வெள்ளி, 7 ஜூலை, 2017

திரு அருள் வல்லபம்*!

*திரு அருள் வல்லபம்*!

வள்ளலார் சொல்லி உள்ளார் !

*செத்தவனையே எழுப்ப முடியும் என்று*

 அதைவிடவா மிக்‌ஷிகன்  பல்கலைக் கழகம் கண்டு பிடித்து உள்ளது.

வள்ளலார் சொல்லியுள்ள மூலிகையை பயன் படுத்தினாலே பல வினோதங்கள் நடக்கும்.

*கருப்பு நாயுருவி*..

கறுப்பு நாயுருவிக் கஷாயம் ஐந்து மாத்த்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க .கொடுத்த ஐந்து நாழிகைக்குள் 10.மாத்த்துப் பூரண கர்ப்பம் உண்டாகிப் பிரசவமாகும்.

*குளிர்ந்த கொள்ளி*....

குளிர்ந்த கொள்ளி என்னும் பச்சிலையைக் கசக்கிக் குக்குட அண்டத்தின் கீழும் மேலும் வைத்து மூடிய இரண்டரை நாழிகைக்குள் கரு முற்றி குஞ்சு பொரிக்கும்.

*திப்பூடு*....

திப்பூடு என்னும் மூலிகையை நசுக்கி இறந்த கிளி முதலிய பறவைகளின் வலது காதில் வைக்க அவைகள் பிழைக்கும்.

திப்பூடு பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் உடனே பிழைப்பான்.

*முத்து பூண்டு*....

முத்துப்பூண்டுச் சாற்றை இறந்து போன பஷி மற்றும் எது ஆனாலும் அதன் காதில் சிறுக்க் சிறுக இரண்டரை நாழிகை பிழிந்தால் பிழைக்கும்.

*கருங்காந்தள்்*....

கருங்காந்தள் இலையைக் கசக்கி.வேட்டப்பட்ட துண்டுகளைச் சேர்த்து .கட்டி இரண்டரை நாழிகை வைத்து இருந்தால் .துண்டுகள் ஒன்றாய்ச் சேர்ந்து போகும்..

மேலே கண்டவை எல்லாம் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் அற்புதங்கள்

*பற்று அற்றவன்*...

வள்ளலாரைப் போல் பற்று அற்று அருள் பெற்றவர்கள்.அவர்கள் நினைத்த உடனே எது வேண்டுமானாலும் உடனே நடக்கும்.

எனவே உபாய மார்க்க வகைகளை விட உண்மை மார்க்க மான அருளே சிறந்த்து.எல்லாம் செய்ய வல்லது.

*உண்மை மார்க்கத்தை சொல்லித் தருவதுதான் சுச்த சன்மார்க்கம்*

அதற்குப் பெயர்தான் திருஅருள் வல்லபம் என்பதாகும்....

*அகவல்*...

அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே
501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே
506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே
507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே !

என்று அகவல் என்னும் வரிகளின் மூலம் நமக்குத் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்

நாம் பெற வேண்டுவது அருள்.அதுதான் எல்லாம் செய்ய வல்ல வல்லபம் எனபதாகும்.

அருள் பெறுவதற்கு எவை எல்லாம் தடையாக இருக்கின்றதோ அவைகளை எல்லாம் விட்டால்தான் பெற முடியும்..

அன்புடன் ஈரோடு கதிர்வேல்
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு