சனி, 15 ஜூலை, 2017

உயர்ந்த உறவு !

உயர்ந்த உறவு !

கணவன் மனைவி உறவு !

கணவன் மனைவி உறவு இன்று சுதந்திரமாக உள்ளது.

யாரும் யாருக்கும் பயப்படுவதில்லை.அடிமைத்தனம் இல்லை.கோபம் கொள்வதில்லை.எதிர்பார்ப்புக்கள் இல்லை.   கண்டிப்புக்கள் இல்லை. கவலைகள் இல்லை.

பணம் சம்பாதிக்க நல்ல தொழில்கள் இருக்கு.

கைநிறைய. பை நிறைய பணம் இருக்கு.எங்கு செல்ல வேண்டுமானாலும் வண்டி வாகனங்கள் இருக்கு.

நட்பு கொள்ள ஆணுக்கு பெண்ணும்.பெண்ணுக்கு ஆணும் நிறைந்து இருக்கு.

தேர்வு செய்ய நல்ல மனம் இருக்கு.

தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இருக்கு.பேஸ்புக் இருக்கு.டிவிட்டர் இருக்கு.வாய்ஸ் ரிக்கார்டு இருக்கு .வீடியோ இருக்கு.

சந்திக்க நிறைய மால் இருக்கு.பீச்சு  இருக்கு. பார்க் இருக்கு.சினிமா தியேட்டர் இருக்கு.இன்னும் நிறைய இடம் இருக்கு.

சந்தித்து பேச பழக நல்ல மனம் இருக்கு.

வீட்டில் ஒவ்வொரு ரூமிலும் TV.இருக்கு.

தனித்தனி பெட்ரூம் இருக்கு.

விரும்பினால் சேர்ந்து படுக்கலாம்.இல்லையேல் பிரிந்து படுக்கலாம்.

விரும்பினால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் வேண்டாம் என்றால் நிறுத்திக் கொள்ளலாம்.

விரும்பினால் சேர்ந்து வாழலாம்.இல்லையேல் பிரிந்து வாழலாம்.

இதைவிட சுதந்திரம் கணவன் மனைவிக்கு வேறு என்ன வேண்டும்.

சட்டத்திலும் நல்ல வசதி இருக்கிறது.  எல்லா சுதந்தரமும் இவ்வுலகில் சிரம்ம் இல்லாமல் கிடைக்க  வசதி வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

காலம் கடந்து இளமை தொலைந்து. வயது முதிர்ந்து பிணிகள் தொடர்ந்து துன்பம் நிறைந்து. மரணத்தை எதிர்கொள்ளும் போது உங்கள் சுதந்தரம் எங்கு தேடினாலும் கிடைக்காது.

இதுதான் வாழ்க்கையா  ? இதற்கு மேலும் ஒரு சிறந்த வாழ்க்கை உண்டு.சிறந்த உறவு உண்டு என்பதை ஆணும் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவைதான்  இறைவன் உறவு.இறைவனைக் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் பெண்கள் குணம்.பெண் தன்மை உடையவர்கள் இறைவன் மட்டுமே ஆண் தன்மை ஆண்மை குணம் உடையவர்.

இறைவன் உறவால் கிடைப்பதுதான் அருள்.

அருளால் கிடைப்பதுவே நிலையான இன்பம்.

வள்ளலார் பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவேமெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலேசெய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.

என்று வள்ளலார் உலக மக்களுக்கு அழைப்பு விடுகின்றார்.

உலகில் வாழும் எவ்வளவு உயர்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

மரணம் வந்தால் எல்லாம் அழிந்துபோகும்.

 நரை.திரை.பிணி.மூப்பு பயம்.துன்பம் இல்லாமல் மரணம் அடையாமல் உடம்பை விட்டு உயிர் பிரியாமல் வாழும் வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை யாகும்.அழியாத பேரின்ப வாழ்க்கையாகும்.

அந்த சுவையை சுவைத்து இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே தெரியும்

அந்த இன்பத்தை வெளியில் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அந்த வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் கலைக்குப் பெயர் தான் சாகாக்கலை என்றும் சாகாக்கல்வி என்றும் பெயர் வைத்து உள்ளார் வள்ளலார்.

அந்த கல்வியின் வழிமுறைகளை திருஅருட்பா ஆறாம் திருமுறையில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .

பாடல்களாகவும்.உரைநடைப் பகுதிகளாகவும் உள்ளன.

தகுந்த நம்பிக்கை உள்ள சுத்த சன்மார்க்கிகளின்.வாழ்க்கைத் தரத்தை அறிந்து உணர்ந்து.அவர்களின் துணை கொண்டு கற்று தெளிவு அடைந்து .பின் தன் சொந்த ஒழுக்க நெறியில் நின்று.ஆன்ம அறிவை துணைக் கொண்டு இறை அருளைப் பெற்று அனுபவத்தால் வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

பொருள் வாழ்க்கை நிரந்தரம் அல்ல !

அருள் வாழ்க்கையே நிரந்தரம் !

அருள் வாழ்க்கைதான் இறைவனின் சட்டம்
இறை சட்டத்தை மீறினால் மரணம் நிச்சயம்.

பாவத்தின் சம்பளம் மரணம் !

இரை தேடும் மனிதர்களே ! இறையைத் தேடுங்கள் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

கடவுள் ஒருவரே ! அவரேம அருட்பெரும்ஜோதி ஆண்டவர்!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு