிடம் மனம் தோடரபு கொள்வதே சுத்த சன்மார்க்க தியானம் என்பதாகும்.

சுத்த சன்மார்க்க தியானம் செய்வது எப்படி என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் தெரியப் படுத்துகிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு