செவ்வாய், 25 ஜூலை, 2017

விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் ! என்றால் என்ன ?

 விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் ! என்றால் என்ன ?

விந்து நாதம் என்பது ;-- மனித உடம்பில் உண்ணும் உணவு இரைப்பையில் சேர்ந்து .அரைக்கப்பட்டு திரவமாக மாற்றி, பின் நுரையீரல்,கல்லீரல் கணையம் போன்ற உறுப்புக்களால் அந்த திரவத்தை வேதியல் மாற்றம் செய்து இரத்தமாக்கி ,அவற்றை உடம்பு முழுவதற்கும் அனுப்பப் படுகின்றது .அந்த இரத்ததில் உள்ள முக்கிய வீரியமுள்ள பகுதியை வடிகட்டி(பில்டர் செய்து )  தனியாக எடுத்து குண்டலிப் பைக்கு அனுப்ப படுகின்றது.

அதற்கு மூல ஆதாரம் என்று சொல்லப் படுகின்றது ,அந்தப் பையில் சேரும் திரவத்திற்கு விந்து என்றும் .சுக்கிலம் என்றும் சொல்லப் படுகின்றது .அந்த விந்து பையில் இருந்து ஆறு ஆதாரங்கள் வழியாக உள் நாக்கின் வழியாக அதன் ஆவி இறங்கினால் தான் பேச்சு வரும் ,அந்த பேச்சுக்கு நாதம் என்று பெயர்.அதனால் தான் அதற்கு விந்து நாதம் என்று பெயர். விந்துவின் ஆவி மேலே வரவில்லை என்றால் பேச்சு என்னும் சப்தம் .நாதம் என்னும் ஒலி வராது.பேச்சு வராதவர்களை ஊமையன் என்றும் சொல்லுவது உண்டு ..

வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம் .!

மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்கு மேல் நான்கு சதுரமான ஒரு பை உண்டு .அதில் 16.வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது .அதைத்தான் மானச தடாகம் என்று சொல்லுகின்றது. 16 வயதுக்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகின்றது.

அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன் வண்ணமாக இருக்கும்.அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும்.அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றில் ஒரு பங்காக வெகு நேர்மையாய் இருக்கும்.அதன் வண்ணம் பொன் மயமாய் இருக்கும்.அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அந்த ஆவி உண்டாகும் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் .அடங்கும் காலம் என்றும்,கேவல காலம் என்றும் சொல்லப்படும்.அந்த ஆவி உண்டாகும் காலத்தில் செயற்கையானால்  ( உடல் உறவு கொண்டால் ) கருத்தரிக்கும் .அதுதான் சிருட்டி என்று சொல்லப்படுகின்றது .இன்னும் விரிக்கில் பெருகும் ...

இந்திரியம் என்னும் விந்து இருக்கும் குண்டலிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு .அதில் மூன்றாகப் பிரியும் கிளை உண்டு அதன் மூலம் முதல் பிரமந்திரம் வரையில்... இடம்,வலம்,நடு வென்று ...கத்திரி மாறலாய்ப் பிராண அபானனுக்கு இடம் கொடுத்து ஊடுருவி நிற்கும் .இந்த நரம்புகளுக்குச சோம சூரியா அக்கினி  என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று  ...வள்ளலார் சொல்லுகின்றார் .

இந்த விந்து சக்தியின் வழியாகத்தான் நாதம் என்னும் ஒலி வருகின்றது...நாம் உண்ணும் உணவினால் உண்டாகும் இந்திரியம் என்னும் திரவத்திற்கு.சுக்கிலம் என்றும்,விந்து என்றும் சொல்லப் படுகின்றது.

அந்த குண்டலி வட்ட பையில் இடம்,வலம்,நடு என்ற கிளைகளாக உள்ள நடுவில் உள்ள நரம்பின் வழியாகத்தான் பூத உஷ்ண ஆவி உள் நாக்கின் வழியாகச் சென்று நாக்கின் வழியாக சப்தத்தை எழுப்புகின்றது .அந்த ஆவி எப்போதும் ஈரம் உள்ளதாகவே இருக்கும் ...உமிழ் நீர் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.நாக்கு வரண்டு போனால் பேச்சு வராது .ஆவி வருவது குறைந்தால் நாக்கு வரண்டு போகும்.சப்தம் என்னும் நாதம் ஒலிக்காது...

இடம் வலம் உள்ள நரம்பின் வழியாக கீழே செல்வது கீழ் நிலை சுக்கிலம்,என்றும்,மேலே செல்வதை மேல் நிலை சுக்கிலம் என்றும் சொல்லப்படுகின்றது. மேலே செல்லும் சுக்கிலம் என்னும் ஆவி  நின்று விட்டால்,சப்தம் என்னும் நாதம் என்னும் ஒலி நின்று விட்டால்  மரணம் வந்து விடும்.

இதற்கு அசுத்த பூத காரிய விந்து என்றும்,அசுத்த பூத காரிய நாதம் என்றும் பெயர் .

மேலும் வள்ளலார் சொல்லியது !

பிரம ஸ்தானம் தொடங்கிச் சுத்த சிவ ஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம் .,இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் ,அதற்கு மேல் அக்கினி  வண்ணமாயும் இருக்கும் .இது அடியிற் பருத்து வரவர நேர்மையாய் ,இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கு அணுவாய் ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் ,ஆன்மக் காட்சியில் அருகித் தோன்றுவதாய் ,இரண்டற நிற்கும்.இதற்கு சிவா காரண பூரண ஸ்தம்பம் என்று பெயர் .

முன் சொன்ன இருதயா அக்கினிப் பை அக்கிரமாய் விரிந்து ,விசேஷ அக்கினி ஜிவாலை விசிரிம்பித்துக் கீழ் இருக்கும் ஷீராப்திப் பையில் இருக்கும் ஜலத்தைச் சுருட்டிக் கொள்ள ,ஜீவனுக்கு மரண காலம் நேரிடும் .மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் ...அருந்தல் ...பொருந்தல் இவை சமமானால் மரணம் வராது....

இவை சாதாரண அறிவைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது...ஆன்ம அறிவைக் கொண்டுதான் தெரிந்து தெளிவு பெற முடியும்.

பர விந்து பர நாதம் என்பது !

விந்து நாதத்தைக் கொண்டு பர நாதத்தை பெற வேண்டும்.

தொடரும் ;---

  


     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு