புதன், 12 ஜூலை, 2017

இன்பம் இரண்டு வகையாக உள்ளது !

இன்பம் இரண்டு வகையாக உள்ளது !

அழியும் இன்பம் ! அழியா இன்பம் !

அழியும் இன்பம் சிற்றின்பம் என்றும் .அழியா இன்பம் பேரின்பம் என்றும் சொல்லுகின்றார்கள்.

சிற்றின்பம் என்பது சிறிய இன்பம் அதாவது நிலைத்து நிற்காது உடனே நின்றுவிடும் அல்லது அழிந்து விடும்.!

பேரின்பம் என்பது நிலைத்து நிற்கும் .என்றும் எக்காலத்தும் அழியாதது !

எக்காலத்தும் அழியாத இன்பத்தைப் பெறுவதற்கு அனுபவிப்பதற்கு எல்லோருக்கும் ஆசைதான் .அதில் எந்த சந்தேகமும் இல்லை இருக்கவும்  முடியாது .

உலகில் உள்ள பொருள்களை பெற்று .அதாவது பொன்.பெண்.மண் இவைகளைப் பெற்று அனுபவிப்பது சிறிய இன்பம் அதாவது சிற்றின்பம் .இவைகள்தான் மனிதனை அழித்துக் கொண்டு உள்ளது .எல்லாம் இருந்தும் இறுதிவரை முழுமையாக  அனுபவிக்க முடியாமல் இறுதியில்,அச்சம் .பயம் துன்பம்  மரணம் வந்து அழிந்து போகின்றார்கள்

அதே மனிதன் மேலே கண்ட .பொன்.பெண்.மண்ணை  விட்டு உண்மையான  இறைவனிடம் தொடர்பு கொண்டு  அருளைப் பெறுகின்ற போது.அச்சம் பயம்,துன்பம்  மரணம் அடையாமல்.என்றும் அழியாமல் வாழ்கின்ற பேரின்ப பெரிய லாபத்தைப் பெறுகின்றார்கள்  .

இந்த உலகத்தில்  மாயையால் கொடுப்பது எல்லாம் பொருள். அதனால் மனிதன் மரணம் அடைந்து  காணாமல் போய் விடுகின்றான்.

எல்லாம் வல்ல பரம் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் எல்லா வற்றையும் படைத்தவராகும் .அவரை மட்டுமே தொடர்பு கொள்ளுகின்ற போது அருளை வாரி வாரி  வழங்குகின்றார் .அந்த அருளைப் பெறுகின்றவர் எவரோ! அவரே ! மரணத்தை வென்று பேரின்ப லாபத்தைப் பெற்று பேரின்ப சித்தி என்னும் பெரு வாழ்வாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வில் திளைத்து வாழும் தகுதி உடையவர் ஆகின்றார் .

மனிதன் !

உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பிற்கு மட்டுமே அந்த அழியா ஆன்ம  இன்ப லாபமான  பேரின்பத்தை பெறுவதற்கும் ,அனுபவிப்பதற்கும் இறைவன் அனுமதி வழங்கி உள்ளார்.

பேரின்பத்தைப் பெறுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஆன்மீகம் என்னும் போர்வையில் பல ஞானிகள் பல அருளாளர்கள் பலப்பல வழிகளைக் காட்டி உள்ளார்கள் ...துறவறம்.சந்நியாசம்,பற்று அறுத்தல்,வீட்டை விட்டு வெளியேறுதல்..மலை.வனம்..குகைகளுக்கு செல்லுதல் .தியானம்.தவம்.யோகம்.போன்ற கலைகளை கற்று அதிலே மூழ்கி போய்.அப்படியே சமாதி நிலையாகி .எந்தவிதமான பெரிய ஆன்ம  லாபத்தையும் பெற முடியாமல் .இறுதியில் மரணம் வந்து மாண்டு போய் விடுகின்றார்கள்.

இதற்காகவா உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பை இறைவன் கொடுத்தார் .சிந்திக்க வேண்டும்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை அறிந்து உணர்ந்து கொள்வார்கள்.அறிவு இல்லாதவர்கள் பல தவறான வழிகளில் சென்று இறுதியில் வழி தெரியாமல் மாண்டு போய் விடுகின்றார்கள்.

வள்ளலார் வருகை !

உலக மக்கள் அனைவருக்கும்  உண்மையான .தூய்மையான.ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான   வழிக் காட்டவே இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர்தான் '''திரு அருட்பிரகாச வள்ளலார்'' என்பவராகும்.

உலகப்  பொது நெறியாகிய உண்மை நெறியில் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற ஒரு  அமைப்பை.ஒரு இயக்கத்தை வடலூரில்  25-1-1872..ஆம் ஆண்டு தோற்றுவித்தார் .

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்ள...உலக மக்கள் அனைவரும்  அவற்றுடன் தொடர்பு கொள்ள வடலூரில் 25-1-1872.ஆம் ஆண்டு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''' என்ற பொதுவான கடவுள் வழிப்பாட்டு இடமாக ''சமரச சுத்த சன்மார்க்க  சத்திய ஞான  சபையை''  தோற்றுவித்து உள்ளார் .

இறைவன் அருளைப் பெறுவதற்கு ;---

இயற்கை உண்மையாகிய இறைவனை அறிந்து.அவற்றுடன் தொடர்பு கொண்டு ... இயற்கை விளக்கமாகிய அருளைப் பெற்று ,இயற்கை இன்பமாகிய ஆன்ம லாபத்தை பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று  வாழ்வதற்கு சிறந்த  வழி இதுதான் என்பதை விளக்கும் விதமாக ..ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதை எழுத்து வடிவமாக ''ஜீவ காருண்ய ஒழுக்கம்''  என்னும் தலைப்பில் ஒரு சிறந்த அருள்  நூலை 23-5-1867..ஆம் ஆண்டு வெளியிட்டார் ..

 இறைவன் அருளைப் பெறுதற்கு இரண்டு வழிகளைக் காட்டினார் .ஒன்று சத் விசாரம் ! .ஒன்று ஜீவ காருண்ய ஒழுக்கம்! இந்த இரண்டு  வழிகளைத் தவிர வேறு வழிகளில் செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டு சொல்லுகின்றார் .

  இறைவனிடம் தொடர்பு கொள்ள சிறந்த  வழி ஜீவ காருண்யம் ஒழுக்கம் மட்டுமே.என்பதை விளக்கும் விதமாக 23-5-1867.ஆம் ஆண்டு  அதே நாளில்  வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை ''தோற்றுவித்து உள்ளார் ......

வள்ளலார் சொல்லிய வண்ணமே ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து .எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு .பூரண அருளைப் பெற்றார்....

எல்லாம் வல்ல  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை ...வடலுறுக்கு அடுத்துள்ள  மேட்டு குப்பம் என்னும் சிறிய ஊருக்கு வரவழைத்து அங்கே ஒரு சிறு குடிசையில் தங்க வைத்து .பூரண அருளை வழங்கி .அவருடைய ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி தானும் அவர் உடம்பிலே கலந்து கொண்டார்..

அதற்கு ஆதாரமான பாடல் ;---- சத்திய அறிவிப்பு ஆறாம் திருமுறை !.

  • 1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர் 
    ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை 
    மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் 
    விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் 
    துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் 
    சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க 
    வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே 
    மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. 
  • 2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற 
    தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் 
    இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க 
    இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற 
    மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி 
    மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே 
    கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே 
    களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே. 
  • 3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் 
    சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் 
    இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் 
    இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் 
    சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் 
    தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் 
    செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் 
    திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. 
  • 4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 
    இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
    பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 
    பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
    தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் 
    சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
    மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 
    வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. 


மேலே கண்ட பாடல்கள் நான்கும் வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன்பு பதிவு செய்துள்ள பாடல்களாகும்.
வள்ளல்பெருமான் அவர்கள் உலக மக்களுக்கு வாழ்ந்து வழி காட்டி உள்ளார் .அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெரு வாழ்க்கை என்பதாகும் .இறைவனுடன் கலந்து வாழ்வதாகும்.கடவுள் நிலை அறிந்து அம் மயமாகி வாழ்வதாகும் ..

வள்ளலார் இப்போது எங்கே இருக்கின்றார் என்ன செய்து கொண்டு இருக்கின்றார் என்ற கேள்வி மக்களிடையே நிறைந்து உள்ளன ..வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளைப் படி ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று ஐந்தொழிலையும் அவரே  செய்து கொண்டு உள்ளார் .








இவை போல் நிறைய பாடல்களை பதிவு செய்துள்ளாளர் .வள்ளலார் ...

இதுவரை இறைவனை தொடர்பு கொண்டு உள்ளவர்கள் காத்துக் கொண்டு இருக்க வள்ளலாரை மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தேடிவந்து அருள் வழங்கி உள்ளார் என்பதை விளக்கும் பாடல்.



என்னும் பாடல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

எனவே நாம் பேரின்பம் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டுமானால் இறைவனுடைய திருவருள் வேண்டும்...அத் திருவருளைப் பெற வேண்டுமானால்.வள்ளலாரைப் போல் ஜீவ காருண்ய ஒழுக்க நெறியிலும் ,இடைவிடாது இறைவனிடம் தொடர்பு கொண்டு  வாழ்ந்தால் மட்டுமே பூரண அருள்  கிடைக்கும்.வேறு வழிகளில் சென்றால் நிச்சயம் எந்த லாபத்தையும் பெற முடியாது..என்பதை கவனமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ வேண்டும்....



  • 1. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும் 
    மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன் 
    சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால் 
    தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி 
    ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும் 
    உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை 
    ஆழி கரத்தணிந் தாடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 2. இசையாமல் போனவர் எல்லாரும் நாண 
    இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
    வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி 
    வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு 
    நசையாதே என்னுடை நண்பது வேண்டில் 
    நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் 
    அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 3. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண 
    இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
    தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற 
    திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி 
    துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே 
    சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி 
    அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 4. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம் 
    சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ 
    விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா 
    வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் 
    பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் 
    பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான் 
    அதுஇது என்னாமல் ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 5. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் 
    தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே 
    எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் 
    என்தோழி வாழிநீ என்னொடு கூடி 
    துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச் 
    சோதிஎன் றோதிய வீதியை விட்டே 
    அப்பாலே போகாமல் ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 6. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் 
    விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம் 
    எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி 
    என்மொழி சத்தியம் என்னோடும் கூடி 
    இங்கே களிப்பது நன்றிந்த உலகோ 
    ஏதக் குழியில் இழுக்கும் அதனால் 
    அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 7. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன் 
    செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன் 
    உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில் 
    ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன் 
    தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் 
    தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி 
    அவமேபோ காதென்னோ டாடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 8. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் 
    சூழலில் உண்டது சொல்லள வன்றே 
    எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன் 
    இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் 
    விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே 
    வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே 
    அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • 9. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன் 
    என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி 
    காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் 
    கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி 
    ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ 
    ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும் 
    ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  • io.. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச் 
    சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப் 
    பதிசெயும் சித்திகள் பற்பல வாகப் 
    பாரிடை வானிடைப் பற்பல காலம் 
    விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும் 
    மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ் 
    அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
    ஆடேடி பந்து ஆடேடி பந்து 
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 
மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் சுத்த சன்மார்க்க கொள்கையை விளக்கும் பாடல்களாகும் ..பொருளை உணர்ந்து படியுங்கள் ..

சிற்றின்பம் வேண்டுமா ? பேரின்பம் வேண்டுமா ? நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு