சனி, 10 டிசம்பர், 2016

பொருள் ஆட்சியா ? அருள் ஆட்சியா ?

ஆன்ம நேயம் கொண்ட  அன்பு உள்ளங்களே வந்தனம் !

நாம் அனைவரும் எதை ஆள வேண்டும் ,எதை ஆட்சி செய்ய வேண்டும் .

பெண்ணையும் ,பொன்னையும் ,மண்ணையும் ஆண்களையும் ,பற்றிக் கொண்டு ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து அழிந்து கொண்டு உள்ளோம்.

அழியும் பொருள்கள் மீது பற்று வைத்ததால் நாமும் அழிந்து போகின்றோம் .

நாம் அழியாமல் நமக்கு நரை திரை மூப்பு பிணி  மரணம் வராமல் இருக்க வேண்டும் என்றால் , அழியாத பொருள் மீது பற்று வைக்க வேண்டும் ,அழியாத பொருளை ஆட்சி செய்ய வேண்டும் ,அதுதான் உண்மையான ஆட்சி அதிகாரம் என்பதாகும் ,

அழியாதது எது ?

அதுதான் உயிர் , ஆன்மா ,அருள் என்பதாகும் ,இதுதான் அழியாதது ,இவை மூன்றும் நம் உடம்பில் உள்ளது , இவைகளைப் பாதுகாக்க வேண்டும் .இவைகள் தான் இறைவன் இருக்கும் இடங்களாகும் ,இவைகள் ஏன் உடம்பை விட்டு சென்று விடுகிறது .

அழியும் பொருள் மீது பற்று வைத்து ஆட்சி செய்வதால் அழியாத பொருள்கள் நம்மைவிட்டு சென்று விடுகின்றன,அழியாத பொருள்களான  அருள், ஆன்மா,, உயிர் மூன்றும் நம்மை விட்டு சென்று விடுவதால் அதற்கு மரணம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது ,

பொருள் மீது பற்று வைத்து ஆட்சி செய்பவர்கள் ் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணம் வந்தே தீரும் ,மரணம் என்பது அவரவர் செய்கைக்கு தகுந்தாற் போல் வரும் ,

அழியாத பொருளகள் அனைத்து உயிர் உள்ள  உடம்புகளிலும் உள்ளது .அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் ஒருவருக்கும் தெரியவில்லை, அவற்றைத் தெரிந்த பெரியோரும் இல்லை ,அதனால் மரணம் என்பது இயற்கை என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள் , அனைவருக்கும் மரணம் வந்து கொண்டே இருப்பதால், நாமும் மரணம் என்பது இயற்கை என்று நம்பிக்கைக் கொண்டும் அழிந்து கொண்டும்  உள்ளோம் ,

நமது அருட்தந்தை வள்ளலார் வந்து தான் உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ,

அறிவு இருந்தும் அறிவுக்கு வேலைக் கொடுக்காமல்_அறிவு தெளிவு இல்லாமல்  வாழுகின்ற மனிதர்களைப பார்த்து வேதனைப் படுகின்றார் .

மரணம் என்பது இயற்கை அல்ல ! அவை செயற்கையால் தான் வருகின்றன என்று பகிரங்கமாக சொல்லி உள்ளார் ,

மனிதனாக பிறப்பு எடுத்தவர்களுக்கு மரணம் வரக்கூடாது ,

தப்பாலே சகத்தவர்  சாவே துணிந்தார் என்றும் ,தவறு செய்வதால்தான் ஒவ்வொருக்கும்  மரணம் வந்து கொண்டே உள்ளது என்கிறார் ,

மரணத்தை வெல்ல முடியும் என்பதை மக்கள் அறிந்து தெரிந்து புரிந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக ,தான் வாழ்ந்து மரணத்தை வென்று மக்களுக்கு புரியும்படி  காட்டினார் ,

நம் தமிழ் நாட்டில் உள்ள மருதூரில்  பிறந்து சென்னையில் வாழ்ந்து ,வடலூர் சென்று 51.வயதில் மரணத்தை வென்று காட்டினார் ,நாம் இன்னும் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம் , இவரைப் போல் வெளிநாட்டில் யாராவது வாழ்ந்து இருந்தால் உலகம் முழுவதும் பரவி இருக்கும் .

அழிந்து போகும் மனிதர்களின் பேச்சைக் கேட்டு  பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்கள்  பின்னால் ஆட்டு மந்தைகள் போல் சுற்றி சுற்றி வீணே  அழிந்து கொண்டு உள்ளோம் , மாண்டு கொண்டே உள்ளோம் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

உடம்பு வரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர்

மனத்தைவசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்நண்ணியது

 நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

 என்னும் பாடலின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் ,

பாவம் செய்தவர்கள் மரணம் அடைவார்கள் !

புண்ணியம் செய்தவர்கள் மரணத்தை வெல்வார்கள் :

மரணம் அடைகின்றவர்கள் அனைவரும் ஏழைகள் !

மரணம் அடையாதவர்களே செல்வந்தர்கள் !

அழியும் பொருள் செல்வந்தர்கள் அல்ல !என்றும் அழியாத அருள் செலவந்தர்கள் .

பொருளை ஆட்சி செய்பவர்கள் கோமாளிகள் !

அருளை ஆட்சி செய்பவர்களே அறிவாளிகள் .

எனவே அன்பு உள்ளங்களே ! இறை  அருளைப் பெற்று என்றும் அழியாமல் மகிழ்ச்சியுடன்  வாழும் வழியைத் தெரிந்து கொள்ள வடலூருக்கு வாருங்கள் என்று வள்ளலார் அழைக்கின்றார் ,

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே

வந்தால் பெறலாம் நல்ல வரமே !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு