ஞாயிறு, 30 ஜூலை, 2017

சுகம் எனைப்போல் பெறுவீர்!*

*சுகம் எனைப்போல் பெறுவீர்!*

ஆன்மநேய அன்பு உடன் பிறப்புகளுக்கு அன்பான வந்தனம்...

மனித வாழ்க்கை என்பது கிடைப்பதற்கு அறிய வாழ்க்கை என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த பிறப்பினால் அடையத் தக்க உண்மையான ஆன்ம லாபம்.ஆன்ம சுகம் என்ன என்பது தெரியாமல் ஆட்டு மந்தைகள் போல்.அலைந்து உண்ணுதற்கும்  உறங்குதற்கும் உணர்ந்து உலகம் எல்லாம் காண முடியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

அதற்கு மேல் பெண் சுகம்.பொன் சுகம்.மண் சுகம் பெற்று வாழ்ந்து வருகின்றோம் இவை யாவும் நிரந்தர சுகமா என்றால் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அதற்குமேல் பட்டம்.பதவி.ஆட்சி.அதிகாரம்.புகழ் பெற்று வாழ்கின்றோம் இதுவும் நிரந்தரமா ? நிரந்தர சுகத்தை தருகிறதா என்றால் இல்லை என்பதும் தெரியும்.

 எவ்வளவு வசதி வாய்ப்புக்கள புகழ்்உற்றவர்கள்.பெற்றவர்கள் மற்றவர்கள் எல்லாமும். இருந்தும்  இறுதியில் நோய்வாய் பட்டு உடல் தளர்ந்து .உள்ளம் தளர்ந்து மனம் கசந்து .பேச முடியாமல் .நடக்க முடியாமல்.மலம் ஜலம் படுக்கையிலே கழிந்து துர்நாற்றம் முகர்ந்து தாங்கிக் கொள்ள முடியாமல்... உடம்பு ஒத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது. உடம்பை விட்டு உயிர் பிரிந்து மரணம் வந்து விடுகின்றது.

பின் எதுவுமே தெரியாது தெரிவதில்லை.உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிந்து விடுகின்றது.

இதுவா? சுகமான மனித வாழ்க்கை..

இதற்காகவா உயர்ந்த அறிவு உள்ள மனித தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டது.

*பொய் சுகத்தை விட்டு என்றும் அழியாத மெய்ச் சுகம் அடைந்து அனுபவிக்க வேண்டும்.*

சமய மதங்கள் யாவும் பொய்ச் சுகத்தைக் காட்டி மக்களைத் தாறுமாறாக அழித்துக் கொண்டு உள்ளது.அதனால் தான் சாதியும்.மதமும்.சமயமும் பொய் என்றார் வள்ளலார்.

நான் மெய்ச் சுகத்தை அனுபவிக்கும் வழியைக் கண்டு கொண்டேன் .மெய்ச் சுகத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன் ..மெய்ச் சுகத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளேன்

நீங்களும் அப்படியே வாழ வேண்டும் என்ற பெருங் கருணையினால் அழைக்கின்றேன் வாருங்கள் என்று தயவினால் அன்பினால்.கருணையினால் வள்ளலார் அழைக்கின்றார்....

வள்ளலார் பாடல் !

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்

அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்

கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கேகாணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்

இடைந்தொருசார் அலையாதீர் *சுகம்எனைப்போல் பெறுவீர்*யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்

உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியாஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.!

என்று தெளிவு படுத்தி அழைக்கின்றார்.

நமது உயிர் தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே.பூரண அருளைப் பெற்று என்றும் அழியாத பேரின்பமான மெய்ச் சுகத்தை அனுபவித்து.மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்..

எனவே சாதி .சமய.மதம் என்ற சாக்கடையில் விழாமல் உண்மை அறிந்து உணர்ந்து .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க உண்மை நெறியை பின்பற்றி ஒழுக்கத்துடன் வாழ்ந்து *மெய்ச் சுகத்தை* அனுபவிப்போம்..

வாரீர் வாரீர் வாரீர்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு