புதன், 7 டிசம்பர், 2016

உயிர் காப்பான் நண்பர் என்பது தவறு !

உயிர் காப்பான்  நண்பர் என்பது தவறு !
உயிர் கொடுப்பான்,உயிர் காப்பான்  நண்பர் என்பது எல்லாம் பொய்யானது ,
ஒருவருடைய நல்லதும் கெட்டதும்,நன்மையையும் தீமையும் நண்பருக்கு மட்டுமே தெரியும்..அவருடைய அந்தரங்க ரகசியங்களை எல்லாம் நம்பிக்கை உள்ள நண்பனிடம் பகிர்ந்து கொள்வது தான் நம்பிக்கையின் அடையாளம்.
அதே நேரம் ஒவ்வொரு நண்பனுக்கும் எதிரி நண்பன்தான் .நண்பன் எதிரி ஆகி விட்டால் தப்பிப்பதே கடினம் .எனவே யாராக இருந்தாலும் சில உண்மைகளை நண்பனிடம் சொல்லவே கூடாது..பழகுவதற்கும் பொழுது போவதற்கும் மட்டுமே நண்பர்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.அந்தரங்க விஷயங்களை நண்பனிடம் சொல்லி வைக்கவே கூடாது.
நண்பன் உயிரைக் காப்பாற்றவே மாட்டான் நேரம் வரும்போது உயிரை வாங்குபவனும் நண்பன் தான்.ஆணாக இருந்தாலும் ,பெண்ணாக இருந்தாலும் நட்பு என்பது எல்லையைக் கடந்து போய் விடக் கூடாது .
எனவே முக்கியமான ரகசியங்களை யாரிடமும் சொல்லி பாது காப்பது அறியாமையாகும்...தன்னுடைய முடிவை தானே எடுப்பது புத்தி சாலித்தனமாகும்,அதுதான் அறிவின் தன்மையாகும்.
உலகில் உள்ள அறிவாளிகளின் வாழ்க்கையைப் பாருங்கள் நண்பனால் அழிந்தவர்கள் தான் அதிகம்.
எனவே வள்ளலார் சொல்லுவார் .
உற்றவரும்,பெற்றவரும் ,மற்றவரும் உடமைகளும்,உலகியலும் உற்ற துணை அன்றே என்பார் .உற்றத் துணை யார் ? என்றால் நம்முடைய உயிரும் ஆன்மாவும்,இறைவனும் மட்டுமே என்பதை புரிந்து கொண்டு வாழ்வதுதான் அறிவாளிகளின் தன்மையாகும் ..
எனவே நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும்.
அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு