புதன், 26 ஜூலை, 2017

திருவடி என்றால் என்ன ?

திருவடி என்றால் என்ன ?

அனனைவருக்கும் வணக்கம் !

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உருவம் அற்றவர் .

அவருக்கு அடியும் கிடையாது முடியும் கிடையாது..

தலையும் கிடையாது..காலும் கிடையாது.

எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருள்..

வள்ளலார் பாடல்.!

எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தேஇதுஅது எனஉரைப் பரிதாய்த்தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்புத்தமு தருத்திஎன் உளத்தேஅங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்தஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

இங்கு இறைவன் திருவடி என்பது  சுத்த சன்மார்க்கத்தில் .
வள்ளலார் சொல்லும் திருவடி.
*அருள்* தான் திருவடி.நிலையாகும்.

அருளைப் பற்றுவது தான்  பெருவதுதான் திருவடியை வணங்கி வாழ்த்துவதாகும்.

சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே !என்கிறார் .

சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும் ஆன்மாவை தொடர்பு கொள்வதே திருவடி நிலையாகும்.

ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள மாயா திரைகள் விலக வேண்டும் .திரைவிலகினால் அருள் சுரக்கும்.அருள் சுரந்து உடம்பு முழுவதும் நிரம்ப வேண்டும்.அருளான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வல்லபம் உடையது.

எனவே....அருள் தனி வல்லபம் உடைய திருவடியாகும்.

அகவல் வரிகளை நன்கு  படித்தால் விளங்கும்.

அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

அருளறி யார்தமை யறியார் எம்மையும்பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே.

அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலைபொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

அருள்வடி வதுவே யழியாத் தனிவடிவருள்பெற முயலுகென் றருளிய சிவமே

அருளே நம்மிய லருளே நம்முருஅருளே நம்வடி வாமென்ற சிவமே

அருளே நம்மடி யருளே நம்முடிஅருளே நம்நடு வாமென்ற சிவமே

அருளே நம்மறி வருளே நம்மனம்அருளே நங்குண மாமென்ற சிவமே

அருளே நம்பதி யருளே நம்பதம்அருளே நம்மிட மாமென்ற சிவமே

அருளே நந்துணை யருளே நந்தொழில்அருளே நம்விருப் பாமென்ற சிவமே

அருளே நம்பொரு ளருளே நம்மொளிஅருளே நாமறி வாயென்ற சிவமே

அருளே நங்குல மருளே நம்மினம்அருளே நாமறி வாயென்ற சிவமே

அருளே நஞ்சுக மருளே நம்பெயர்அருளே நாமறி வாயென்ற சிவமே

அருளொளி யடைந்தனை யருளமு துண்டனைஅருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனைஅருளர சியற்றுகென் றருளிய சிவமே

அருளமு தேமுத லைவகை யமுதமும்தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே

அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

அருளமு தளித்தனை யருணிலை யேற்றினைஅருளறி வளித்தனை யருட்பெருஞஜோதி

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி !

நான்கு அருட்பெரும்ஜோதி யிலும் .அருள் நிறைந்த பெருஞ்ஜோதியாக  உள்ளது.என்கிறார் வள்ளலார்

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்தருட்பெருந் தலத்துமேல் நிலையில்அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்அருட்பெருந் திருவிலே அமர்ந்தஅருட்பெரும் பதியே அருட்பெரு நிதியேஅருட்பெருஞ் சித்திஎன் அமுதேஅருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமேஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

சமயத்தையும் மத்த்தையும்  பற்று வைத்துக் கொண்டு சுத்த சன்மார்க்கத்தில் திருவடியை தேடாதீர்கள்...

தேடினால் கிடைக்காது.தவறான வழிகள் தான் தோன்றும்...

ஒவ்வொரு ஆன்மாவும் அதன் உள் இருக்கும் அருளே திருவடியாகும்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு