வெள்ளி, 28 ஜூலை, 2017

நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் !

நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் !

அன்பு உள்ளம் கொண்ட ஆன்ம நேய உடன் பிறப்புக்கள் அனவருக்கும் ஈரோடு கதிர்வேலின் அன்பு கலந்த வந்தனம் !

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து.!

என்று வள்ளலார் உலக மக்களுக்கு தெரியப் படுத்து கின்றார்

உலகம் எல்லாம் படைத்து .அவற்றில்  வாழும் உயிர்கள் என்னும் உயிர் அணுக்களைப்  படைத்து.உயிர்கள் வாழுவதற்கு ஏழு விதமான அணுக்களைப் படைத்து.அவற்றை நெறிப்படுத்தும் கிரகங்களைப் படைத்து.ஐந்து பஞ்ச பூதங்களைப் படைத்து..

ஆன்மா என்னும் ஒளியை அனுப்பி் ஆன்மா இவ்வுலகில் வாழ்வதறகு.அதற்கு உயிர் வழங்கி.உயிரும் ஆன்மாவும் வாழ்வதற்கு.ஏழு விதமான அணுக்களால் மேய்ந்த  அழகான உடம்பு என்னும் வீட்டைக் கட்டி கொடுத்து அதில் ஆன்மாவை வாழ வைத்துள்ளவர் தான்

உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்.

அந்த உண்மையான அருட்பெரும்ஜோதி யைத் தெரிந்து கொள்ளாமல் அவரிடம் இருந்து அருளைப் பெற முடியாமல் உயர்ந்த அறிவு கொண்ட மனித  ஆன்மாக்கள் கண் இருந்தும் குருடர்களாய்.காது இருந்தும் செவிடர்களாய்.

சாதி.சமய.மதம் என்ற அசுத்த குப்பைகளிலே.உருண்டு.அதுவே உண்மை என்று நம்பிக்கைக் கொண்டு அதிலே மூழ்கி
மருள் சூழ்ந்து.இருள் சூழ்ந்து மரணம் அடைந்து அதாவது இறந்து இறந்து .பிறந்து பிறந்து உழன்று கொண்டே  உள்ளார்கள்.

அவர்களை காப்பாற்றி கரைசேர்க்க வேண்டியது தனிப்பெரும் கருணைக் கொண்ட.அருள் தந்தை அருட்பெரும்ஜோதி இறைவன் கடமையாகும்

உயர்ந்த அறிவைக் கொடுத்து வாழ்கின்ற மனித தேகத்தைப் பெற்ற  ஜீவர்களை.உண்மை அடியர்களாக்கி.உண்மை அறிவை விளக்கி.உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அளிக்க வேண்டும்

என்ற பெருங் கருணை கொண்டு வள்ளலார் இடத்திலே.ஒப்பற்ற பெரிய பொருப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வழங்கி உள்ளார்.

அந்த மாபெரும் பொருப்பை வள்ளலார் சிரமேற் ஏற்றுக் கொண்டு திலகன் என நானே சன்மார்க நடத்துகின்றேன் நம் பெருமான் தானே எனக்கு தனித்து என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

அவர்தான் உலகம் எல்லாம் போற்றக் கூடிய ஓளி வடிவம் பொருந்திய கருணை வடிவனாகிய அருள் வள்ளலாகும் கருணைக் கடலாகும்.

நம்மை படைத்த உண்மையான
 இறைவனை அதாவது நமது அருள் தந்தையைத் தெரிந்து கொள்ளாமல் அருளைப் பெற முடியாது.

எனவே அருள் பெருவதற்கான  உண்மை ஒழுக்க நெறியை  வள்ளலார் நமக்கு தெளிவாக காட்டி  யும்.அதன்படி கடைபிடித்தும் வாழ்ந்தும் .பூரண அருளைப் பெற்றும் மரணத்தை வென்றும்.ஒளிதேகம் பெற்றும் வாழ்ந்து கொண்டு உள்ளவர் தான் நமது அருள் தந்தை வள்ளலாராகும்.

எனவே சன்மார்க்கம் நாம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.அவரே நடத்துகின்றார்.

நாம் அவர்காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று காட்டுவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறாகும்.

அப்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் அனைவரும் நம் தந்தை சொல் தட்டாத செல்லப் பிள்ளைகளாக அருட்பெரும்ஜோதி இறைவனால் ஏற்றுக் கொள்ள படுவோம்.

இன்று உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் அதிவேகமாக விதைக்கப்பட்டு வருகின்றது.அதற்கு காரணம் நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்ற வள்ளலாரின்  அருள் வாக்கு.அருள் கட்டளை.அருள் செயல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமாய் பணிவான அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!

வாழ்க உலக உயிர்கள்
வளர்க சுத்த சன்மார்க்கம்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு